இசைஞானி இளையராஜாவின் மகனும், இசை அமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்தது லைவ்டே வாசர்கள் அனைவருக்கும் தெரியும்.
ஒரு இஸ்லாமிய பெண்ணை மனம் முடித்தார். குர்ஆன் வாசிப்பதில் தீவிரமாக இருக்கும் யுவன் சங்கர்ரஜா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணியாக இருந்தாலும், ஐந்து வேளை தொழுகையை கட்டாயம் நிறை வேற்றுவார்.
தொழுகை ஒரு இஸ்லாமி யரின் கட்டாயக் கடமை என்பதில் உறுதியாக இருப்பவர் யுவன்.
சில சமயம், பாடல் கம்போஸிங், ரிக்கார்டிங்கில் பிஸியாக இருந்தாலும் தொழுகை நேரம் வந்ததும் உடனே எழுந்து சென்று உடம்பை சுத்தம் செய்து விட்டு தொழுகைக்கு போய்விடுவார்.
வெள்ளிக் கிழமை மதியம் ஜும்ஆ தொழுகை யன்று சினிமா நண்பர் களையோ இயக்குனர் களையோ சந்தித்து விட்டு அவசரமாக கிளம்பி விடுவார்.
நட்பு ரீதியாக எந்த வி.ஐ.பி அழைத்தாலும் வெள்ளிக் கிழமை யுவன் வெளியே செல்வ தில்லை.
எனது தொழுகை க்கு இடையூறு செய்யும் எந்த நட்பும் எனக்கு தேவை இல்லை தயவு செய்து ஒதுங்கி விடுங்கள் என்று டுவிட்டரில் அறிவித்து விட்டார்.
யுவன் சூப்பர்! இறை நம்பிக்கையே முதல் நம்பிக்கை!