Tinder-க்கு வந்த சூடான்.. காரணம் என்ன?

பிரபல டேட்டிங் ஆப் ஆன டிண்டர் பற்றி அறியாத இளை ஞர்களே இருக்க முடியாது. அந்த அளவு இளைஞர்களிடம் பிரபலமான ஆப் இந்த டிண்டர். ஆப்-ஐத் திறந்தவுடன் சிங்கிள் ஸ்வைப் செய்தாலே போதும்; 
Tinder-க்கு வந்த சூடான்.. காரணம் என்ன?
உங்களுடன் 'மேட்ச்' ஆகும் நபர்களுடன் நீங்கள் உரையாடலாம். இப்படி யூத் ஃபுல்லான ஆப்பில் தற்போது புதிதாக ஒரு வி.ஐ.பி இணைந் துள்ளார். 

ஆப்பிரிக்க வடக்கு வெள்ளைக் காண்டா மிருகம் தான் அந்த வி.ஐ.பி. அவர் பெயர் சூடான். பிற காண்டா மிருகங்கள் போல அல்லாமல் சூடான் ரொம்பவும் ஸ்பெஷல். ஏன் தெரியுமா?

யார் இந்த சூடான்?

கிழக்கு ஆப்பிரிக் காவில் இருக்கும் கென்யாவின் ஒல் பெஜெட்டா என்னும் விலங்குகள் காப்ப கத்தில் இருக்கும் வெள்ளைக் காண்டா மிருகம் தான் இந்த சூடான். 

உலகில் கடைசியாக எஞ்சி யிருக்கும் ஒரே ஒரு ஆண் வெள்ளைக் காண்டா மிருகமும் இந்த சூடான்தான். 

இதன் இனம் மொத்தமும் கொம்புகளுக்காக கொடூர வேட்டைக் காரர்களிடம் பலியாக, தனது இனத்தைக் காப்பாற்று வதற்காக அழிவின் விளிம்பில் நின்று போராடி வருகிறது இந்த சூடான். 
இவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதால், இந்தக் காண்டா மிருகத்தைக் காப்பாற்ற ராணுவ பாதுகாப்பும் அளிக்கப் பட்டுள்ளது. 

தற்போது எந்நேரமும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களின் மத்தியில் தான் வாழ்ந்து வருகிறது இந்த சூடான். தற்போது டிண்டரில் இணை ந்திருப்பது கூட, இதற்காகத் தான்.

43 வயதாகும் சூடான் தனது இறுதிக் காலங்களில் இருக்கிறது. சூடான் இனப் பெருக்கம் செய்தால் மட்டுமே அழிவின் விளிம்பில் இருக்கும் 

ஆப்பிரிக்க வடக்கு வெள்ளைக் காண்டா மிருகங்கள் தப்பும். இல்லை யெனில் சூடானோடு இந்த இனம் அழிந்து விடும். 

இதற்காக தற்போது இதன் இனத்தில் இருக்கும் இரண்டு பெண் காண்டா மிருகங் களோடு இணை சேர்க்கும் முயற்சிகள் நடை பெற்று வருகின்றன. ஆனால் அதில் வெற்றி கிட்ட வில்லை. 
எனவே மருத்து வர்களிடம் தற்போது இருக்கும் ஒரே தீர்வு IVF எனப்படும் செயற்கை கருத் தரித்தல் முறை தான். ஆனால் இந்த முறை இதற்கு முன்பு எந்தக் காண்டா மிருகங் களுக்கும் செய்யப் பட்டது கிடையாது. 

எனவே காண்டா மிருகங் களுக்கு எனப் பிரத்யேக மான IVF முறையினை உருவாக்க நிதி திரட்டி வருகின்றனர் உயிரியல் பூங்காவினர். 

அதற்கான நிதியை மக்களிடம் இருந்து திரட்டு வதற்காகத் தான் டிண்டர் நிறுவ னத்துடன் கை கோர்த் துள்ளது பூங்கா நிர்வாகம்.

செயற்கை கருத்தரிக்கும் முறையை இதுவரை காண்டா மிருகங்க ளுக்கு செய்தது கிடையாது. இது தான் முதல் முறை. எங்களால் இயன்ற வரை சூடானைக் காப்போம். 

ஆனால் காலத்திற்கு எதிராகத் தான் நாங்கள் போராட வேண்டியி ருக்கிறது" என்கிறார் ஒல் பெஜட்டா பூங்காவின் தலைவர் ரிச்சர்ட் விக்னே. 

டிண்டர் ஆப் மூலமாக சூடானைப் பற்றி 190 நாடுகளில், 40 மொழிகளில் மக்கள் தெரிந்து கொள்ள முடியுமாம். 
Tinder-க்கு வந்த சூடான்.. காரணம் என்ன?
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி யில் சூடானைப் பற்றி என்ன கூறியிருக் கிறார்கள் தெரியுமா? ‘The Most Eligible Bachelor in the World’. மேலும் டிண்டரில் சூடான் பற்றிய புரொஃபைல் இது தான்.

தங்கத்தை விடவும் விலை மதிப்பு மிக்கவை காண்டா மிருகங் களின் கொம்புகள். அவற்றுக் காக சூடானின் இனம் தன்னையே பலி கொடுத்து விட்டது. 

மனிதனின் பேராசைக்கு பலியான இனங்களில் ஒன்றாக, தவறு களில் ஒன்றாக வரலாற்றில் இதுவும் பதிவாகும். 
ஆனால் விலங்கு களாக, பறவைகளாக, நீர்நிலை களாக மனிதனின் தவறுகளும், பேராசையும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்...இருக்கிறது. 

அஃறினை என மிருகங் களுக்குப் பெயர் மட்டும் வைத்து விட்டு அவற்றின் குணங் களை நாம் ஏந்தி நிற்கிறோம்!
Tags:
Privacy and cookie settings