ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்கும் என்று தமிழக தலைமை காஜியார் அறிவித் துள்ளார். இது குறித்து தமிழக அரசின் தலைமை காஜியார் சலாவுதீன் முகமது அயூப் கூறிய தாவது:
ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமி யர்களின் 5 கடமை களில் ஒன்று. தமிழகத் தில் 26ம் தேதியன்று பிறை தென்பட வில்லை.
எனவே, 28ம் தேதி யான நாளை நோன்பு தொடங்கும். அனைத்து பள்ளி வாசல்களி லும் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகை 27-ந் தேதி முதல் இன்று தொடங்கும்.
ரம்ஜான் மாதத் தின் 30 நாட்களிலும் இஸ்லாமி யர்கள் நோன் பிருந்து 5 வேளை தொழுகை செய் வார்கள். மாலையில் நோன்பு திறக்கப் படும்.
அதற்காக அனைத்து பள்ளி வாசல்க ளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
நோன்பு இருக்கும் 27-ம் நாளை லைலத்துல் கத்ரு இரவா கவும், நோன்பின் கடைசி நாளை ரம்ஜான் பண்டிகை யாகவும் இஸ்லாமி யர்கள் கொண்டாடு கிறார்கள்.
சென்னை யில் நோன்பு இருக்கும் இஸ்லாமியர் களுக்கு ஷஹர் என்ற உணவு இலவசமாக வழங்க 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.