நீச்சல் பயிற்சி... தந்தையின் கண் முன்பே உயிரிழந்த சிறுமி !

சென்னை முகப்பேரில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சியின் போது 8 வயது சிறுமி ஒருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னை, அம்பத்தூர் அருகேயுள்ள புது நகரைச் சேர்ந்தவர் பிஜூ.
நீச்சல் பயிற்சி... தந்தையின் கண் முன்பே உயிரிழந்த சிறுமி !
சினிமாத் துறையில் பணியாற்றி வரும் இவர், தனது மகளுக்கு கோடை காலப் பயிற்சி யாக நீச்சல் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையம் அருகிலுள்ள ஒரு தனியார் நீச்சல் குளத்திற்கு மகளுடன் சென்றுள்ளார் பிஜூ. நீச்சல் குளத்தைக் கண்டு பயந்த சிறுமி 

பயிற்சி யின் போது அதிகளவில் நீரைக் குடித்து மயக்க மடைந் துள்ளார். விரைவாக அருகிலுள்ள தனியார் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்ட சிறுமி மருத்துவ மனையில் இறந்தார்.
உயிரிழந்த சிறுமி ஆண்ட்ரியா ஒரு தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். மூச்சுத் திணறலால் மரண மடைந்த தாக மருத்து வர்கள் அறிக்கை அளித்து ள்ளனர். 

தற்போது பிரேத பரிசோதனை க்காக சிறுமி யின் உடல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஜெ.ஜெ. நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings