புதுச்சேரியில் நடக்கும் தொடர் கொலைகள், கொள்ளை களைத் தடுக்கத் தவறியதாகவும், குற்றவாளி களுடன் தொடர்பில் இருந்த தற்காகவும் காவல் துறை எஸ்.பி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப் பட்டிருக்கிறார்.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக ரவுடிகள், கூலிப் படைகளின் அட்டகாசம் அதிகரித்தி ருக்கின்றது.
பொது இடங்களில் மக்கள் முன்னிலை யிலேயே வெடி குண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்து விட்டு சர்வ சாதாரணமாக ரவுடிகள் தப்பிச் செல்வது தொடர் கதையாகி வருகின்றது.
அதே போல நகரப் பகுதிகள் மட்டு மல்லாமல், கிராமப் பகுதிகளிலும் வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் வரிசையாக அரங்கேற ஆரம் பித்தது.
குறிப்பாக அமைச்சர் கந்தசாமியின் உதவியாளர் வீரப்பன், காங்கிரஸ் பிரமுகர் மாயவன், தொழிலதிபர் வேலழகன் போன்ற வர்கள் கிராமப் புறங்களில் வரிசையாக கொலை செய்யப் பட்டனர்.
ஆனால் இது தொடர்பாக பெரியதாக எந்த நடவடிக்கையும் காவல் துறை எடுக்க வில்லை. போலீஸ் அதிகாரிகள் அனைவரும் குற்றவாளி களுடன் நெருங்கியத் தொடர்பில் இருக்கி றார்கள்.
கொலைக் குற்றவாளி களைக் கூட லட்சக் கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு காப்பாற்று கிறார்கள் என்று மக்கள் வெளிப் படையாகவே பேசத் தொடங்கினர்.
குறிப்பாக திருபுவ னையைச் சேர்ந்த தொழிலதிபர் வேலழகன் படுகொலை யில், கொலைக் குற்றவாளி களைக் காப்பாற்ற
உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் தலையீடு இருக்கிறது என்று அரசியல் தலைவர் கள் பகிரங்க மாகத் தெரிவி த்தனர்.
அதே போல இரு தினங் களுக்கு முன்பு புதுச்சேரி கிராமப் பகுதியான பாகூரைச் சேர்ந்த சுவேதன் என்பவரைக் கொலை செய்ததோடு,
அவரது தலையைத் துண்டித்து காவல் நிலையத் திலேயே வீசிச் சென்றது புதுச்சேரி காவல் துறையின் நிலையைத் தோலுரித்துக் காட்டியது.
இந்நிலை யில் கிராமப் புறங்களில் நடந்த தொடர் கொலைகள், கொள்ளைகள் உள்ளிட்டவை களைத் தடுக்கத் தவறிய தாக
புதுச்சேரி மேற்கு முதுநிலை காவல் கண்காணிப் பாளர் எஸ்.பி.தெய்வ சிகாமணியை சஸ்பெண்ட் செய்து டி.ஜி.பி சுனில் குமார் கௌதம் உத்தர விட்டிருக் கிறார்.
தொடர் கொலைகள் எதிரொலி யாக காவல் துறையின் உயரதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டிருப்பது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது பற்றி பேசிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, 'புதுச்சேரி யில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை தொடர்ந்து
முதலமைச்சர் நாராயண சாமி ரவுடிகளையும், குண்டர் களையும் ஒடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக் குரியது.
குற்றவாளி களுடன் தொடர்பு வைத்திருந் ததற்காக காவல் கண்காணிப் பாளர் தெய்வ சிகாமணி பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
இது போன்ற நடவடிக்கைகள் மற்றவர் களுக்கும் முன் உதாரண மாக அமையும் என்றும் தெரிவித் திருக்கிறார்.