சென்னை பாண்டி பஜார் காவல் நிலைய த்தில் திருநங்கை தாரா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகார த்தில் திடுக்கிடும் தகவல் வெளி யாகி யுள்ளது.
சென்னை சூளைமேடு, நமச்சிவாய புரத்தைச் சேர்ந்தவர் திருநங்கை தாரா. இவர், இன்று அதிகாலை பாண்டி பஜார் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளி த்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனும திக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாப மாக உயிரி ழந்தார்.
இது குறித்து சகோதரன் என்ற அமைப்பின் பொது மேலாளர் ஜெயா கூறுகை யில், "தாராவின் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை, பாண்டி பஜார் போலீஸார் எதோ ஒரு காரணத் துக்காக கைப்பற்றி யுள்ளனர்.
அது தொடர்பாக அவர், இன்று அதிகாலை 5 மணி யளவில் பாண்டி பஜார் காவல் நிலைய த்துக்குச் சென்று ள்ளார். அப்போது அங்குள்ள போலீஸார், தாராவை தகாத வார்த்தையால் பேசியு ள்ளனர்.
இதில் மன முடைந்த தாரா, பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துள்ளார். போலீஸ் நிலைய த்தின் எதிரிலேயே இந்த சம்பவம் நடந் துள்ளது.
அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸார், தாராவைப் பார்த்து செத்துப்போ என்று கூறியதோடு, நெருப்பை அணைக்க மணலை அவர் மீது போட் டுள்ளனர்.
மேலும், உடனடி யாக அவரை மருத்துவ மனைக்கும் அழைத்துச் செல்ல வில்லை. இதனால் தாரா இறந்து விட்டார்.
தாராவுக்கு வேலை வாய்ப்பு எதுவும் இல்லை. இதனால் அவர் பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.
பொதுவாக இந்த சமுதாய த்தில் திரு நங்கைகள் பல்வேறு பிரச்னை களை சந்திக் கின்றனர். குறிப்பாக வாடகை க்கு வீடு கேட்டால் கூட மற்றவர் களை விட இரண்டு மடங்கு வாடகை வசூலிக்கப் படுகிறது.
வேலை வாய்ப்பு இல்லா ததால் பாலியல் மற்றும் பிச்சை எடுக்கும் தொழிலு க்கு திரு நங்கைகள் தள்ளப் படுகின்றனர். இந்த தொழிலை விருப்பம் இல்லாமல் அவர்கள் செய்து வருகி ன்றனர்.
திருநங்கை களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங் கினால் இது போன்ற தொழிலில் அவர்கள் ஈடுபடுவது குறையும். மேலும், திருநங்கை களை போலீஸார் மதிப்ப தில்லை.
உதாரண த்துக்கு சில மாதங் களுக்கு முன்பு திரு நங்கை களின் செல்போன் நம்பர் களில் பேசிய சைக்கோ வாலிபர் அவர்களை அசிங்க மாக திட்டினார்.
இது தொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப் பட வில்லை.
தற்போது கூட தாராவை தகாத வார்த்தை யால் திட்டியதால் அவர் போலீஸ் நிலையம் முன்பே தற்கொலை க்கு முயன் றுள்ளார்.
அவரை காப்பாற்ற கூட போலீஸார் முயற்சிக்க வில்லை. இதைக் கண்டித்து பாண்டி பஜார் போலீஸ் நிலையம் முன்பு போராட்ட த்தில் ஈடுபட் டுள்ளோம்" என்றார்.
போலீஸ் வட்டா ரங்கள் கூறுகையில், "தி.நகர் ஹபிபுல்லா சாலை யில் நேற்றிரவு பாலியல் தொழில் நடப்பதாக எங்களு க்கு தகவல் கிடைத்தது.
உடனடி யாக சம்பவ இடத்துக்கு சென்ற போது அங்கு திரு நங்கைகள் சிலர் நின்றனர்.
அவர் களை கலைந்து செல்லும் படி தெரிவி த்தோம். அப்போது குடிபோதை யில் இருந்த சில திருந ங்கைகள் எங் களிடம் தகராறு செய்தனர்.
இதனால் அங்கு நிறுத்தப் பட்டு இருந்த இருசக்கர வாகன த்தையும், செல்போனையும் போலீஸ் நிலைய த்துக்கு கொண்டு வந்தோம்.
இன்று அதிகாலை போலீஸ் நிலைய த்துக்கு வந்த தாரா, பணியில் இருந்த போலீஸாரை தகாத வார்த்தை யால் பேசினார். அப்போது கூட நாங்கள் அமைதி யாக இருந்தோம்.
போலீஸ் நிலையத் திலிருந்து வெளியே சென்ற தாரா, தீக்கு ளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரை காப்பாற்ற முயற் சித்தோம். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.
தாராவின் தற்கொலை சம்பவ த்தால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையிலும், பாண்டி பஜார் போலீஸ் நிலைய த்திலும் திருநங் கைகள் திரண்டு ள்ளனர். இதை யொட்டி அங்கு போலீஸார் குவிக்கப் பட்டு ள்ளனர்.