நாங்க தான் முன்னாடியே சொன்னோம்ல, 'செல்லூர் ராஜூ வின் வைகை அணை தெர்மோ கோல் விடல் 'சம்பவம்' போல மீம்ஸ் பார்ட்டி களுக்கு
அடுத்த நல்ல ஆபரே ஷனை அவரே கொடுத்தா தான் உண்டு'ன்னு. இதோ, பத்திரிக்கை யாளர்கள், 'கடும் வறட்சில எங்கேயும் தண்ணியே இல்லையே,
மதுரையில கள்ளழகர் எப்படி ஆத்துல இறங்குவார்? 'ன்னு கேட்டதுக்கு, முக்காலமும் உணர்ந்த முனிவர் செல்லூர் ராஜு, 'போன வருஷம் எப்படி இறங் குனாரோ,
அப்படித் தான் இந்த வருஷமும் இறங்குவார்' ன்னு வரலாற்று சிறப்பு வாய்ந்த வார்த்தையை விட்டுட் டாரேப்பு. போன வருஷம் எப்படி அழகர் வைகை ஆத்துல இறங்குனார் ங்கிறது இருக்கட்டும்.
இந்த வருஷம் அழகர் இறங்க என்னன்ன யோசனை களை செல்லூர் ராஜு வைத்தி ருக்கிறார் என்று நம்பத்தகுந்த சோர்ஸ் களிடம் ஜேம்ஸ் பாண்ட் ரேஞ்சுக்கு சேகரித்தோம். அவற்றை ஓப்பன் பண்ணினா....
இப்போ தண்ணி வராம வைகை ஆத்துல பள்ளிகூட பசங்க எல்லாம் மட்டை புடிச்சு, பந்தை வீசி கிரிக்கெட் விளையா டுறாங்க.
வைகை புயல் வடிவேல் வேற மதுரைக்காரர் தான். அதனால், அவரை விட்டு வைகை ஆத்துக் குள்ள அங்கேயே கிரிக்கெட் விளையாட விடலாம்.
இங்கிலீஸ் காரன் படத்துல அவர் மட்டையால டொக்கு டொக்குன்னு பூமியில தட்டும் போது பொத்துக் கிட்டு தண்ணி ஊத்து மில்லையா?. அப்படி தண்ணி ஊத்து கிளம்பி, வைகை ஆத்துல தண்ணீர் ஓட வைத்து விடும்.
அப்படியும் ஒத்து வரலையா, வைகை ஆறு முழுக்க காட்டுத் தனமா ஓடும் கானல் நீரை பானை நீராக மாற்றும் விஞ்ஞான யுக்தியை நாசா விஞ்ஞானி களின் கூட்டுச் சதியோடு.. ஸாரி, கூட்டோடு செய்ய இருக்கி றாராம்.
அதாவது, வெயிலை இழுத்து கரன்டாக கபால்ன்னு அனுப்பும் சோலார் சிஸ்டம் போல, கானல் நீரை உண்மை நீராக மாற்றி ஆறு நிறைய ஓட விடும்
சிறப்பு மெஷினை ரஷ்யா வில் இருந்து வர வழைக்க போகிறாராம். பார்த்து சின்ன மெஷினா வாங்குகங்கப்பு.
நூறுநாள் வேலை திட்டம் மூலமாக அக்கம் பக்கத்து மாவட்டங் களை சேர்ந்தவர் களையும் அழைத்து வந்து குடம் குடமாக தண்ணீர் எடுத்து வர வைத்து, ஆத்துல ஊத்த வைத்து,
அழகர் ஆத்துல இறங்க வழிவகை செய்ய போகி றாராம். இதற்காக, அங்கங்கே ஸ்பீக்கர்கள் கட்டி, 'தண்ணி குடம் எடுத்து, பக்தர்கள் நடந்து வந்தா,
நிறையுது ஆறு நிறையுது' ன்னு வைகாசி பொறந்தாச்சு பட பாட்டை ரீமிக்ஸ் விட்டு, அப்படியே வைகை ஆறு முழுக்க அலற விடும் திட்டம் இருக்காம்.
அதை கேட்டு, பக்தர்கள் உற்சாக மாகி இன்னும் நிறைய தண்ணி கொண்டு வந்து ஊத்து வாங்களாம். இப்பவே கண்ணைக் கட்டுதே!.
அப்படியும் இல்லையா, முதல்நாள் இரவே வேறு நிகழ்ச்சி களை தவிர்த்து விட்டு, வைகை ஆற்று க்குள் நாலைந்து கிலோ மீட்டருக்கு
பல பெரிய சைஸ் டி.விக் களை வைத்து மக்களை குலுங்கி குலுங்கி அழ வைத்த மொரட்டு சீரியல் களை ஓட விட போகிறாராம்.
இதனால், வைகை ஆத்துக்குள் குவியும் லட்சக்கண க்கான பக்தர்கள் அந்த சீரியல் களை பார்த்து கேவி கேவி அழுவார்கள் இல்லையா?.
அப்போது, அவர்களின் கண்களில் இருந்து கட்டுக் கடங்காமல் பெருகும் கண்னீரை ஆற்று க்குள் திருப்பி விட்டு, திருப்தி யாக அழகரை ஆற்றில் இறக்க பக்கா பிளான் அவரது கைவசம் தயாராம். ஸ்வப்பப் பப்பா.
இப்படி யும் தண்ணி கிடைக் கலையா, ஊர்ப்பட்ட கழுதை களை வைகை ஆற்றில் நிறுத்தி அவை களுக்கு கல்யாணம் பண்ணி வைத்தோ,
இல்லை ன்னா பெண்களை மொத்த மாக உட்கார வைத்து ஒப்பாரி வைக்கச் சொல்லி வராத மழையை வர வைத்து,
வைகை ஆத்துல ஓடாத தண்ணியை ஓட வைத்து, அழகரை ஜாம் ஜாமென்று ஆற்று க்குள் இறக்கும் 'பிரம்மாஸ்திர திட்டம்' இருக்கி றதாம். ரைட்டு!