பிரபல ஊடகவியலாளர் அர்ணாப் கோஸ்வாமியால், கடந்த 6-ம் தேதி 'ரிபப்ளிக்' சேனல் துவங்கப் பட்டது. துவக்கம் முதலே பல்வேறு அதிரடி காட்டி வருகிறது ரிபப்ளிக்.
குறிப்பாக, அந்த சேனல் துவங்கிய முதல் நாளே, கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டு சிறையில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த
முகமது ஷகாபுதீன் என்ற கைதி, தன் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வின் ஆலோசனை களைப் பெறும் ஆடியோவை வெளி யிட்டது.
இந்த நிலை யில், தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர் ரிபப்ளிக் கின் அதிரடியில் சிக்கி யுள்ளார்.
சசிதரூரின் முன்னாள் மனைவி சுனந்தா புஸ்கர், கடந்த 2014-ம் ஆண்டு புது டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் கொலை செய்யப் பட்டார்.
முக்கியமாக, இறப்பதற்கு முந்தைய நாளில், பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரி கையாளர் மேஹாவுக்கும் சுனந்தாவுக்கும் இடையேயான ட்விட்டர் மோதல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போதில் இருந்தே, இந்தக் கொலை வழக்கில் சசிதரூருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர் பாக சில ஆடியோ டேப்களை ரிபப்ளிக் சேனல் இன்று வெளியிட் டுள்ளது. குறிப்பாக, 'சுனந்தா உயிரி ழந்தது சசிக்கு முன்பே தெரியும்.
சுனந்தா 307-வது அறையில் கொல்லப் பட்டு, பிறகு 345-வது அறைக்கு மாற்றப் பட்டார்' உள்ளிட்ட பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியிடப் பட்டுள்ளன.
இவை, இந்த வழக்கை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று கூறப்படுகிறது.