கள்ளக்காதலி வீட்டில் தங்கி புருசனை பிடித்த பலே மனைவி !

திருச்சியில் கணவரின் கள்ளக் காதலி வீட்டின் பூட்டை உடைத்து தனது மகனுடன் அங்கேயே தங்கி சமைத்துச் சாப்பிட்டுக், கள்ளக் காதலி வந்ததும் வளைத்துப் பிடித்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்காதலி வீட்டில் தங்கி புருசனை பிடித்த பலே மனைவி !
மனைவி மற்றும் மகன் கையும் களவுமாக பிடித்ததால் கூனிக்குறுகிப் போன கணவர் தனது செயலுக் காக வருந்தி மனைவி, மகனுடன் வீடு திரும்பினார்.

கள்ளக் காதலி வீட்டுக் குள்ளேயே புகுந்து சமைத்துச் சாப்பிட்டு மகா பொறுமை யுடன் காத்தி ருந்து அவரைப் பிடித்த பெண்ணின் செயல் திருச்சியை பரபரப்புக் குள்ளாக்கி யுள்ளது.

திருச்சியைச் சேர்ந்தவர் செளந்தர ராஜன் (ஒரிஜினல் பெயர் அல்ல). ஒரு கம்ப்யூட்டர் நிறுவன த்தில் காண்டிராக்ட் வேலையில் இருநது வருகிறார்.

இவரது மனைவி பெயர் ஹேமலதா (ஒரிஜினல் பெயர் அல்ல). இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள். மூத்த பையன் என்ஜீனியரிங் படிக்கிறார். 2வது மகன் 9ம் வகுப்பு படிக்கிறார்.

செளந்தர ராஜனின் போக்கு சமீப காலமாக சரியில்லை. குடும்ப த்தைக் கவனிக் காமல் இருந்தார். மனைவி யுடன் சண்டை போட்டார். பிள்ளை களையும் கவனிக்க வில்லை.

வீட்டுக்கும் அடிக்கடி வருவ தில்லை. போனிலேயே பேசிக் கொண்டி ருப்பார். இது ஹேம லதாவுக்கு சந்தேகததை ஏற்படுத் தியது.
இதை யடுத்து அவர் தனது கணவரின் செயல் களை கண்காணிக்க ஆரம்பி த்தார். அப்போது தான் தனது கணவ ருக்கு துறையூரில் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அப்பெண் ஒரு பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். அவரது மின் கட்டணம், போன் பில் உள்ளிட்ட பலவற் றையும் செளந்தர ராஜனே பார்த்து வந்துள்ளார். 

கிட்டத் தட்ட துறையூரில் இன்னொரு குடித்தனம் நடத்தி வந்துள்ளார் செளந்தர ராஜன். இதையடுத்து இனியும் பொறுக்க முடியாது என்பதால் தனது மூத்த மகனுடன் துறை யூருக்குப் படை யெடுத்தார்.

ஆனால் வீடு பூட்டிக் கிடந்தது. அந்தப் பெண் தனது உறவினர் வீட்டுக்கு பெங்களூ ருக்குப் போயி ருந்தார். இதனால் மனம் தளராத ஹேமலதா பூட்டை உடைத்து வீட்டுக் குள் போனார்.

அங்கே போய்ப் பார்த்தால் தனது கணவர் வாங்கிக் கொடுத்த பொருட் களைப் பார்த்து வெகுண்டார். தனது வீட்டில் இருப் பதைப் போலவே, அதே போன்ற பொருட்கள் இங்கும் இருப்பதை அதிர்ந்தார்.

அதை விட தனது சேலையைப் போலவே இவரு க்கும் கணவர் சேலை வாங்கிக் கொடுத்தி ருப்பதைப் பார்த்து வெகுண்டார். அந்தப் பெண் வரும் வரை வீட்டுக் குள்ளேயே இருக்க முடிவு செய்தார்.
கணவரின் கள்ளக் காதலி வீட்டிலேயே தங்கி விட்ட ஹேமலதா தனது மகனுடன் சமைத்துச் சாப்பிட்டு வீட்டுக் குள்ளேயே பதுங்கி யிருந்தார்.

நேற்றுதான் அப்பெண் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். வந்தவர் வீட்டு க்குள் ஆள் நடமாட்டம் இருப்பதை அறிந்து அதிர்ச்சி யுடன் உள்ளே போனார்.

உள்ளே வந்த வரை ஹேம லதாவும், அவரது மகனும் சேர்ந்து சரமாரி யாக தாக்கினர். அப்பெண் ணின் அலறலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

ஹேமலதா வையும், மகனையும் திருடர்கள் என நினைத்து விட்ட அக்கம் பக்கத் தினர் அவர் களை அடிக்க ஆரம் பித்தனர். பின்னர் போலீஸா ருக்குத் தகவல் போய் அவர் களிடம் இருவரும் ஒப்படை க்கப்பட்ட னர்.
விசாரணை யில் குட்டு உடைந்து அனை வரும் அதிர்ச்சி அடைந்தனர். செளந்த ரராஜன் வர வழைக்கப் பட்டார்.

போலீஸ் முன்னிலை யி்ல் பேச்சு வார்த்தை நடந்தது. தனது மனைவி, மகனிடம் மன்னிப்பு கேட்டார் செளந்தர ராஜன். பின்னர் அவர் களுடன் வீடு திரும் பினார்.
Tags:
Privacy and cookie settings