பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் ராஜன்புர் என்ற கிராமம் உள்ளது. மதவாதம் நிறைந்த இந்த கிராமத்தில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைகளை போல நடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கடந்த வெள்ளிக் கிழமை உறவினர் ஒருவருடன்
கள்ள உறவில் ஈடுபட்டதாக கூறி அந்த பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து அக்கிராம பஞ்சாயத்து உத்தர விட்டது.
அதன்படி அந்த பெண்ணை ஊர் மக்கள் கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்று கூறப்பட் டுள்ளது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன வென்றால்,
அந்த பெண் தூங்கும் சமயத்தில் வீட்டிற்குள் நுழைந்த உறவுக்கார இளைஞன் துப்பாக் கியை காட்டி மிரட்டி அந்த பெண்ணை பலாத் காரம் செய்துள்ளார்.
மேலும் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டி யுள்ளார்.
அவனிட மிருந்து தப்பி யோடிய அந்த பெண் கிராம பஞ்சாய த்தில் நடந்த வற்றை கூறியி ருக்கிறார். ஆனால் பஞ்சாயத்தோ அதை ஏற்றுக் கொள்ள வில்லை.
பின்னர் கிராம த்தை விட்டு தப்பி ஓடி பெண் போலீசில் புகார் அளித் துள்ளார். புகாரின் பேரில் கிராம பஞ்சாயத்து தாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த பெண்ணை பாது காப்பான அரசு விடுதியில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.
பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கிராம பஞ்சாய த்தார் அளித்த தீர்ப்பு அதிர்ச் சியை ஏற்படுத்தி யுள்ளது.