முகலாய மன்னன் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாகத் தாஜ்மஹாலைக் கட்டினார். மும்தாஜின் பிரிவுத் துயரில் இருந்து மீள முடியாமல் இந்த நினைவுக் கட்டடத்தை எழுப்பினார் ஷாஜகான்.
அந்த அன்புக்கு இணையாக, உயிரிழந்த தனது காதல் மனைவியைப் பிரிய மனமில்லாமல் அவருடைய சடலத்துடன் ஆறு நாட்கள் ஒரே அறையில் வாழ்ந்துள்ளார் ரசல் டேவிசன்.
அதற்கு அவர் சொல்கிற காரணங்கள் கலங்க வைக்கின்றன.
காதல் தம்பதி...
இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதி ரசல் டேவிசன் - வென்டி டேவிசன். அன்பு கலந்த அவர் களுடைய வாழ்க்கைப் பயணத்தில் விதி அவ்வளவு எளிதில் நுழையும் என்று தம்பதி சற்றும் எதிர் பார்க்க வில்லை.
வென்டி டேவிசனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட அவருக்குக் கர்ப்பப்பை வாய் புற்று நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நோயின் தாக்கம் அவர்க ளுடைய வாழ்க்கை யில் மிகப் பெரிய அதிர் வலை களை ஏற்படுத்தியது.
ஆனாலும் தளர்ந்து விடாத அந்த தம்பதி சிகிச்சை எடுக்க முடிவெடு த்தனர். மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதால், வென்டியின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் மருத்து வர்கள் கையில் ஒப்படைக்க அவர்க ளுக்கு விருப்பம் இல்லை.
அதன் காரண மாகத் தங்களுக்குத் தெரிந்த சிகிச்சை வழிமுறை களை வீட்டிலேயே பின்பற்றி வந்தனர். இந்த நிலையில், 2014-ல் ''இன்னும் 6 மாத காலம் மட்டுமே வென்டி உயிருடன் இருப்பார்'' என மருத்து வர்கள் கூறி யுள்ளனர்.
இதைக் கேட்ட அந்தத் தம்பதி இருக்கிற நாள் களை அணு அணுவாக அனு பவிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற் கொண்டனர். வென்டிக்குப் போராட்டக் களமாக இருந்தாலும் ரசல் டேவிசனின் அன்பும்,
அரவணை ப்பும் மிகுந்த தெம்பையும் உற்சாக த்தையும் கொடுத் துள்ளது. அதனால், மருத்து வர்கள் கொடுத்த கெடு காலத்தைக் கடந்து வாழ்ந்து வந்தார் வென்டி.
அன்பும் அரவணைப்புமே மருந்து...
அவருடைய அந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்க வில்லை. புற்று நோயின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.
அதனால், வலியால் துடித்தார் வென்டி. அதைக் கண்டு கலங்கிய ரசல், வென்டியை மருத்துவ மனையில் அனுமதிக்க முடி வெடுத்தார்.
ஆனால், அதை ஏற்காத வென்டி தனது கடைசிக் காலத்தைத் தம்பதியாக வலம் வந்த வீட்டிலேயே கழிக்க வேண்டும் என்று விரும்பினார்.
அதன் காரண மாகச் சுற்றுப் பயணத்தை நிறுத்தி விட்டு வீடு திரும்பினர் தம்பதி. பின்னர் வென்டிக்கு வலி அதிகரித் ததால் அங்குள்ள ஒரு மருத்துவ மனையில் சிகிச்சைக் காக அனுமதி த்தார் ரசல்.
காதல் மனைவி
புற்று நோயாளி களுக்குக் கடைசிக் காலத்தில் கொடுக்கப் படும் ஆறுதல் சிகிச்சை யை மருத்து வர்கள் அளித்தனர். மருத்து வர்களின் மருந்தால் மட்டு மல்ல, ரசலின் அன்பு மருந்தாலும் விடை பெற்றுக் கொண்டி ருந்தார் வென்டி.
மருத்துவ மனையில் உயிரை விட மன மில்லாத வென்டி யின் நிலையை உணர்ந்து தங்களுடைய சொந்த வீட்டுக்குக் காதல் மனைவியை அழைத்து வந்தார் ரசல்.
இதனைத் தொடர்ந்து வென்டி டெவிசன் உயிரிழந்தார். இறந்து போன காதல் மனைவி யைப் பிரிய மன மில்லாமல் ஆறு நாட்கள் மனைவி யின் உடலுடனேயே இருந் துள்ளார் ரசல் டேவிசன்.
இதயத்தைச் சிதறடித்து விட்டது!
ரசல் டேவிசனின் இந்த நடவடிக்கை நீதிமன்ற த்துக்குத் தெரியவர நீதி மன்றமும் அவருடைய மனைவியை வைத்துக் கொள் வதற்கு உரிமை உள்ளது என்று உறுதி படுத்தி யுள்ளது.
இது தொடர்பாகப் பேசிய ரசல் டேவிசன், "வென்டியின் பிரிவுத் துயர் இதய த்தைச் சிதறடித்து விட்டது. அவளுட னான அந்த அன்பு வாழ்க்கையை மறக்க முடிய வில்லை.
அதன் காரண மாக என்னுடைய வீட்டிலேயே அவளை வைத்தி ருந்தேன். அவளை அடக்கம் செய்யவோ அல்லது பிண வறையில் வைக்கவோ மனமில்லை.
அதனால் அவளுடைய அறையில் வைத்திருந்தேன். அவள் உடல் இருந்த அறையிலேயே நானும் இருந்தேன்" என்றார்.
மரண வலியை மறந்துவிடச் செய்யும் வலிமை காதலுக்கு உள்ளது என்பதை பல ஆயிரம் ஜோடிகள் உணர்த் திடினும், ரசல் டேவிசனின் அன்பும் அசாதாரண மானது தான்!