நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் களைச் சந்தித்தார். அந்த சந்திப்பின் ஒவ்வொரு நாளும் அரசியல் தொடர்பான கருத்து களைத் தெரிவித்தார்.
கடைசி நாளன்று பேசுகையில், "போருக்குத் தயாரா குங்கள்" என்று சொல்லி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்தநிலை யில், தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்த கி. வீரலெட்சுமி போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினி காந்தின் இல்லத்தை முற்றுகை யிடச் சென்று, போலீஸாரால் கைது செய்யப் பட்டார்.
சென்னை தேனாம் பேட்டை காந்திமதி திருமண மண்டபத்தில் வைக்கப் பட்டிருந்த அவரிடம், "ஏன் இந்த திடீர் முற்றுகை?" என்ற கேள்வியோடு தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.
"ரஜினிகாந்த், தமிழக த்தில் வாழ்ந்துள்ள இந்த 42 ஆண்டு காலத்தில் தமிழ் மக்களின் என்னென்ன பிரச்னை களுக்காக குரல் கொடுத்துள்ளார்?
காவிரி நதி நீர் பிரச்னையில் துவங்கி, தமிழர் களின் வாழ்வா தாரப் பிரச்னை வரை அவர் என்ன மாதிரியான நிலைப் பாட்டை எடுத்திரு க்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.
தமிழக த்தில், தமிழர்க ளால் சம்பாதித்த பணத்தை கர்நாட காவுக்குக் கொண்டு சென்று ஒன்றுக்கு, இரண்டாக தொழிற் சாலைகளை நிறுவி அங்கிரு க்கும் கன்னட இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தி ருக்கிறார்.
'தலைவா' என்று துடிக்கும் தமிழக இளை ஞர்கள் ரஜினியின் கண்ணு க்குத் தெரிய வில்லையா?
காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பாக, கர்நாடகா வில் வாழும் தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப் பட்டது மட்டுமல்லாமல், பலரது உயிர்களும் பறிக்கப் பட்டன.
அப்போது, நடிகர் ரஜினிகாந்த் என்ன செய்து கொண்டி ருந்தார்? ஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங் களில் இருக்கும் நடிகர் சங்கங் களில் ஒரு தமிழன் போட்டி போட முடியுமா? அல்லது வாக்களிக்க முடியுமா?
ஆனால், அந்த மூன்று மாநிலங் களின் நடிகர்களும் இங்கிரு க்கும் நடிகர் சங்கங் களில் போட்டி போடுகி றார்கள். தங்களின் ஆளு மையைச் செலுத்து கிறார்கள். இது தமிழ் நடிகர் களுக்கு எதிரானது.
இது அவருக்குப் புரிகிறதா? அல்லது புரியாதது போல இருக்கி றாரா? எல்லா வற்றுக்கும் மேலாக, தமிழக த்தைச் சுற்றி இருக்கும் மூன்று மாநில ங்களும்,
தமிழக மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நதிகளில் தடுப்பணை கட்டுவது தொடர் பாக, ரஜினிகாந்த் இது வரை குரல் எழுப்பி இருக்கிறாரா? துண்டு அறிக்கை தான் வெளியிட்டி ருக்கிறாரா?
பருவ மழை பொய்த்துப் போய் நூற்றுக் கணக்கான தமிழக விவசாயி கள் தற்கொலை செய்து கொண்ட போது, ஆயிரம், ரெண்டாயிரம் ரூபாய் பண உதவிகூட கொடுக்க வில்லையே இவர்.
'கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் தான் எங்கள் தந்தையார் பிறந்தார், எங்கள் பூர்வீகமே கிருஷ்ணகிரி தான்' என்று சொல்லும் இதே ரஜினிகாந்த்,
அந்த மாவட்ட த்தைச் சேர்ந்த தமிழர்கள் பிழைப்பு தேடி ஆந்திராவு க்குச் சென்ற போது... ஆந்திர வனத்துறை யால் திட்டமிட்டு படுகொலை செய்யப் பட்டபோது ஒரு கண்டன அறிக்கையைக் கூட பதிவு செய்ய வில்லையே?
லட்சக்கணக் கான தமிழ் மக்கள், ஈழத்தில் கொத்துக் கொத்தாக சுட்டு வீழ்த்தப் பட்ட போது, வைக்கோல் போருக்குள் ஒளிந்தி ருந்தாரா ரஜினிகாந்த்?
பச்சைத் தமிழன் என்று சொல்லும் இவர், இனவாத சிங்கள அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கலாமே? அப்போ தெல்லாம் அமைதி யாக இருந்து விட்டு, இப்போது 'போருக்குத் தயாரா குங்கள்' என்று சொல்கிறார்.
உலகிலேயே முதன் முதலாக பிரமாண்ட கடற் படையை கட்ட மைத்து உலகம் முழுவதும் போரிட்டு தனது எல்லை களை விரிவாக் கியது தமிழர் இனம்.
அப்படிப் பட்ட இன மக்கள் வாழும் இந்த மண்ணு க்குப் பஞ்சம் பிழைக்க வந்த ரஜினிகாந்த், போருக்கு அறை கூவல் விடுக் கிறார்.!
தமிழர் களுக்கே போரா? ரஜினிகாந்த் அரசியலு க்கு வரட்டும்; வர வேண்டாம் என்று நாங்கள் சொல்ல வில்லை. அவரது சொந்த மாநில மான கர்நாடகா வில் போய் அரசியல் செய்யட்டும்.
இனி தமிழர் அல்லாதவர் தமிழகத் துக்கு வரலாம்; வாழலாம். ஆனால் அரசியலும், ஆட்சி அதிகார மும் தமிழர்க ளுக்கு மட்டும் தான்" என்றார்.