தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புத் துறை அதிகாரியை, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறுவதற்கு இடையூறாக இருப்பதாக பெண் அதிகாரியை அமைச்சர் சரோஜா தனது வீட்டுக்கு வர வழைத்து திட்டி யுள்ளார்.
சுமார் இரண்டு மணி நேரம் சிறை வைக்கப்பட்டு, அந்த அதிகாரியை சரோஜாவும், அவருடைய கணவரும் சேர்ந்து சரமாரியாக திட்டி யுள்ளனர்.
இதை யடுத்து அதிர்ச்சியில் மயங்கிய அதிகாரியை முதலுதவி அளித்து தெளிய வைத் துள்ளனர்.
இது தொடர்பாக மீனாட்சியை தொடர்பு கொண்டு பேசிய போது, குழந்தைகள் நலன் தொடர்பான புத்தகம் ஒன்று வெளியிட வேண்டி இருந்தது.
அவருடைய அழைப் பையும் ஏற்றதோடு, இந்தப் புத்தகம் வெளி யிடுவது தொடர் பாக பேசிவிட்டு வந்து விடலாம் என்று சென்றேன்.
அப்போது அமைச்சர் சரோஜாவும் அவருடைய கணவரும் என்னை சரமாரி யாக திட்டித் தீர்த்தனர். எத்தனை முறை உனக்கு பிரச்னை கொடுத்தாலும் நீ வேலையை விட்டுப் போக மறுக்கிறாய்.
பணம் எதுவும் கொடுக்காமல் வந்து விட்ட உனக்கு அதன் மதிப்பு தெரியாது. நீ வகித்து வரும் பதவிக்கு 30 லட்ச ரூபாய் தருவதற்கு பலரும் காத்திருக் கிறார்கள்.
ஆனால் பதவியை விட்டுப் போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாய் என்று கூறி மிரட்டினார். அது மட்டு மன்றி வேலையை விட்டு துரத்தி விடுவேன் என்றும் மிரட்டினார்கள் எனக் கூறியுள்ளார்.
நியாயமான முறையில் தேர்வெழுதி பணியில் சேர்ந்து, குழந்தைகளின் நலனில் அக்கறைக் கொண்டு ஆக்க பூர்வமாக என் பணியை செய்து வருகிறேன்.
அமைச்சரின் மிரட்டல் குறித்து ஆளுநர், பிரதமர் உள்ளிட் டோருக்கு கடிதம் எழுது வதோடு நீதிமன்ற படியேறப் போகிறேன், என்று கலங்கினார் அவர்.