இது ஏறத்தாழ ஆறு தசாப்தங் களுக்கு முன் நடந்த சம்பவம். ஒல்லி யான தேகம் கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர் காணலுக்குச் செல்கிறார்.
நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங் களிலேயே அவருக்கு அந்தக் கல்லூரி யில் சேர்வதற் கான வாய்ப்பு மறுக்கப் படுகிறது.
அதற்குக் கூறப் பட்ட காரணம், “நீங்கள் இந்தி வழியில் கற்றவர்” என்பது தான். அந்த இளைஞர் பதற்றப் படாமல் சொல்கிறார், “ஓ, அப்படியா...
சரி நீங்கள் எனக்கு வாய்ப்பு மறுக்கும் காரண த்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக் கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்கிறேன்.
நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டது என்று கூறுகிறேன். பன்மைத்துவ மான ஒரு தேசத்தில், ஒருவனு க்குத் தன் தாய் மொழியில் படிக்க உரிமை யில்லையா...?
என்று ஜனாதிபதி யிடம் கேட்கிறேன்.” என்கிறார். தேர்வுக் குழு வாயடை த்துப் போகிறது. அவரது கேள்வியில் உள்ள நியாயம் புரிந்து இப்போது அந்த மாண வனைக் கல்லூரியில் சேர்த்துக் கொள்கிறது.
அந்த மாணவர் இந்தியாவின் முக்கிய மான கல்வி செயற் பாட்டாள ரான பேராசிரியர் அனில் சடகோபால்.
தற்போது அனில் சடகோபால் இந்தியா முழுவதும் பயணித்து நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
சென்னைக்கு இன்று (22-05-17) நீட் தேர்வு சம்பந்த மாக பொது ப்பள்ளிக் கான மாநில மேடை ஒருங்கி ணைத்த ஒரு கூட்டத் துக்கு வந்தவரிடம் பேசினோம்.
''ஒரு கல்வி யாளராக இருந்து கொண்டு ஏன் நீட் தேர்வை எதிர்க்கி றீர்கள்... நம் கல்வித் துறை மேம்பட வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம் இல்லையா...?''
''நான் கல்வி யாளர், பேராசிரியர் என்பதனால் தான் நீட் தேர்வை எதிர்க் கிறேன்.
நீட் தேர்வினால் கல்வித் தரம் மேம்படும் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. சொல்லப் போனால், நீட் தேர்வு இந்திய அரசியல மைப்புச் சட்டத் துக்கே எதிரானது.''
''எப்படிச் சொல்கிறீர்கள்...?''
''அரசியல மைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பத்தியும் சமூக நீதியையும், சமத்துவ த்தையும் பரிந்துரை க்கிறது. ஆனால், இந்த நீட் தேர்வு, அதற்கு நேரெதிராக இருக்கிறது. இந்தியா என்பது ஒற்றைத் தேசம் கிடையாது.
அது, பல்வேறு தேசிய இனங்கள் வாழும் மாநிலங் களின் தொகுப்பு. பல்வேறு தேசிய இனங் களின் மாணவர் களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது சுத்த அயோக்கியத் தனம்.
எப்படி எதுவும் இது வரை சேராமல் இருக்கும் வட கிழக்கு மாணவனும், எல்லா செளகர்யங் களையும் பெற்ற டெல்லி மாணவனும் போட்டி போடுவான்.
இருவரு க்கும் ஒரே தேர்வு என்பது மக்களை மடையர்கள் ஆக்கும் வேலை இல்லையா? அது மட்டு மல்ல, புதிய கல்விக் கொள்கையை மக்கள் மன்றத்தில் வைக்காமல்,
அதில் உள்ள ஷரத்களை ஒவ்வொன் றாக நிறை வேற்றும் வேலையைத் தான் இந்திய அரசாங் கங்கள் செய்து வருகின்றன. அதில் ஒரு பகுதிதான் இந்த நீட் தேர்வு.''
''சரி... அப்படி யானால் இன்னும் அதே பழைய கல்விக் கொள்கையைத் தான் தொங்கிக் கொண்டு இருக்க வேண்டுமா... காலத்து க்கு ஏற்றாற் போல் புதிய கல்விக் கொள்கை வேண்டாமா...?''
''கண்டிப் பாக மாற வேண்டும். நிறுவனங்க ளின் நலனுக் கானதாக இல்லாமல், நம் மாணவர் களின் நலனுக் கானதாக இருக்க வேண்டும்.
ஆனால், இப்போது நம் கல்விக் கொள்கையைப் பெரும் நிறுவ னங்கள் வடிவமை த்துக் கொண்டிரு க்கின்றன.
அதன் பிரதி நிதிகளாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவை வடிவமை த்துக் கொண்டிரு க்கின்றன.
மாணவர் களின் நலன் முதன்மை பெறாமல், முதலாளி களின் நலன் தான் இந்தக் கல்விக் கொள்கை யில் முதன்மை யானதாக இருக்கிறது.
உலக மூலதனம் இந்தியக் கல்வித் துறையின் மீது ஒரு யுத்தத்தைத் தொடுத்தி ருக்கிறது.
அந்த மூலதனம் தேசத்துக்கு, மக்களுக்கு, இயற்கை வளங் களுக்கு என யாருக்கும் விசுவாச மாக இருக்காது. அது லாபத்துக்கு மட்டும் தான் விசுவாச மாக இருக்கும், அந்த மூல தனத்தின் பிள்ளை தான் ‘நீட்' தேர்வு.''
''புரிய வில்லை. நீட் தேர்வுக்கும் உலக வர்த்தக அமைப்பு க்கும், உலக மூலதனத்து க்கும் என்ன சம்பந்தம்...?''
''உலக வர்த்தக அமைப்பு க்குச் சில வாக்குறுதி களை இந்திய அரசு அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார் மயமாக்குவது.
அதில் தங்குத் தடை இல்லாமல், அந்நிய நிதியை அனுமதி ப்பது. இது நிறைவேற வேண்டு மானால், இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத் தான் இந்த நீட் தேர்வு.''
''இன்னும் கொஞ்சம் விளக்க மாகச் சொல்ல முடியுமா...?''
இப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில் மாணவர்கள் சில காலம் கிராமத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது.
ஆனால், நீட் தேர்வில் அதற்கான வாய்ப்பே இல்லை. இதனால், கிராம மற்றும் ஆரம்ப சுகாதார நிலை யங்கள் அழியும்.
அந்த இடத்தில் தனியார் மருத்துவ மனைகள் வரும். நீங்கள் நீட் தேர்வைத் தட்டை யாகப் புரிந்து கொள்ளாமல் இந்தப் பின்ன ணியில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நீட் தேர்வைச் சர்வதேச அரசியல் அல்லாமல் சமூகநீதி கண்ணோட் டத்தில் பார்த்தீர்கள் என்றால்,
வாய்ப்பு மறுக்கப் பட்ட பின்தங்கிய சமூக மக்களை, மருத்துவத் துறையில் உள்ளே வர விடாமல் பார்த்துக் கொள்ளும் அரசியல் தெரியும்.''
''தகுதியான வர்கள் தானே மருத்துவத் துறையில் வர வேண்டும்?''
அனில் சடகோபால் ''தகுதி எதை வைத்து நிர்ணயி க்கப்படு கிறது? தாழ்த்தப் பட்ட, பழங்குடி சமூகங் களைச் சேர்ந்த ஒரு மாணவன் கடினப் பட்டு படித்து,
நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பு வாய்ப்புக் காகக் காத்திருக்கும் போது, அவன் மீது நீட் தேர்வைத் திணிக் கிறீர்கள்.
கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவனால், நீட் தேர்வுக் கானச் சிறப்பு வகுப்பில் பணம் கொடுத்து சேர முடியுமா...?
ஆனால், பணம் கொடுத்து சிறப்பு வகுப்புகள் சேர முடிந்த ஒரு மாணவ னையும், பணம் கொடுத்து சேர முடியாத
ஒரு பழங்குடி மாணவ னையும் 'ஒன்றாக ரேசில் ஓடுங்கள்' என்கிறீர்கள். கொஞ்சம் மூளையி லிருந்து யோசிக் காமல், மனதி லிருந்து யோசியுங்கள்.
உங்கள் மாநிலத் திலேய அனைத்து மாவட்டங் களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைத்து விட்டதா?
நான் இங்கு பேசிக் கொண்டி ருக்கும் போது... 'விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கின்றன' என்றனர்.
அப்படி யானால், அந்த மாவட்ட ங்களில் உள்ள பிள்ளைகள் எப்படிச் சென்னை மாவட்டப் பிள்ளை களுடன் போட்டி போட முடியும்...?
ஒரு மாநிலத் திலேயே இவ்வளவு சிக்கல் இருக்கும் போது, பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், சாதிகள், பாகுபாடுகள் உள்ள ஒரு தேசத்துக்கு ஒற்றைத் தேர்வு சரி வருமா....?''
''சரி, இதற்கு என்ன தான் தீர்வு...?''
"கூட்டாட்சி தத்துவ த்தை மதிப்பது தான் தீர்வு. தமிழகம் தான் எங்களுக்கு நீட் தேர்வு வேண்டா மென்று சட்டம் இயற்றி விட்டது . கூட்டாட்சி தத்துவ த்தின்படி, அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
கல்வியை வணிக மாகப் பார்க்காமல் இலவச மாக்க வேண்டும். அனைவ ருக்கும் தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
முதலாளி த்துவ தேசமான ஜெர்மனியும் சரி... கம்யூனிச தேசமான கியூபாவும் சரி... கல்வியை வணிக மாகப் பார்க்க வில்லை.
ஆனால், இவ்வளவு பாகுபாடு உள்ள ஒரு தேசம் கல்வியை வணிக மாகப் பார்க்கிறது; அதிலிருந்து வருபவர் களை ஒற்றைத் தேர்வில் எடை போடுவோம் என்கிறது.''
''ஆனால், தமிழகம் மட்டும்தானே நீட் தேர்வைத் தீவிரமாக எதிர்க்கிறது?''
''ஆம். அதற்கு நீங்கள் பெருமை கொள்ள வேண்டும். இது, அயோத்திதாச பண்டிதர், பெரியார் உங்களு க்கு ஏற்படுத்திய ஞானம்.
மற்ற மாநிலங் களை விட உங்களு க்குத் தான் எது சமூக நீதி என்று தெளிவாகத் தெரிந்திரு க்கிறது. அதனால் தான், அதற்கு ஏதேனும் சிறு உராய்வு ஏற்படும் போது நீங்கள் கிளர்ந்தெழு கிறீர்கள்... போராடு கிறீர்கள்.
உண்மை யில், தமிழ் மக்கள் நடத்தும் போராட் டங்கள் இந்தியா வின் பிற இன மக்களுக் கானதும் தான்.
மற்ற மாநிலங்கள் ஜல்லிக் கட்டு நடத்த முடியாமல் இருக்கும் போது நீங்கள் வெற்றிகர மாக ஒரு போராட்ட த்தை நடத்தி ஜல்லிக் கட்டை நடத்தி விட்டீர்கள்.
இப்போது நீங்கள் நடத்த வேண்டியது நீட் தேர்வுக்கு எதிரான ஜல்லிக்கட்டு.''