நூதனமான முறையில் தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இலங்கை யர்கள் இருவர் மும்பை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
பெருங் குடலில் வைத்து தங்க கட்டிகளை கடத்திச் செல்ல முற்பட்ட இலங்கை யர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளனர்.
மும்பை விமான நிலைய சுங்கத் திணைக் களத்தின் புலனாய்வு பிரிவினரே இவர்களை நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவர், துபாயி லிருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானம் மூலம் மும்பை விமான நிலையத்தை வந்தடைந் துள்ளார்.
குறித்த சந்தேக நபரிடம் சோதனை மேற்கொண்ட போது, 1,516 கிராம் எடை யுடைய 13 தங்க கட்டிகள் மீட்கப் பட்டுள்ளன என போலீஸார் தெரிவித் துள்ளனர்.
சந்தேகநபரின் பெருங் குடலில் இருந்தே, தங்கக் கட்டிகள் மீட்கப் பட்டுள்ளன. இதே வேளை, மற்றைய சந்தேக நபரும் (48) துபாயி லிருந்து
எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானம் மூலம் மும்பை விமான நிலைய த்தை வந்தடைந் துள்ளார். இரண்டாவது சந்தேக நபரிடம் இருந்து 1,399 கிராம் எடை யுடைய 13 தங்க கட்டிகள் மீட்கப் பட்டுள்ளன.
கைது செய்யப் பட்ட இரண்டு இலங்கை யர்களும் புத்தளம் மாவட்ட த்தை சேர்ந்த வர்கள் என இந்திய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
புடவைகள், துணி வகைகள் ஆகிய வற்றை கொள்வனவு செய்வ தற்காக அடிக்கடி இந்தியாவு க்கு செல்லும் இலங்கை யர்களே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளனர் என அந்நாட்டு போலீஸார் கூறியுள்ளனர்.
இதே வேளை, சம்பவம் தொடர்பில் இந்திய போலீஸார் மேலதிக விசாரணை களை முன்னெடுத்து வருகி ன்றனர்.