செகண்ட் ஹேன்ட் போன் வாங்கும் போது கவனிக்க வேண்டியது !

எந்த ஸ்மார்ட் போனாக இருந்தாலும், அதனை புதிதாக வாங்கு வதைத் தான் நாம் விரும்புவோம். இருந்தாலும் கூட சில அதிக பட்ஜெட் மொபைல் களை நம்மால் விலை கொடுத்து வாங்க முடியாது. 
செகண்ட் ஹேன்ட் போன் வாங்கும் போது கவனிக்க வேண்டியது !
அந்த சமயங்களில் நம் சாய்ஸ் செகண்ட் ஹேண்ட் மொபைல்ஸ் தான். அதே போல அடிக்கடி மொபைல் களை மாற்று வோருக்கும் 

கைகொடுப்பதும் செகண்ட் ஹேண்ட் மொபைல்ஸ் வாடிக்கை யாளர்கள் தான். இந்த வகை மொபைல் களுக்கு இந்தியா பெரிய சந்தை யாக விளங்குகிறது.

இந்திய அளவில் செகண்ட் ஹேண்ட் மொபைல்ஸ் வாங்கு பவர்களில் டெல்லி முதலிட த்திலும், சென்னை நான்காவது இடத்திலும் இருப்பதாக சமீபத்தில் ஒரு நிறுவனம் தெரிவித் துள்ளது. 

இந்த செகண்ட் ஹேண்ட் மொபைல் போன்களில் நாம் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன எனப் பார்ப்போமா?

1. மொபைல் பாதிப்புகள்:
நம்முடைய போன்கள் எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நாம் வாங்கும் ஸ்மார்ட் போனை, வாங்கு வதற்கு முன்னரே நன்கு சோதித்துப் பார்க்க வேண்டும். 

அப்போது மொபைல் களின் டிஸ்ப்ளே, பேக் கவர், கேமரா என அனைத்து இடங்க ளிலும் ஏதேனும் கீறல்கள், விரிசல்கள் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். 

அதே போல மொபைலின் பேக் கவரை அகற்றி, உள்ளேயும் இதே போல கண்ணில் தென்படக் கூடிய பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.

2. மொபைல் போன் போர்ட்டுகள்:
எப்படி போனின் பாகங்கள் உடையாமல் இருக்கிறது எனப் பார்க்கி றோமோ அதைப் போலவே அவற்றின் செயல் பாடுகளையும் சோதிக்க வேண்டும். 

எனவே ஆடியோ போர்ட், USB போர்ட் ஆகிய வற்றை பரிசோதித்துப் பார்க்க வேண்டும். 

அத்துடன் மொபைலின் பட்டன் களும் உடையாமல் இருக்கிறதா, சரியாக இயங்கு கிறதா என்பதையும் உபயோகித்து பார்க்க வேண்டும்.

3. மொபைல் நம்பகத்தன்மை:

நீங்கள் செகண்ட் ஹேண்டாக வாங்கும் மொபைல் களை நிச்சயம், அதன் ஒரிஜினல் பில்லுடன் வாங்குங்கள். மொபைல் வாங்கிய ரசீது இருந்தால் தான் வாரண்டி யுடன் சர்வீஸ் செய்யவும் எளிதாக இருக்கும்.

4. வாங்கும் இடம்:
உங்கள் மொபைலை நீங்கள் யாரிடம் இருந்து வாங்கு கிறீர்கள் என்பதும் முக்கியம். எனவே இணைய தளங்களில் இருந்து வாங்கும் போது 

கூடுதல் கவனம் தேவை. உங்கள் போனை சரிபார்த்து வாங்கு வதற்காக, நேரிலேயே வாங்குவது என்பதும் மிக நல்லது.

5. இதிலும் கவனம் வேண்டும்!

மொபைல் போன்களை பார்த்து வாங்குவது போலவே அவற்றின் ஏக்சசரீஸ் ஆன சார்ஜர், USB கேபிள், இயர்போன் போன்ற வற்றின் 

உண்மைத் தன்மை யையும் சோதிக்க வேண்டும். இவை போனின் உடன் வந்த ஒரிஜினல் பொருட்கள் என்றால் இன்னும் நல்லது.

6. டச் ஸ்க்ரீன் சோதனை:
ஸ்மார்ட் போன்களின் ஆதாரமே அவற்றின் டச் ஸ்க்ரீன் எனப்படும் தொடு திரைகள் தான். அவற்றை முழுவது மாக சோதிக்க வேண்டும். பார்க்க அழகாக, கீறல்கள் எதுவும் இல்லாமல் இருந்தால் மட்டும் போதாது. 

அவை செயல் படுகிறதா என சோதிக்க மொபைலை உபயோகப் படுத்தி பார்க்க வேண்டும். மொபைல் ஐகான்ஸ், கீ-பேட் டைப்பிங், ஆப்ஸ்களை திறப்பது, 

ஸ்வைப்பிங் வேகம் என அனைத் தையும் செக் செய்து விடுவது நல்லது. சில போன்களில், டச் ஸ்க்ரீன் களின் வேகம் குறைவாக இருக்கும். இது போன்ற பிரச்னைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

7. கேமரா மற்றும் பேட்டரி:

இவை இரண்டுமே ஒரு ஸ்மார்ட் போனின் முக்கிய மான விஷயங்கள். எனவே பேட்டரியை சரி பார்த்து வாங்குவது மிகவும் முக்கியம். பேட்டரியில் இருந்து திரவங்கள் கசிவது, 

பருத்து இருப்பது போன்ற பிரச்னைகள் இருந்தால் அவற்றை தவிர்த்து விடலாம். அதே போல பேட்டரி சார்ஜ் எவ்வளவு நேரம் நிற்கிறது என்பதையும் செக் செய்ய வேண்டும்.
அடுத்தது கேமரா. கேமராவின் வெளிப்புறம் மட்டும் பார்க்காமல், கேமராவை ஆன் செய்து சில புகைப் படங்கள் எடுப்பதன் மூலம் அவற்றின் துல்லியம் மற்றும் தரத்தை நம்மால் கணிக்க முடியும்.

8. விலை மற்றும் தேவை:

செகண்ட் ஹேண்ட் மொபைல்ஸ் வாங்குவதன் முக்கிய நோக்கங் களில் ஒன்றே அவற்றின் விலை தான். 

எனவே மொபைல் மாடல், அவற்றின் தரம், ஏக்சசரீஸ், அதன் சிறப்பம் சங்கள் ஆகிய வற்றைக் கொண்டே அவற்றின் விலையைத் தீர்மானி யுங்கள். 
செகண்ட் ஹேன்ட் போன் வாங்கும் போது கவனிக்க வேண்டியது !
அதே போல மார்க்கெட்டில் வாரந்தோறும் புதுப்புது போன்கள் வந்து கொண்டிருக் கின்றன. எனவே 2 வருடங் களுக்கும் முன்னர் வந்த மாடல் களை தவிர்க்க லாம். 

இணையம் தவிர்த்து நேரடியாக கடைகளில் வாங்குபவர் என்றால், பல கடைகளில் விசாரித்து முடிவெடு க்கலாம்.

அதே போல ஓ.எஸ், கேமரா, சிறப்பம் சங்கள் என நம் தேவைக் கேற்ற மொபைல் களை மாடல்களை வாங்குவது மட்டுமே பயனளிக்கும். 

எனவே விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக தேவையற்ற மொபைல் களை வாங்க வேண்டாம்.
Tags:
Privacy and cookie settings