நாளை நீட் தேர்வு கட்டுபாடுகள் சில !

மருத்துவ மாணவர் சேர்க்கைக் கான அகில இந்திய அளவிலான ‘நீட்’ பொது நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடை பெறுகிறது. 
நாளை நீட் தேர்வு கட்டுபாடுகள் சில !
இந்த தேர்வை இந்தியா முழுவதும் சுமார் 11.35 லட்சம் மாணவர்கள் எழுது கிறார்கள். இதற்காக மொத்தம் 103 மையங்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. 

தமிழத்தில் 88 ஆயிரத்து க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுது கின்றனர். 

இவர்களுக் காக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், அசாம், வங்காளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா ஆகிய 10 மொழிகளில் தேர்வு நடை பெறுகிறது. 

இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என 4 பாடங்களில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும்.
ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப் படும். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப் படும். 

அதே சமயம் தவறான பதில் அளித்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப் படும். ஒரே கேள்விக்கு பல பதில்களை அளித்தாலும் அது தவறான பதிலாகவே கருதப் படும்.

ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வை எழுத முடியும். இட ஒதுக்கீடு பெறும் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 30 வயதுக்குள் 3 முறையும், பிற மாணவர்கள் 25 வயதுக்குள் 3 முறையும் நீட் தேர்வை எழுத முடியும்.

நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும். மாணவர்கள் காலை 7.30 மணிக்கு தேர்வு மையத்து க்குள் அனுமதிக் கப்படுவர்.

தேர்வு எழுதுவ தற்கான அனுமதி அட்டை காலை 9.45 மணி வரை சோதனை செய்யப் படும். மாணவர்கள் காலை 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் அனுமதி க்கப்பட மாட்டார்கள்.
மாணவர்கள் தேர்வு அறைக்குள் தேர்வுக்கூட அனுமதி அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அனுமதி அட்டையின் 2-வது பக்கத்தில் ஓட்ட வேண்டிய அஞ்சல் அட்டை அளவு புகைப்படம் ஆகிய வற்றை 

மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். நீலநிறம் அல்லது கருப்பு நிற பால் பாயின்ட் பேனா மூலமே தேர்வு எழுத வேண்டும். பேனா தேர்வுக் கூடத்தி லேயே வழங்கப்படும்.

நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ- மாணவிகள் ஷூ, முழுக்கை சட்டை, டீ-சர்ட், பெல்ட், கைக்கடிகாரம், குளிர் கண்ணாடி, செயின், மோதிரம், பிரேஸ்லெட், நெக்லஸ், ஆபரணங்கள், கிளிப்புகள், 

பெரிய அளவு பட்டன்கள், பேட்ஜ், பெரிய அளவு ரப்பர் பேண்டுகள், சேலை, வளையல், பர்தா, தொப்பி, பைஜாமா, குர்தா ஆகியவை அணிய தடை விதிக்கப் பட்டுள்ளது.

அரைக்கை சட்டை, செருப்பு, பேண்ட், ஜீன்ஸ் பேண்ட், மருத்து வர்கள் பரிந்துரைத்த கண் கண்ணாடி, லெக்கின்ஸ், சுடிதார், 
சிறிய அளவு ரப்பர் பேண்ட் ஆகிய வற்றை அணிந்து செல்ல அனுமதி உண்டு. திருமண மான பெண்கள் தாலி மற்றும் வளையல் அணிந்து கொள்ளலாம்.

செல்போன், கைப்பை, கால்குலேட்டர், கேமரா, பென்டிரைவ், ஹெட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட் களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது.

முறை கேடுகளை கண்ட றிய தீவிர கண்காணிப்பு நடைபெறும். முறை கேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடி க்கை எடுக்கப்படும்.
Tags:
Privacy and cookie settings