பனங்கற்கண்டு அல்லது கல்லாக் காரம். சித்த வைத்தியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இது பனைநீர் அல்லது பதநீரைக் காய்ச்சிப் பெறப்படும் ஒரு பொருள்.
சர்க்கரைக்கு மாற்றாக பயன் படுத்தப்படும் இதில் கால்சியம், இரும்பு, வைட்ட மின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
மொத்தம் 24 வகையான இயற்கைச் சத்துகள் நிறைந்து ள்ளதால் இது சர்க்கரை நோயாளி களுக்கு நல்லதொரு வரப்பிர சாதமே. ஆனாலும் அதை அளவுடன் சேர்த்துக் கொள்ள வேண் டியது அவசிய மாகும்.
இயற்கை யான இனிப்புப் பொருளான பனங்கற் கண்டு, ரத்த அழுத்த த்தையும் குறைக்கக் கூடியது.
அன்றாடம் நாம் காலையில் கண் விழிக்கும் கணம் முதல் இரவு கண்ணுறங்கும் வரை (உண்ணும் / அருந்தும்) காபி, டீ அல்லது
ஜூஸ், பிஸ்கட், சாக்லேட் மற்றும் தின்பண்ட ங்கள் என இனிப்பு சார்ந்த எல்லா வகை உணவுப் பண்டங்க ளிலும் நீக்கமற நிறைந் திருப்பது சர்க்கரையே.
இன்றைக்கு பெருவாரி யான மக்கள் பல்வேறு நோய்களின் பிடியில் சிக்கித் தவித்து வருவ தற்குக் காரணம் இந்தச் சர்க்கரையே. ஆகவே சர்க்கரை க்கு மாற்றாக பனங்கற் கண்டைப் பயன் படுத்துவோம்.
இதன் விலை அதிகமாக இருந்தாலும் கூட நோயின் பிடியி லிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள இதைப் பயன் படுத்துவோம்.
அதே நேரத்தில் பனை வெல்லம், நாட்டுச் சர்க்கரை போன்ற வற்றையும் பயன் படுத்தலாம். நமது முன்னோர் பாலுடன் பனங்கற் கண்டு சேர்த்துக் காய்ச்சியே பயன்படுத்தி வந்தார்கள்.
இதனால் அவர்கள் தம் குரல்வளம் மாறாமல் இருந்த தோடு சிறுநீர் கழிக்கும் போது ஏற்படக்கூடிய எரிச்சல், காய்ச்சலின் போது வரக்கூடிய உடல் சூடு போன்ற வற்றைத் தணிக்கும்.
குறிப்பாக இதில் உள்ள குளுக்கோஸ் மெலிந்து, தேய்ந்து வாடி ஒட்டிப் போன குழி விழுந்த கன்னத்துடன் காட்சியளிக்கும் குழந்தைகளின் உடல் நிலையைச் சீராக்கி நல்ல சக்தியைத் தரும்.
இதன் பலனை அறிந்து கொண்டு குழந்தைப் பருவம் முதலே பாலுடன் பனங்கற் கண்டு சேர்த்துக் குடிக்கக் கொடுத்து வர வேண்டியது தாய் மாரின் இன்றைய தலையாய கடமை களில் ஒன்றாக இருக்கிறது.
இப்படி பாலுடன் சேர்த்துக் கொடுப்பதால் வெப்பத்தைத் தணிக்கும்.
சின்னம்மை, பெரியம்மை மற்றும் வெப்பத்தினால் ஏற்படக் கூடிய நோய்களில் அவதிப் படுவோருக்கும் இதை அடிக்கடி கொடுத்து வந்தால் எந்தவித பக்க விளைவு களும் இல்லாமல் வெப்பம் தணியும்.
மேலும் ஏதாவது ஒரு வகையில் இதை அடிக்கடி பயன் படுத்தி வந்தால் உடல் வெப்பம் நீங்குவ தோடு தாகம் தணியும். அதே நேரத்தில், சூட்டைத் தணித்து சளித் தொல்லையை ஏற்படுத்தி விடுமோ? என்று பயப்படத் தேவை யில்லை.
கர்ப்பிணி கள் சிறுநீர் பிரியாமல் மிகவும் அவதிப் படுவார்கள். அத்தகைய சூழலில் வெந்நீருடன் பனங்கற் கண்டு சேர்த்துக் குடிக்கக் கொடுத்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
சுக்கு, மிளகு, திப்பிலியுடன் சேர்த்துக் கொடுப்பதால் இருமல் குணமாகும். பாடகர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் போன்ற குரல் வழி பணி ஆற்றக் கூடியவர் களுக்கும் இது பெரிதும் நிவாரணம் அளிக்கிறது.
சங்கீத வித்வான்கள் பனங்கற் கண்டைப் பாலுடன் சேர்த்து அருந்து வார்கள். இது அவர்களது குரல் வளத்தை குறை யாமல் பாதுகாக்கும்.
பனங்கற் கண்டு பால் என்பது மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங் களில் பிரசித்திப் பெற்றது. பாலுடன் மிளகு, பனங்கற் கண்டு சேர்த்துக் கொடுப் பார்கள்.
இந்தக் கலவை யுடன் பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்துக் கடைந்து தருவதை பூண்டுப் பால் என்பார்கள்.
தேவையானவை :
உரித்த பூண்டுப் பற்கள் - கைப்பிடி அளவு,
பால் - .50 மிலி,
தண்ணீர் - .50 மிலி,
மிளகுத் தூள் - ஒரு டேபுல் ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டேபுல் ஸ்பூன்
செய்முறை
பால், தண்ணீர், பூண்டுப் பற்கள் சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து கீழே இறக்குவதற்கு முன் மஞ்சள் தூள், மிளகுத் தூள் சேர்க்க வேண்டும்.
அதன் பிறகு அடுப்பி லிருந்து கீழே இறக்கி அவற்றை நன்றாகக் கடைந்து பனங்கற் கண்டு சேர்த்துக் குடித்தால் சளித் தொல்லை,
இருமல் விலகு வதோடு மலச்சிக் கலும் விலகும். பால் கொடுக்கும் தாய்மார் களுக்கும் சத்தான ஓர் உணவாகப் பயன் படுகிறது.
பசியின்மை, செரிமானக் கோளாறு, வாய்வுத் தொல்லையால் அவதிப் படுபவர்கள் ஓமம், சுக்குப் பொடி, மிளகுப் பொடி, ஏலக்காய், திப்பிலி யுடன்
பனங்கற் கண்டு சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து அருந்தி னால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இந்தக் குடிநீர் உடல் வலியைப் போக்கு வதோடு உணவுக் குழாயில் ஏற்படும் பிரச்னை களையும் சரி செய்யும்.
ஆஸ்துமா நோயாளிகள் ஓமம், ஆடா தொடை அல்லது அதன் இலைப் பொடி, கசகசாவுடன் பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் தயாரித்துக் குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
மேலும் பனங்கற் கண்டானது வாதம், பித்தம், கபம் போன்ற வற்றை நீக்குவ துடன் இதை உண்பவர் களை திடகாத்திரத் துடன் இருக்கச் செய்யும்.
பாலில் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால் மார்புச் சளியை நீக்குவதோடு தொண்டைப் புண், தொண்டை வலி போன்ற வற்றையும் குணப் படுத்தும். டைபாய்டு, காய்ச்சல் போன்ற வற்றை குறைக்கும்.
பனங்கற் கண்டில் உள்ள கால்சியம் பற்களை உறுதிப் படுத்தி ஈறுகளில் உள்ள ரத்தக் கசிவை தடுக்கும். மேலும், பற்களின் பழுப்பு நிறத்தைப் போக்கக் கூடியது.
சொறி, சிரங்கு உள்ளிட்ட தோல் நோய்களில் இருந்து நிவாரணம் தருவதுடன் கண் நோய், ஜலதோஷம், டி.பி உள்ளிட்ட பல்வேறு நோய்க ளுக்கு அருமருந்தாக அமைகிறது.
பனங்கற் கண்டு பாயசம்
பனங்கற் கண்டில் பாயசம் செய்து சாப்பிடுவ தாலும் சில நன்மைகள் நம்மை வந்து சேரும். பாதாம் பருப்பை ஊற வைத்து
மிக்ஸி யில் போட்டு பொடித்து வைத்து க்கொள்ள வேண்டும். பிறகு காய்ச்சிய பாலுடன் பொடித்த பாதாம் சேர்த்துக் கிளற வேண்டும்.
நெய்யில் பொடித்த முந்திரி, உலர் திராட்சையை வதக்கிச் சேர்ப்பதோடு, பனங்கற் கண்டும் சேர்த்துக் கிளறி இறக்கி னால் பனங்கற் கண்டு பாயசம் ரெடி. சத்தான ஓர் உணவாகும்.
கோதுமைக் குருணையு டன் பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்து தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளற வேண்டும்.
அத்துடன் ஏலக்காய், முந்திரி, திராட்சை சேர்ப்பதுடன் நெய், பனங்கற் கண்டு சேர்த்து செய்யப் படும் இந்த பனங்கற் கண்டு பாயசமும் சத்தான உணவே.
இளநீர் பானம்
லேசான வழுக்கை உள்ள இளநீருடன் பனங்கற் கண்டு, ஏலக்காய் சேர்த்து மிக்ஸி யில் ஓட விட்டு எடுத்தால் அருமை யான பானம் ரெடி.
இது அருந்த அருந்த அருமையாக இருப்பதோடு ஹெல்த்தியான ஒரு பானமும்கூட.
இது அருந்த அருந்த அருமையாக இருப்பதோடு ஹெல்த்தியான ஒரு பானமும்கூட.