இடுப்புடன் இணைந்த மூன்றாவது காலுடன் பிறந்த வங்தேச சிறுமி, ஆஸ்திரேலி யாவில் செய்யப் பட்ட வெற்றி கரமான அறுவை சிகிச்சை க்கு பின் வங்கதேசம் திரும்பினார்.
மூன்று வயதாகும் சோய்டி கதூன் பிறப்பி லேயே இடுப் பெலும்பில் இரட்டை பகுதிகள் கொண்டவர்.
சோய்டி கதூனின் கூடுதல் உறுப்பை அகற்றுவது மற்றும் இடுப்பு மண்டல த்தை மறுகட்ட மைப்பது குறித்து ஆஸ்திரேலிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் பல மாதங்களாக ஆலோசனை நடத்தி னார்கள்.
'சில்ட்ரன் ஃபர்ஸ்ட் ஃபவுண்டேஷன்' என்னும் அறக்கட்டளை, வங்க தேசத்தின் ஒரு கிராம த்தை சேர்ந்த இந்தச் சிறுமியை, சிகிச்சைக் காக ஆஸ்திரேலி யாவுக்கு அழைத்துச் சென்றது.
சோய்டி கதூனுக்கு செய்யப் பட்ட அறுவை சிகிச்சை மிகவும் அரிதான தாகவும், கடினமான தாகவும் இருந்ததாக,
விக்டோரியா நகரில் உள்ள மோனாஷ் சிறார் மருத்துவ மனையின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கிரிஸ் கிம்பெர் கூறுகிறார்.
"இந்த அறுவை சிகிச்சை ஒருவரால் தீர்மானிக்கப் பட்டது, இதற்கான ஆய்வு செய்ய நிறைய நேரம் செலவிட வேண்டியி ருந்ததோடு,
அறுவை சிகிச்சைக் கான நடை முறை களையும் முறையாக திட்டமிட வேண்டி யிருந்தது" என 'ஆஸ்திரேலிய பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனுக்கு' அளித்த பேட்டி யில் கிரிஸ் கிம்பெர் சொன்னார்.
சோய்டி கதூனுக்கு இதற்கு முன் சில அறுவை சிகிச்சை களை செய்திருந்த பங்களாதேஷ் மருத்துவர் களுடன், ஆஸ்திரேலிய மருத்துவர் குழு விரிவான கலந்தா லோசனை களை மேற்கொண்டது.
சோய்டி கடந்த ஆண்டு ஆஸ்திரேலி யாவுக்கு அழைத்து செல்வதற்கு முன்னதாக,
அவருக்கு செய்யக் கூடிய அறுவை சிகிச்சை சாத்திய மானதா, பயனுள்ளதா என மருத்துவக் குழு தீர்மானிக்க வேண்டி யிருந்தது.
சோய்டியின் மூன்றாவது காலின் ஒரு பகுதியை பங்களாதேஷ் மருத்து வர்கள் அகற்றி னாலும்,
"இரண்டு சாதாரண கால் களுக்கு இடையில் அவரது இடுப்புப் பகுதியில் ஒரு பெரிய பகுதி இருந்தது" என்று மருத்துவர் கிம்பெர் கூறினார்.
"ஏனெனில் அங்கு இரட்டைப் பகுதி உள்ளது, சோய்டிக்கு இரண்டு மலக்குடல், இரண்டு பெண் குறிகள் இருந் ததுடன்,
இரண்டு மலவாய் களுக்கான சாத்திய ங்களும் இருந்தன. இந்த இரட்டைப் பகுதிகள், வழக்க த்திற்கு மாறான இடத்தில் வளர்ந்து கொண்டி ருந்தன."
மருத்துவக் குழுவி னரின், கவனமான மிக நீண்ட திட்ட மிடலுக்குப் பிறகு நவம்பர் மாதம் அறுவை சிகிச்சை நடந்தேறியது.
சிறுமியின் உடலில் இருந்த மூன்றாம் காலின் எஞ்சிய பகுதியை அகற்றிய மருத்துவக் குழுவினர், சோய்டி வீட்டிற்கு திரும் பியதும்,
இயல்பாக இயங்கு வதை உறுதி செய்யும் வகையில் மறு கட்டமைப்பு சிகிச்சை களையும் மேற்கொண் டார்கள்.
பகுதியளவு பார்வை குறை பாடுள்ள சோய்டி கதூனால், தற்போது நடக்கவும், ஓடவும் முடிகிறது என்று சொல்லும் மருத்துவர் கிம்பெர், அவரின் எடையும் கூடியி ருப்பதாக தெரிவித்தார்.
பதின்ம வயதில் கதூனுக்கு மேலும் சில அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியி ருக்கலாம் என்று கூறும் அவர்,
ஆனால், தற்போது எந்தவித மருந்துதோ, மருத்துவ உபகரண ங்களோ இல்லாமல் தனது தாயுடன் தாயகத் திற்கு அவர் திரும்ப முடிந்தி ருப்பதை சுட்டிக் காட்டுகிறார்.
தாய் நாட்டிற்கு திரும்பி, குடும்பத் தினருடன் மகள் விளை யாடுவதை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டி ருப்பதாக சோய்டி கதூனின் தாய் ஷிமா கதூன், வியாழக் கிழமையன்று ஆஸ்திரேலிய ஊடகங் களிடம் தெரிவித்தார்.
"இப்போது எல்லாம் நன்றாகவே இருக்கிறது. அவள் பிற குழந்தை களைப் போலவே விளை யாடலாம் ...
எனது மகள் பிற குழந்தை களைப் போலவே சாதாரண மாக இருக்கிறாள்" என்று ஷிமா கதூன் மகிழ்ச்சி யுடன் தெரிவித்தார்.