இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு விதித்த தடைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
மத்திய அரசு மாடுகளை விற்பனை செய்வதற்கு பல்வேறு கட்டுப் பாடுகளை கடந்த மே 23ஆம் தேதியன்று விதித்தது.
இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்க றிஞரும் செயல் பாட்டாளரு மான எஸ். செல்வ கோமதி என்பவர் மத்திய அரசு கொண்டு வந்த
கால்நடை விற்பனை குறித்த அறிவிப்பை எதிர்த்து பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்ற த்தின் மதுரைக் கிளையில் தொடர்ந்தார்.
இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டு மென அவரது வழக்கறிஞர் அஜ்மல் கான் கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கை நீதிபதிகள் முரளிதரன், சி.வி. கார்த்திகேயன் அடங்கிய அமர்வு விசாரித்தது. எந்த மதத்தைச் சேர்ந்தவ ர்களும் அவர்க ளுடைய மத வழக்கப் படி மிருகங் களைக் கொல்வது
குற்ற மல்ல என மிருக வதைத் தடைச் சட்டத்தின் 28வது பிரிவு கூறியி ருப்பதைச் சுட்டிக் காட்டி இந்த வழக்கை அவர் தொடர்ந்திருந்தார்.
மேலும், மிருகங் களை கொல் வதையோ, கொல்வ தற்காக விற்பனை செய் வதையோ மிருக வதைத் தடைச் சட்டம் தடை செய்யாத நிலையில்,
அரசு தனக்கு உள்ள அதிகார த்தைப் பயன் படுத்தி இறைச்சிக் காக மாடுகளை விற்பதைத் தடை செய்யக் கூடாது என்று தனது மனுவில் கூறி யிருந்தார்.
மத்திய அரசின் இந்த விதிமுறை, அரசியல் சாசன த்தின் 25வது பிரிவு வழங்கி யுள்ள மத சுதந்திரத் திற்கு எதிரானது என்று அவர் தனது மனுவில் கூறியி ருந்தார்.
இந்த மனு செவ்வாய்க் கிழமை யன்று பிற்பகலில் விசாரிக்கப் பட்டது. மத்திய அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கால் நடைகளைப் பாது காக்கவே இந்த விதி கொண்டு வரப்பட் டிருப்பதா கவும்,
இது தொடர் பாக விரிவான பதிலைத் தாக்கல் செய்ய தகுந்த அவகாசம் வழங்காமல் இடைக்கால உத்தரவு எதையும் நீதிமன்றம் வழங்கக் கூடாது என்றும் கூறினார்.
இதை யடுத்து, மத்திய, மாநில அரசுகள் இது தொடர் பாக தங்கள் பதிலை நான்கு வாரங் களுக்குள் தாக்கல் செய்ய வேண்டு மெனக் கூறி மத்திய அரசின் உத்தர வுக்கு இடைக் காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தர விட்டது.