செம்மரங்களை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கிய சங்கீதா சாட்டர்ஜியுடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் குறித்து விசாரணை நடத்த திருப்பதி போலீஸார் தமிழகம், கர்நாடகத்துக்கு விரைந் துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சங்கீதா சாட்டர்ஜி. விமானப் பணிப் பெண்ணாக பணி யாற்றிய இவர், மாடல் அழகி யாகவும் வலம் வந்தார்.
இந்நிலை யில் அவர் சென்னையை சேர்ந்த லட்சுமணன் என்பவரை 2-ஆவது திருமணம் செய்து கொண்டார்.
லட்சுமணன் செம்மரக் கடத்தல் தொழில் செய்து வந்தார். கணவருடன் சேர்ந்து சங்கீதாவும் பல ஆண்டுகளாக செம்மரக் கடத்திலில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலை யில் போலீஸாரிடம் பிடிபடாமல் போக்கு காட்டி வந்த சங்கீதா, கடந்த மார்ச் 28-ஆம் தேதி சித்தூர் போலீஸாரிடம் சிக்கினார். தற்போது சித்தூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார் சங்கீதா.
சங்கீதா விடம் போலீஸார் நடத்திய விசாரணை யில் செம்மரக் கடத்தல் தொழிலில் தன்னுடன் ஈடுபட்ட முக்கிய பிரமுகர்கள் குறித்த விவரங் களை தெரிவித்த தாக தெரிகிறது.
சங்கீதா கொடுத்த தகவலின் பேரில் அந்த முக்கிய புள்ளி களை பிடிக்க தமிழகம், கர்நாடகா வுக்கு ஆந்திர போலீஸார் விரைந் துள்ளனர்.
இதனிடையே சங்கீதாவின் அனைத்து சொத்து களையும் முடக்கும் நடவடி க்கையில் சித்தூர் போலீஸார் ஈடுபட் டுள்ளனர்.
நீதிமன்ற த்தில் உத்தரவு பெற்று சங்கீதாவை போலீஸ் கஸ்டடி யில் வைத்து விசாரணை நடத்தவும் திட்ட மிட்டுள்ளது.