வாட்ஸ்அப் செயலியில், புதிய சில வசதிகள் சேர்க்கப் பட்டுள்ளன. அதில் அமைக்கப்படும் டெக்ஸ்ட்களில், இனி, அழுத்த மற்றும் சாய்வு என (bold and italic) என டெக்ஸ்ட் எழுத்துகளை வடிவமைக்கலாம்.
எந்த டெக்ஸ்ட்டை அழுத்தமாக (bold) ஆக அமைக்க வேண்டுமோ, அதன் முன்னும் பின்னும் asterisk குறியீட்டினை அமைத்தால் போதும்.
எழுத்துகள் அழுத்தமாகக் காட்சி அளிக்கும். சாய்வான அமைப்பு வேண்டும் என்றால், அதே போல முன்னும் பின்னும் அடியிடைக்கோடு (underscore) அமைக்க வேண்டும்.
இனி உங்களுக்கு நோட்டி பிகேஷன் என்னும் அறிவிப்பு செய்தி வருகையில், அனுப்பியவரின் பெயர் அழுத்தமாக (Bold) ஆகக் காட்டப்படும்.
இதற்கு வாட்ஸ் அப் பதிப்பின் புதிய பதிப்பு (WhatsApp (2.12.535)) பதியப் பட்டு இயக்க த்தில் இருக்க வேண்டும். டாகுமெண்ட் களைப் பகிர்ந்து கொள்வதி லும், வாட்ஸ் அப் செயலி புதிய வசதி களைத் தருகிறது.
கூகுள் ட்ரைவ் மற்றும் மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவ் போல்டர் களில் உள்ள டாகுமெண்ட் களை ஆய்வு செய்து தேர்ந் தெடுக்க, புதியதாக ‘Browse other docs’ என்னும் வசதி ஆப்ஷ னாகத் தரப்படுகிறது.
இவற்றி லிருந்து, PDFs, Docs, Sheets மற்றும் பிற பைல்களைத் தேர்ந்தெடு க்கலாம். இவை அனுப்ப ப்படும் முன்னர், பி.டி.எப்.பைலாக மாற்றப் பட்டு அனுப்ப ப்படும்.
இந்த புதிய வசதிகளை சோதனை முறையில் மேற் கொண்டு பார்க்க, play.google.com/ என்னும் தளம் சென்று, பதிவு செய்து கொள்ள வேண்டும்.