இன்னும் இரண்டு ஆண்டு களில் இந்தியா வின் மிகச் சிறந்த நிறுவன மாக பதஞ்சலி திகழும்' என்று பாபா ராம்தேவ் உறுதியாகத் தெரிவித் துள்ளார்.
அதற்கான முயற்சி களைத் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அவர் கூறி யுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் செய்தி யாளர்கள் சந்திப்பில் பேசிய பாபா ராம்தேவ், 'பதஞ்சலி நிறுவனம், கடந்த நிதியாண்டில் 10,561 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி யுள்ளது.
பதஞ்சலி நிறுவன த்தின் தயாரிப்புகள் குறித்து போலியான தகவல் களை சிலர் பரப்பு கின்றனர்.
அனைத்து பொய் விமர்சனங் களையும் உடைத்து, இன்னும் இரண்டு ஆண்டு களில் இந்தியா வின் மிகச் சிறந்த நிறுவன மாக பதஞ்சலி திகழும்.
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குழந்தை களுக்கு, பதஞ்சலி நிறுவனம் சார்பாக பள்ளி தொடங்க திட்ட மிட்டுள்ளோம்.
பதஞ்சலி லாபம் ஈட்ட இயங்கி வரும் நிறுவனம் அல்ல. மக்களின் நலன் தான் முக்கியம்', என்று தெரிவித் துள்ளார்.
இன்னும் ஐந்து ஆண்டுகளில் பதஞ்சலி தயாரிப்புகள், வெளிநாட்டு நிறுவனங் களை நாட்டை விட்டே ஓட வைக்கும்’
என, பாபா ராம்தேவ் சில நாள் களுக்கு முன்னர் சவால் விடுத்தது குறிப்பிடத் தக்கது. பாபா ராம்தேவின் இந்த சவால் குறித்து நெட்டிசன்ஸ் கடுமை யாக விமர்சித்து வருகின்றனர்.