மெரிக்க அதிபராகப் பொறுப் பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப்-ஐ அந்நாட்டின் பெரும் பகுதி மக்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலை யில், அதிபர் பதவியி லிருந்து விலகிய பின் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்த முன்னாள் அதிபர் பராக் ஒபமா,
கடந்த வாரம் பத்திரிக்கை யாளர்கள் புடைசூழ பள்ளி, கல்லூரியில் தன்னுடைய உரையை ஆற்றினார்.
அவர் ஆற்றிய உரையில், ஒரு இடத்தில் கூட அமெரிக்கா வின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றி பேச வில்லை. இந்தச் சந்திபிற் கான காரண மாக, அவர் கூறியது,
அமெரிக்காவில் அடுத்த தலை முறை தலைவர் களை உருவாக்க எடுக்கப் படும் முதல் முயற்சி என்றார். பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஒபாமா ஆற்றிய உரையில் என்ன பேசினார்?
மூன்று மாத ஓய்வுக்குப் பிறகு, எப்போதும் அணிந்தி ருக்கும் டை இல்லாமல், அவருடைய சொந்த மாகாணமான சிகாகோ வில் தன்னுடைய மௌனத்தை கலைத்துப் பேசத் தொடங்கினார்.
400-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூடியிருந்த சிகாகோ பல்கலைக் கழகத்தில், அடுத்த தலைமுறை இளைஞர் களுடன் அவர் பேசினார்.
ஒபாமாவு க்கு மாணவர்கள் அனைவரும் ஒட்டு மொத்த மாக எழுந்து நின்று வரவேற்பு கொடுத்தனர். பிறகு, அவருடன் 6 மாணவர்கள்
மற்றும் கல்வி யாண்டு முடித்த சில மாணவர்கள் கலந்து கொண்டு கலந்துரை யாடலில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் மத்தியில் குடியுரிமை பற்றிய விழிப்பு உணர்வு கொண்டு வரும் நோக்க மாக அந்த உரையாடல் அமைந்தது.
55 வயதான முன்னாள் அதிபர் ஒபாமா, தொடர்ந்து இரண்டு முறை வெள்ளை மாளிகையை அலங்க ரித்தவர்.
தற்போது அமெரிக்கா வின் எதிர் காலத்தைப் பற்றி தாம் மிகவும் நம்பிக்கை கொண்டு ள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போதுள்ள தலைவர் களைத் தாண்டி, இளம் தலை முறையினர் அரசியலு க்கு வர வேண்டும் என்பதே ஒபாமா வின் எதிர் பார்ப்பாக இருந்தது.
மாணவர்க ளிடையே ஒபாமா பேசுகை யில், "என்னுடைய அடுத்தக் கட்ட வேலை யாக நான் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிரு க்கிறேன்.
ஏற்கனவே நான் இந்தக் கல்லூரி யில் சட்டம் குறித்த பாடம் நடத்தி யுள்ளேன். நான் ஒரு முக்கிய மான விஷய த்தைச் செய்ய முடியும் என்றால்,
அது இந்த நாட்டின் அடுத்த தலை முறையான உங்களை, ஆகச்சிறந்த தலைவர் களாக மாற்ற எடுக்கும் முயற்சி யாகத் தான் இருக்க முடியும்" என்றார்.
தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பார்வை யாளர்களின் கேள்வி களுக்கு ஒபாமா பதிலளி த்தார். அப்போது, ட்ரம்ப் குறித்த விமர்சனங் களை கவனத் துடன் தவிர்த்தார்.
தான் ஒரு முன்னாள் அதிபர் என்பதாலும், வெள்ளை மாளிகையில் ஒருவரை விமர்சிப்பது முறை யல்ல என்பதாலும் ட்ரம்ப் தொடர்பான கேள்வி களை அவர் தவிர்த்தார்.
வெள்ளை மாளிகை யில் இருந்து வெளியேறியது முதல் இது வரை ஒபாமா எந்த ஒரு பொது நிகழ்ச்சியி லும் கலந்து கொள்ள வில்லை. ட்விட்டரில் மட்டும் அவ்வபோது சில பதிவுகளை வெளியிட்டுக் கொண்டி ருந்தார்.
இப்போதுள்ள ட்ரம்ப் தலைமை யிலான அமெரிக்க அரசு ஒபாமா கொண்டு வந்த சில திட்டங் களை முடிவுக்குக் கொண்டு வர முயற்சித்து வருகிறது.
"சிரியா நாட்டி லிருந்து வரும் அனைத்துப் பிரச்னை களுக்கும் ஒபாமாவே காரணம்" என்று ட்ரம்ப் குற்றம் சாட்டிய போதிலும், அதற்குப் பதிலளிக் காமல் ஒபாமா அமைதியகவே இருந் துள்ளார்.
அமெரிக்கா வில் நடந்த வன்முறை களுக்கும், டமாஸ்கஸ் பகுதியில் நடந்த ரசாயனத் தாக்குதல் களுக்கும் ஒபாமா தான் பொறுப்பு என்று குடியரசுக் கட்சியினர் குற்றம் சாட்டினாலும்
ஒபாமா இந்த மேடையில் ட்ரம்ப்பை பற்றி ஒரு வார்த்தைக் கூட தவறாக பேசாமல், அதுபற்றிய கேள்வி களுக்கு பதிலளிக் காமல் தவிர்த்து விட்டார்.
ஒபாமாவின் இந்தச் செயல், ட்ரம்ப்-ஐ நேரடி யாகத் தாக்கா விட்டாலும் சற்றே கலங்க வைத்தி ருக்கும்.
அடுத்த தலைமுறை மக்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஒபாமாவின் கருத்து, அமெரிக்கா வுக்கு மட்டும் அல்ல; இந்தியா வுக்கும் பொருந்தும்.
இப்போ தெல்லாம் எங்காவது பிரச்னை நடந்தால், அரசை எதிர் பார்த்து இளைஞர் கள் செயல் படுவது இல்லை. எந்தப் பிரசனை யாக இருந்தாலும் வீதியில் இறங்கி பணியாற் றுவதோ,
போராடுவதோ இங்குள்ள இளைஞர் களுக்கு தானாகவே வந்து விட்டது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, கடந்த ஜனவரி மாதம் சென்னை மெரினா வில்
இளைஞர்கள் தன்னெழுச்சி யாகத் திரண்டு அறவழி யில் நடத்திய போரட்டமே அதற்குச் சாட்சி எனலாம். அந்தப் போராட்ட த்தின் போது கட்டுக் கோப்பாக இளைஞர்கள் செயலாற் றியது,
அடுத்த தலை முறையின ருக்கு உள்ள பொறுப்பு உணர்வை வெளிப் படுத்தி விட்டது. எனவே, தமிழகம் உள்பட இந்தியா முழுவதற்குமே இனி அடுத்த தலை முறையி னரின் ஆட்ச ிதான் தேவைப் படுகிறது.
ஒபாமா வின் கருத்துக்கள் அமெரிக்க இளைஞர் களின் காதுகளு க்கு கேட்கிறதோ? இல்லையோ? தமிழ் நாட்டுக்கு கட்டாயம் கேட்க வேண்டும்!