சவுதியை அதிரவைத்த ட்ரம்ப் | Saudi was stunned Trump !

சவுதி அரேபியா வில் சுற்றுப் பயணம் மேற்கொண் டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அங்கு நடை பெற்ற மாநாட்டில், இந்தியா குறித்து சில முக்கியக் கருத்து களைத் தெரிவித் துள்ளார்.


அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தன்னுடைய முதல் வெளி நாட்டுச் சுற்றுப்ப யணத்தை சவுதி அரேபியாவி லிருந்து துவக்கி யுள்ளார். 

தன்னுடைய முதல் வெளி நாட்டு உரையை, ’அரேபிய - இஸ்லாமிய-அமெரிக்க’ மாநாட்டில் நிகழ்த் தினார். 

அதில் பேசிய ட்ரம்ப், ‘உலகில் உள்ள எந்தவொரு நாடும், தங்கள் மண்ணில் தீவிரவா தத்தை வளர விடக் கூடாது’ என்றார்.

50 முஸ்லிம் நாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாட்டில், தீவிரவாதம் குறித்து உரை யாற்றிய ட்ரம்ப், 

‘ஒவ்வொரு நாடும் தங்கள் மண்ணில் தீவிரவா தத்தை வளர விட வில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தீவிரவாதம் என்பது நன்மை க்கும் தீமைக்குமான போர். 

இது மேற்குலக நாடுகளு க்கும் இஸ்லாத் துக்கும் இடையே யான சச்சரவு அல்ல. குறிப்பாக, தீவிரவாதம் பல தரப்பட்ட நம்பிக்கை களுக்கும் 

பிரிவுகளு க்கும் நாகரிகங் களுக்கு மான போர் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

நாகரிகம் அறியாத மனிதர்கள், மனித உயிரை மதிக்காமல் நிகழ்த்தும் கொடுமை களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்றார்,

ட்ரம்ப், தனது தீவிரவாத த்துக்கு எதிரான உரையில், ‘இந்தியா, தீவிரவாத த்தால் மிகவும் பாதிக்கப் பட்ட நாடு’ என்று குறிப் பிட்டார். 

அடுத்த தாக, நாட்டின் பெயரைக் குறிப் பிடாமல் ‘தீவிரவா தத்தை வளர்க்கத் துணை போகக் கூடாது’ என்று ஒரு நாட்டை மறை முகமாகக் குறிப் பிட்டார்.

தன்னுடைய மத்தியக் கிழக்கு நாடுகளுக் கான பயணத்தின் மூலம் பல நாடுகளின் நல்லு றவைப் பெற முடியும்' என நம்பிக்கை தெரிவித்தார், டொனால்டு ட்ரம்ப்.
Tags:
Privacy and cookie settings