விக்கிலீக்ஸ்க்கு எதிரான விசாரணை கைவிடபடும்... சுவீடன் !

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றச் சாட்டுகள் தொடர்பான விசாரணையை கைவிடப் போவதாக சுவீடன் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 
விக்கிலீக்ஸ்க்கு எதிரான விசாரணை கைவிடபடும்... சுவீடன் !
செய்தி யாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசிய சுவீடன் அரசு வழக்கறி ஞர்கள் குழு இயக்குனர் Marianne Ny இவ்வாறு அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப் பின் மூலம் 7 ஆண்டுகால சட்ட இழுபறி நிலை முடிவுக்கு வரும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

45 வயதாகும் அசாஞ்சே 2012ம் ஆண்டு முதல் அரசியல் புகலிடம் வழங்கப் பட்டு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரக த்தில் இருந்து வருகிறார்.

பாலியல் பலாத்காரக் குற்றச் சாட்டில் தன்னை சுவீடனுக்கு நாடு கடத்தும் முயற்சியைத் தடுக்க அவர் ஈக்வடார் தூதரக த்தில் தஞ்சமடை ந்தார். 

மூன்று பாலியல் துஷ்பிரயோக குற்றச் சாட்டுக் களை எதிர் கொண்டு வந்த அசாஞ்சே அனைத் தையும் மறுத்து வந்தார். 
அமெரிக்க வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட பல முக்கிய ரகசிய ஆவணங் களை அசாஞ்சே வெளியிட்டதை யடுத்து அவர் மீது பலவித மான குற்றச் சாட்டுகள் சுமத்தப் பட்டன. 

இந்நிலை யில் தற்போது சுவீடன் இந்த விசார ணையைக் கைவிடப் போவதாக அறிவித் துள்ளது.
Tags:
Privacy and cookie settings