தியேட்டர் அதிபர்களுக்கு பதிலடி கொடுத்த விசால் !

சினிமா தொழிலை சீர்திருத்தப் போவதாக சொல்லிக் கொண்டு சீரிய ஸாக சில நடவடிக் கைகளில் இறங்கியி ருக்கிறார் விஷால்.
தியேட்டர் அதிபர்களுக்கு பதிலடி கொடுத்த விசால் !
அவரது முயற்சிகள் எந்தள வுக்கு பலன் அளிக்கும் என்பது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் விஷாலிடம் தோற்ற தாணு போன்ற வர்கள் ஓரணியில் திரண்டு நிற்கிறார்கள்.

தியேட்டர் உரிமையா ளர்களையும், விநியோ கஸ்தர்களை யும் சிண்டு முடிந்து விட்டு, விஷால் அறிவித்த வேலை நிறுத்த த்துக்கு வேட்டு வைக்கும் வேலையை செய்யத் தொடங்கி விட்டனர்.

இதற் கான முன்னோட்டம் தான் தமிழ் திரைப்பட வர்த்தக சபை என்ற ஒட்டடை படிந்த சங்கத்தை மீண்டும் தூசு தட்டியது.

விஷாலு க்கு எதிராக அணி திரள்பவர் களுக்கு ஆதரவா கவும், எதிராக வும் தயாரிப் பாளர்கள் பிளவு பட்டு நிற்கி றார்கள். ஆனாலும் விஷாலு க்கு ஆதரவான வர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.

அவர்களில் ஒருவர் கஸாலி. சாய்ந்தாடு என்ற படத்தை தயாரித்து இயக்கி யுள்ள இவர் விஷாலின் செயல் பாடுகளுக்கு ஆதரவாக தெரிவித் துள்ள கருத்து கவனிக் கத்தக்க தாக இருக்கிறது.
இனி காஸாலி யின் வார்த்தைகள்…

ஒரு உண்மை யான விவசாயி க்குத் தெரியும். களை எது விளை பயிர் எது என்று அவ்வாறு தெரிய வில்லை யென்றால் அவர் நிஜமான விவசாயி அல்ல.

அதுபோல, ஒரு உண்மை யான தயாரிப் பாளருக்குத் தெரிய வேண்டும் தன் பொருளை சந்தைப் படுத்து வதற்கு உதவி செய்பவர் யார் என்று.

கசப்பென்றால் கதறியழும் குழந்தைகளல்ல நாம்.

நீண்ட கால பார்வை தேவைப்படும் தயாரிப்பாளர்கள்.

சில நடவடிக்கைகள் சில நேரம் கசக்கத் தான் செய்யும்.

ஆனால், நீண்ட கால நோக்கில் நிரந்தரப் பயன் தரும்.
சரி, உங்களிடம் இப்போது ஸ்டிரைக் வேண்டுமா என்று கேட்டால் ஒரு தியேட்டர் அதிபராக வேண்டாம் என்பீர்கள்.

காரணம், யாரோ ஒரு தயாரிப் பாளர் பணம் செலவு செய்து படம் தயாரிக் கிறார், அவரே கஷ்டப் பட்டு மீண்டும் பணம் செலவு செய்து கியூபுக்கு அநியா யமாக அளவுக் கதிகமாக பணம் கட்டுகிறார், 

அவரே மீண்டும் போஸ்டர், பேப்பர், பேனர், டீவி, எஃப் எம், இடையி லிருக்கும் ஏஜண்ட் வரை பணத்தைக் கடன் அல்லது கழுத்தை அறுக்கும் வட்டிக்கு வாங்கி செலவு செய்கிறார்.

தியேட்டர் வைத்தி ருக்கும் உங்கள் பங்கு என்ன?

உட்கார்ந்த இடத்துக்கு கன்டெண்ட் வருகிறது.
கூட்டம் குறைவாக இருந்தால் பார்க்கிங் வசூலும், கேண்ட்டீன் வியா பாரமும் குறைந்து தியேட்ட ருக்கு நஷ்டம் என்ற புலம்பல் வேறு!

தியேட்ட ருக்குக் கூட்டம் ஏன் குறை கிறது என்ற காரணம் உங்களோடு சேர்த்து எல்லோரு க்குமே தெரியும்… நன்றாக எடுக்காத சில படங் களைத் தவிர்த்து.

ஒசியில் உள்ளங்கை களிலும், படித்து கை நிறைய சம்பாதிப்ப வனும் திருட்டுத் தனமாகப் பார்த்தால் தியேட்ட ருக்கு எப்படி வருவான்?

இந்த இழி நிலைக்கு எதிராக சினிமா வின் முக்கிய அங்க மான நீங்கள் போராடி யிருக்கிறீர் களா?
வீதிக்கு வந்திருக் கிறீர்களா?

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்.

சுயநலம் அவசியம் வேண்டும்..

அது வாத்து முட்டை மேல் இருக்கும் வரை பிரச்சனை யில்லை.

அந்த வாத்தை வயிற்றை அறுக்கும் சுய நலம் தான் எல்லோ ருக்குமே கேடு.

இப்போது ஒரு தயாரிப் பாளராகச் சொல் லுங்கள்.. நடவடிக்கை அவசியமா?

வெட்டப் படப் போவது களையா, கிளையா அல்லது மரமா, பயிரா?

இப்போதும் நெஞ்சில் கை வைத்துச் சொல்லு ங்கள்.

சரி, நாம் எதற்காக, யாருக் காகப் படம் தயாரிக் கிறோம்?
20% நஷ்டப் பட்டால் அது நல்ல தொழில்.

50% நஷ்டப் பட்டால் நிறைய யோசித்து சரி செய்ய வேண்டிய தொழில்.

அதுவே 90% நஷ்டப் பட்டால் அவசியம் மறு யோசனை க்கு உட்படு த்தப்பட வேண்டிய தொழில்.

நாம்.. அதாவது தியேட்டர் அதிபர்களோ அல்லது விநியோகஸ் தர்களோ அல்ல, தயாரிப் பாளர்கள் எந்த நஷ்ட நிலையில் இருக்கிறோம்?
கண்ணாடி கொண்டு தேட வேண்டாம் எல்லார் கையிலும் புண்.

மொத்தத்தில் சங்கம் எடுக்கப் போகும் ‘ஆப்பரேசன் வீடிங்- Operation Weeding’ என்ற ஸ்டிரைக் அவசியம் என்பது என் போன்ற தயாரிப்பா ளர்களின் நிலைப் பாடு!
Tags:
Privacy and cookie settings