கலவர பூமியான ஈராக் சார்பில் உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள போகும் ஷைமா காசிம் அப்துல் ரஹ்மானு க்கு உலகம் முழுவதும் வாழ்த் துக்கள் குவிந்து வரு கின்றன. அப்படி யென்ன ஸ்பெஷல்.
ஈராக் என்ற வார்த் தையை கூகிளில் டைப் செய்து தேடினால், போர் சம்பந்தப் பட்ட செய்திகள் தான் முதலில் வரும்.
இப்படி போர் களமாக மாறி இருக்கும் ஈராக்கில், 42 ஆண்டு களுக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு அழகி போட்டி நடை பெற்றது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க அழகி போட்டியில் ’ஷைமா காசிம் அப்துல் ரஹ்மான்’ என்பவர் ’மிஸ் ஈராக்’ பட்டம் பெற்றார்.
மிஸ் ஈராக் பட்டம் பெற்ற போது ஷைமாவுக்கு வயது 20 தான். ஷைமா இளங்கலை தொழிற் படிப்பு பயின்றவர்.
பல தடைகளை மீறி அழகி போட்டியில் கலந்து கொண்டு, மகுடம் சூடி கொண்ட ஷைமாவுக்கு ஐ.எஸ் தீவிரவாதி களிடம் இருந்து மிரட்டல்கள் விடுக்கப் பட்டன.
ஆனாலும் ஷைமா அசர வில்லை. தற்போது ஈராக் சார்பாக இந்தாண்டின் உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள போகிறார் ஷைமா.
ஈராக் பெண்கள் தன்னம் பிக்கையிலும், தைரியத் திலும், அறிவாற்றலிலும் யாருக்கும் சளைத் தவர்கள் இல்லை என்பதை உலக அரங்கில் நிரூபிப்பதே ஷைமாவின் ஆசையாம்.
ஷைமாவுக்கு நீண்ட நாள் கனவு ஒன்று உள்ளதாம். முன்னாள் உலகி அழகியும், இந்திய நட்சத்திரமு மான ஐஸ்வர்யா ராயை சந்திக்க வேண்டும் என்பதே இவரின் கனவாம்!