கேரளாவில், மெட்ரோ ரயில் பணிகளில் 23 திருநங்கைகள் பணிய மர்த்தப்பட வுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
திருநங்கை களுக்காக, கேரள அரசாங்கம் தொடர்ந்து ஆக்கப் பூர்வமான நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. அனைத்து அரசு அலுவல கங்களிலும், மூன்றாம் பாலினத்த வர்களுக்கு தனிக் கழிவறை,
திருநங்கை களுக்கான தடகளப் போட்டிகள் என கேரளாவில் திருநங் கைகளின் மேம்பாட்டில், அம்மாநில அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
இதனிடையே கேரளாவில் புதிதாக தொடங்கவுள்ள மெட்ரோ ரயில் பணிகளில் 23 திருநங்கை களுக்கு வேலை வாய்ப்பு தரப்பட் டுள்ளது.
மெட்ரோ ரயில் பராமரிப்பு , டிக்கெட் வழங்குதல் உள்ளிட்ட பணி களுக்கு, அவர்கள் தகுதிக்கு ஏற்ப வேலை வழங்கப் படவுள்ளது.
திரு நங்கைகள் மேம் பாட்டுக்காக, அரசு எடுக்கும் இந்நடவடி க்கையை பார்த்து, மேலும் பல நிறுவனங்கள் திருநங்கைகளை பணி யமர்த்த வேண்டும் என்கிறார் மெட்ரோ ரயில் அதிகாரி ஜார்ஜ்.
தேர்வு செய்யப் பட்டவர் களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. இதை யடுத்து மேலும் பலர் பணிய மர்த்தப் படலாம் என்று கூறப் படுகிறது.
இந்தியாவில் அரசு சார்ந்த துறையில் அதிகளவிலான திரு நங்கைகள் பணியமர்த்தப் படுவது இதுவே முதல் முறையாகும்.