நடத்துநர் இல்லாத பேருந்து கண்டுபிடிப்பு !

தற்போது புதிய புதிய தொழில் நுட்பங்கள் அனைத்து துறையிலும் வந்து கொண்டிரு க்கின்றன. இந்த கால கட்டத்தில் புதிய தொழில் நுட்பங் களின் தேவையும், 
நடத்துநர் இல்லாத பேருந்து கண்டுபிடிப்பு !
புதிய கண்டு பிடிப்புகளின் அவசியமும் அதிக அளவில் தேவைப் படுகிறது. புதிய கண்டு பிடிப்பு களுக்கு எப்போதும் மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

மனிதன் செய்த வேலை களை இயந்திரம் செய்து வருகிறது. மனித சக்தியைப் பயன் படுத்தாமல் தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தும் காலம் இது. 

இந்நிலை யில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மின்னியல் 

மற்றும் தொடர்பியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி கள் கே.சண்முக பிரியா, பி.சர்மிளாராணி ஆகிய இருவரும் இணைந்து நடத்துநர் இல்லா பேருந்தினை கண்டு பிடித்துள் ளார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் அறிவியல் கழகம், திருநெல்வேலி அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து 
கல்லூரி மாணவர் களின் திறனை வளர்க்கும் பொருட்டு, புதிய கண்டு பிடிப்புகளுக் கான மாதிரி வடிவமைப்பு போட்டியை நடத்தின.

இதில் தமிழக த்தில் உள்ள பல பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 1500 பேர் (அனைத்துத் துறை யினரும்) இணைய தளம் மூலம் 

தங்களது புதிய கண்டு பிடிப்பின் மாதிரி வடிவமைப்பு களை அனுப்பி போட்டியில் கலந்து கொண்டனர். இதில் 50 மாதிரி வடிவமைப்பு களை, வடிவமைத் தவர்களை போட்டிக்கு அழைத்தனர்.

திருநெல்வேலி அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில், மாணவர்கள் தங்களது புதிய கண்டு பிடிப்பின் மாதிரி வடிமைப்பு களைக் காட்சிப் படுத்தினர்.

இதில் சிவகாசி பி.எஸ்.ஆர்.கல்லூரி மாணவிகள் கண்டுபிடித்திருந்த நடத்துநர் இல்லா பேருந்து மூன்றாவது பரிசினைப் பெற்றது.
இந்த வடி வமைப்பு குறித்து இரு மாணவிகள் கூறிய தாவது:

பேருந்து பயணி களிடம் ரேடியோ அதிர்வெண் அடையாள அட்டை இருக்கும். இந்த அடையாள அட்டையில் பயணியின் பெயர், முகவரி, கைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். 

இந்த அட்டைக்கு நாம் கைபேசிக்கு ரீசார்ஜ் செய்வது போல பேருந்து நிறுவனங் களில் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

பயணிகள் பேருந்தில் ஏறியதும், பேருந்தில் பொருத்தப் பட்டிருக்கும் ரேடியோ அதிர்வெண் அட்டை யில் பதிவாகி யுள்ள விவரங் களை வாசிக்கும் கருவியில் தேய்த்து, 

எந்த இடத்திற்கு பயணம் செய்ய வேண்டும் என்பது குறித்த பட்டனை அழுத்த வேண்டும். இதை யடுத்து பயணிகளின் அட்டை யிலிருந்து தேவையான கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும். 
இதற்கு பேருந்து ஓட்டுநர் அருகே பாதுகாப்பான இடத்தில் 9 வோட் மின்மாற்றி, அல்லது பேட்டரி, மைக்ரோ கண்ட்ரோலர், ஐ.சி.ஆர்.ஜிப், டிஸ்பிளே உள்ளிட்டவை கொண்ட வற்றை அமைக்க வேண்டும்.

இதில் உள்ள மென்பொருள் மூலம் இயக்கப்படும். இதன் மூலம் ஓட்டுநர் பயணி இறங்க உள்ள இடத்தினை டிஸ்பிளே மூலம் தெரிந்து கொள்வார். 

மேலும் பேருந்தில் படிக்கட்டு பயணம் செய்தால் ஐ.சி.ஆர்.கருவி மற்றும் சென்சார்கள் மூலம் 

பேருந்து இஞ்சின் வேகம் குறைந்து பேருந்து தானாகவே நின்று விடும். பயணி படிக்கட்டி லிருந்து பேருந்தினுள் வந்தால் மட்டுமே பேருந்து இயங்கும். 

பொதுவாக பேருந்துகளில் 10 மீட்டர் இடைவெளி விட்டு வரவும் என எழுதப் பட்டிருக்கும். இதனைக் கடைப் பிடிக்க பேருந்தில் ஒலி எழுப்பும் கருவி பொருத்தலாம்.
அல்ட்ரா சோனிக் சென்சார்கள் மூலம் 10 மீட்டர் தூரத்துக்குள் பேருந்து சென்றால் வேகம் குறைந்து விடும். நாங்கள் கண்டு பிடித்தி ருக்கும் இந்த கருவி பேருந்து பயணத் தினை மிகவும் பாதுகாப்பாக்கி விடும். 

எங்கள் கண்டு பிடிப்புக்கு மூன்றாம் பரிசு கிடைத் தமைக்கு எங்கள் வழிகாட்டி பேராசிரியர் டி.ரூபா, தாளாளர் ஆர். சோலைச்சாமி உள்ளிட்டோர் பாராட்டி னார்கள்' என்றனர். - எஸ்.பால சுந்தரராஜ்
Tags:
Privacy and cookie settings