சென்னை, கோடம்பாக்கம் புலியூர் பகுதியில் அமைந் திருக்கும் ஒரு வீட்டில் கேக் வெட்டி கொண்டாடப் படுகிறது. நேற்று(12-05-2017) பன்னி ரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி யிருந்தது.
அந்த தெருவில் வசிக்கும் தாரிகா பானு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றி ருந்தார். அவர் தேர்ச்சி பெற்றதை, எதிர் வீட்டில் இருக்கும் அவரது தோழி வீட்டில் அனைவரும் கேக் வெட்டி கொண் டாடினர்.
அந்த தெருவைச் சேர்ந்த சிலரும் அங்கு கூடியி ருந்தனர். அதற்கு காரணம் தேர்ச்சி பெற்ற தாரிகா பானு ஒரு திருநங்கை.
பல சிரமங் களுக்கு மத்தியில் அவர் பன்னி ரெண்டாம் வகுப்பை முடித்தி ருக்கிறார். இந்தியாவில், திருநங்கை அடை யாளத்தில் பள்ளிப் படிப்பை முடிக்கும் முதல் நபரும் இவரே.
தூத்துக்குடி மாவட்டம் வல்ல நாட்டிற்கு அருகில் உள்ள ஒரு கிராம த்தைச் சேர்ந்தவர் தாரிகா பானு. ஆணாக பிறந்த, தாரிகாவுக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் சமயத்தில் பெண்ணுக் கான உணர்வுகள் மேலோங்கி யுள்ளன.
அந்த உணர் வுகளை வெளிப் படுத்த முடியாமல், அந்த உணர்வு களுக்கான காரணங் களும் தெரியாமல் தவித்துள்ளார். 2014-ம் ஆண்டு 11-ம் வகுப்பு படிக்கும் வரையில் ஆணாகவே பள்ளிப் பருவத்தை கழித் துள்ளார்.
தாரிகாவை, கிரேஸ்பானு (கிரேஸ்பானு, திருநங்கை களுக்கான உரிமை களுக்காக போராடி வருபவர்) என்ற திருநங்கை தூத்துக் குடியில் ஒரு பேருந்தில் வைத்து பார்த் துள்ளார்.
அப்போது, தாரிகாவிடம் பெண்ணுடைய குணாதியசம் வெளி ப்படவே கிரேஸ் அவரிடம் பேசி யுள்ளார்.
தன் வேதனை களை சொல்வதற்கு ஆள் இல்லாமல் தவித்த தாரிகா, கிரேஸிடம் அனை த்தையும் கொட்டித் தீர்த்துள்ளார். அதன் பின்னர் விஷயம் தாரிகாவின் வீட்டிற்கு தெரிய வருகிறது.
தாரிகாவிற்கு என்று ஏதும் புதிதாக நடந்திருக்க வில்லை. எல்லாரையும் போல தாரிகா, வீட்டி லிருந்து விரட்டப் படுகிறார். தாரிகா, கிரேஸிடம் அடைக்கல மாகிறார். அவரை தாயாக ஏற்றுக் கொள்கிறார்.
கிரேஸ் பானு அவரை மகளாக பார்த்துக் கொள்கிறார் இன்று வரையில். தாரிகா, ’நான் படிக்க வேண்டும் அம்மா’ என்று கிரேஸிடம் கேட்டிரு க்கிறார்.
உடனே கிரேஸ் அதற்கான நடவடி க்கையை தொடங்க அவருடைய முயற்சி அனைத் திற்கும் முட்டுக் கட்டை. பள்ளிகள் அனைத்தும்
கதவு களை இழுத்து மூடி விட்டன. கிரேஸ்க்கு இது ஒன்றும் புதிதல்ல. அதனால் அவர் சளைத்து விடவும் இல்லை.
நேராக திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலகம் வாசலில் ’திருநங்கை யருக்கு கல்வி கொடு’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் உட்கார்ந்து விட்டார்.
அதனை யடுத்து முதன்மை கல்வி அலுவலர் அனுமதி வழங்கவே, அம்பத்தூர், காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தாரிகா பானு அறிவியல் பிரிவில் சேர்ந்தார்.
அவர் காலடி எடுத்து வைத்தது பள்ளியில் மட்டு மல்ல, சமூக விடுதலையை நோக்கிய பயண த்திலும் தான்.
அந்தப் பள்ளி அவருக்கு அருமை யான உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்தது. நல்ல நண்ப ர்களும், பாகுபாடு இல்லாமல் பழகும் ஆசிரியையும் கொடுத்தது.
தாரிகா, கிரேஸ் பானுவிற்கு அடுத்த படியாக அவருடைய இயற்பியல் ஆசிரியர் செல்வத்தை முக்கிய நபராக பார்க்கிறார். அந்த அளவிற்கு அவர், தாரிகா விற்கு நிறைய உதவி களைச் செய்துள்ளார்.
தாரிகா தனது பள்ளி நண்பர் களுடன் சேர்ந்து டியூசன் செல்வாராம். அவருடைய பள்ளிச் சூழலில் திருநங்கை என்ற பாகுபாடு இல்லாத ஒரு நல்லச் சூழல் அவருக்கு கிடைத் திருந்தது.
இந்தமுறை பன்னி ரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற ஒரே ஒரு திருநங்கை என்ற வரலாற்றுச் சிறப்பை அடைந் துள்ளார். அதனால் தாரிகாவின் நம்பிக்கை இன்னும் இரட்டிப் பாகி இருக்கிறது.
அவர், நான் எப்படியும் மருத்துவ ராகி விடுவேன் என்று உறுதியுடன் கூறுகிறார், தாய் கிரேஸ் பானுவின் முகத்தைப் பார்த்த படியே. கிரேஸ் பானுவின் முகத்தில் ஒரு பெருமிதம் மிளிர்கிறது.
கிரேஸ் பானுவின் கூட்டிற்குள் அடைக் கலமாகி இருப்பது தாரிகா மட்டுமல்ல... ரேணுகா பானு, அகிதா பானு, ரெஜினா பானு ஆகியோ ருக்கும் கிரேஸ் தான் தாயாக இருந்து வருகிறார்.
(ரேணுகா தனியார் மருத்துவ மனையிலும், ரெஜினா உணவு விடுதியிலும் வேலை பார்க் கின்றனர். அவர்களும் பொறியியல் படிப்பை முடித்த வர்கள்) கிரேஸ்பானு
நீண்ட காலமாக திருநங்கை களின் உரிமை களுக்காக போராடி வருபவர். இந்தியாவி லேயே திருநங்கைகள் அடை யாளத்தில் பொறியியல் பட்டப் படிப்பை முடித்த முதல் நபர் ஆவர்.
திரு நங்கைகள் இடஒதுக் கீட்டிற்காக தொடர்ச்சி யாக போராடி வருகிறார். ஒரு பெரும் போராட்ட த்தின் மூலமாவது, தாரிகா விற்கு மருத்துவப் படிப்பிற்கு இடம் வாங்கி கொடுப்பேன்’ என்று உறுதியாக கூறுகிறார்.
ஆம்... இது பானுவின் குடும்பம்... அவர்கள் கார்ல் மார்க்ஸையும், அம்பேத் கரையும் படிக்கி றார்கள். அவர்களது பாதையில் உறுதியாக பயணிக் கிறார்கள்.
ஒரு சமூகத்தின் விடுதலையை நோக்கி... இந்த சென்னை பெரு நகரத்தின் மத்தியப் பகுதியில் வாழ்கி றார்கள். கோடம் பாக்கத்தில் புலியூர் பகுதியில் முதல் தளத்தில் இருக்கும் ஒரு வீட்டில் வசிக்கின்றனர்.
இரு அறைகளை கொண்ட அந்த வீடு ஒழுங்காக பராமரிக்கப் படுகிறது. துணிகள் களைந்து கிடப்பதோ, பொருட்கள் நிறைந்து இருப்பதோ என்று இல்லை.. இரு அறை களிலும் தேவை யான அளவிற்கு இடங்கள் இருக்கின்றன.
அந்த அறைகளுக் குள்ளே இரண்டு முயல்கள் துள்ளிக் குதித்துக் விளை யாண்டுக் கொண்டிருக் கின்றன. அந்த முயல்கள் அவர்கள் மடிமீதும் ஏறிஅமர் கின்றன.
அம்பேத்கர் படம் கொண்ட நாள் காட்டி ஒன்று சுவறில் தொங்குகிறது. ஜன்னலை ஒட்டிய சுவரில் விகடன் நம்பிக்கை விருது உள்பட பல சமூக அமைப்பு களால் வழங்கப் பட்ட விருதுகள் நிறைந்தி ருக்கின்றன.
இதுதான் பானுக்கள் வாழும் வீடு. அந்த விருதுகள் அனைத்தும் கிரேஸ் பானுவிற்கு வழங்கப் பட்ட விருதுகள்... அவருடைய இடையறாத பணிக்கு கிடைத்த அங்கீ காரங்கள்...
கிரேஸ் பானுவின் பாதையில் தாரிகா பானு பயணிக்கிறார்... இன்னும் அந்தப் பாதையில் ஏராளமான பானுக்கள் பயணிக் கட்டும்..