இங்கே சிஸ்டம் கெட்டுக் கிடக்கிறது... போர் வரும் போது களத்தில் இறங்கு வோம்... நான் தமிழனா என்ற தரமற்ற விமர்சனங்கள் எனக்கு வருத்தம் தருகின்றன.
நான் பச்சைத் தமிழன்... ஐந்து நாள்கள் நடந்த ரசிகர்க ளுடனான சந்திப்பில், முதல் நாள் மைக் பிடித்துப் பேசினார் ரஜினி. அவரது அரசியல் பிரவேசம் பற்றிய யூகங்களும் விமர்சன ங்களும் நாளுக்கு நாள் அதிகரி த்தன.
இறுதி நாளான வெள்ளிக் கிழமை மீண்டும் மைக் முன்னால் வந்த ரஜினி, மேற்கண்ட வாறு பேசி யூக நெருப்பில் இன்னும் நெய் வார்த்தி ருக்கிறார்.
இது அரசியலு க்கான அஸ்திரமா அல்லது, ரசிகர் களைக் கட்டிப் போடும் தந்திரமா? என விவாத மேடைகள் களை கட்ட ஆரம்பிக்கும்.
ஆனால், இந்தச் சந்திப்புகள் அவரின் ரசிகர் களை திடீர் உற்சாக த்தில் ஆழ்த்தி இருப்பது நிஜம்.
அவர்களில் சிலரிடம் பேசினோம்:
விழுப்புரம் மாவட்ட ரஜினி ரசிகர்கள்: தலைவர் வருவதற்கு முன்னாடியே தலைவர் கையைப் பிடிக்கக் கூடாது, காலில் விழக் கூடாது, அவர் கன்ன த்தைக் கிள்ளவோ, முத்தம் கொடுக்கவோ கூடாது,
கட்டிப் பிடிக்கவோ... செல்ஃபி எடுக்கவோ கூடாது... அவரு கிட்ட வளவளனு பேசக் கூடாது என்று நிறைய இன்ஸ்ட்ரக் ஷன்ஸ் குடுத்தாங்க. தலைவர் முதல் நாள் பேசிய வீடியோ காட்சியைக் காட்டினாங்க.
தலைவர் வழக்கத்தை விட ரொம்ப உற்சாகமாக, ஆக்டிவா இருந்தாரு. குழந்தைங்க வந்தா அவங்கள மடியில் தூக்கி உட்கார வெச்சுக் கிட்டாரு.
வெளியில வரும் போது எங்கள் வாழ்நாள் கனவான, தலைவரு கூட எடுத்த போட்டோ எங்க கையில் இருந்துச்சு.
நெல்லை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் துணைத் தலைவர் தாயப்பன்: போட்டோ எடுக்க நெருங் கினதும், தலைவரே... நீங்க அவசியம் அரசியலு க்கு வரணும்னு சொன்னேன்.
அவர் சிரிச்சுக் கிட்டே மேலே பார்த்துக் கையைக் காட்டினார். நிச்சயமா அவர் தனிக் கட்சியைத் தொடங்கு வார். அரசியல் வெற்றி டத்தை நிச்சயம் தலைவர் நிரப்புவார்.
கரூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ரஜினி ராஜா: எம்.ஜி.ஆருக்குப் பிறகு, உடல் நிலை சரியி ல்லாத ஒருவரு க்காகத் தமிழக மக்கள் மனம் கலங்கியது எங்கள் தலைவ ருக்காகத் தான்.
சிங்கப்பூர் மருத்துவ மனையில் அவர் சிகிச்சை பெற்றபோது, தமிழக த்தில் உள்ள அனைத்து கோயில்கள், தேவால யங்கள், மசூதி களில் மக்கள் வேண்டிக் கொண்டனர்.
அதனால், அந்த மக்களு க்குத் தலைவர் நன்றி சொல்ல வேண்டும் என்று வலியுறுத் தினோம். திருச்சியில் அந்த விழாவை வைத்தால், எல்லா மாவட்ட மக்களும் வந்து போக வசதியாக இருக்கும்.
அந்த பிரமாண்ட விழாவை எப்படி நடத்த வேண்டும் என்ற ஃபைலை 32 ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகிகளும் ரஜினியைச் சந்தித்துக் கொடுத்தோம்.
அதுக்கென்ன, நன்றி சொன்னா போச்சு. தேதியை மட்டும் பிறகு சொல் றேன்னு சொல்லி இருக்கார்.
தேனி மாவட்ட ரஜினி மன்றத் தலைவர் புஷ்பராஜ், செயலாளர் பொன்.சிவா: அரசியல் என்ட்ரி பற்றி அவருடைய முதல் நாள் பேச்சிலேயே பதில் சொல்லி விட்டார்.
அதனால், நாங்கள் எதை யாவது சொல்லி அவரைக் குழப்ப நினைக்க வில்லை.
தமிழக அரசியலில் தற்போ துள்ள குழப்ப மான சூழலில் சூப்பர் ஸ்டார் என்ட்ரி ஆக வேண்டும் என்று பொது மக்கள் நினைப்பதுபோலவே நாங்களும் நினைக் கிறோம், அவ்வளவு தான்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரி ஒன்றிய துணைச் செயலாளர் சேது பாஸ்கர்: நான் திடீரென சட்டையைக் கழற்றி விட்டு ருத்ராட்ச மாலை யுடன் நின்றதும் ரஜினி அசந்து விட்டார்.
உடனே அருகில் அழைத்தார். தலைவரே, நானும் ராகவேந்திரா பக்தனாக மாறி விட்டேன் என்றேன். சிரித்தார்.
காரைக்குடி நகர ரசிகர் மன்ற உறுப்பினர் சங்கர்: அவர் காலில் விழுந்து, தலைவரே, தமிழ் நாடே கீழ விழுந்து கிடக்கிறது.
நீங்கள் அரசியலுக்கு வந்து தமிழ் நாட்டைத் தூக்கி நிறுத்து ங்கள்னு கேட்டேன். தலைவரே என்னைத் தூக்கி விட்டு, நல்லது நடக்கும் போங்கனு சொன்னார்.
குமரி மாவட்ட ரசிகர்கள்: பல ஆண்டு காத்துக் கிடந்து சாமி தரிசனம் செய்த உணர்வு தான் இருக்கிறது.
தலைவர் என்ன முடிவெடு த்தாலும் அவர் பின்னால் நாங்கள் நிற்போம். தலைவர் அரசியலுக்கு இதுவரை வராத காரண த்தால் நாங்கள் பல்வேறு கட்சியில் இருக்கி றோம்.
தலைவர் அரசியலு க்கு வந்ததும் ரசிகர்கள் அனைவரும் ஒன்றி ணைந்து மிகப் பெரிய கூட்டமாக மாறுவோம். மிகப் பெரிய மாற்றம் தமிழக த்திலே நிகழ இருக்கிறது.