மணமேடையில் துணிச்சலாக நின்ற பெண்கள் !

மணப்பெண் என்றாலே, மனக்கண் முன் தோன்றுவது நாணத் தால் தலை குனிந்து நிற்கும் அலங்கார மங்கை.

மணமேடையில் துணிச்சலாக நின்ற பெண்கள் !
தற்கால பெண்கள் கல்வியறிவு பெற்றவர் களாவும், பொருளாதார, சமூக சுதந்திரம் பெற்று, தைரிய சாலிகளாகி விட்டாலும் கூட, திருமணம் என்று வரும் போது சில விஷய ங்கள் அப்படியே தொடர்கிறது.

ஆனால், மணப்பெண் குறித்த நமது மனக் கணிப்புகள், இந்தக் கட்டுரையை படித்தால் ஓரளவு மாறலாம். மண மேடையில் துணிச்சல் காட்டிய ஆறு மணமகள் களை பற்றி பார்க்கலாம்.

‘ரிவால்வர் ராணி’யாக மாறிய மணமகள்

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்புரில் துப்பாக்கி முனையில் மண மகனை கடத்தினார் ‘ரிவால்வர் ராணி’. ஹமீர்புர் மாவட்ட த்தில் 

இருந்து 70 கிலோ மீட்டர் தொலை வில் இருக்கும் மெளதாஹா நகரம் பத்மநாபன் பள்ளியில் திருமணச் சடங்குகள் நடந்துக் கொண்டி ருந்தன.
உற்றார்-உறவி னர்கள் குழுமி யிருந்த மண்டப த்தில் ஒரு எஸ்.யு.வி வாகனம் வந்து நின்றது. வண்டியில் இருந்து புயல் போன்று ஒரு பெண் இறங் கினார், அவருடன் இரண்டு ஆண் களும் இருந்தனர்.

மாப்பிள்ளை யின் நெற்றியில் துப்பாக்கியை வைத்த மிரட்டிய பெண், தன்னுடன் வருமாறு கட்டளை யிட்டார்; மண மகனுடன் வெளி யேறினார்.

பிறகு நடந்த விசாரணை யில், அந்த பெண் தனது காதலி என்றும், தனது விருப்பத் துடனேயே வெளியேறி யதாகவும் மணமகன் கூறி விட்டதால், 
ரிவால்வர் ராணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் காவல் துறை இரு வரையும் வழியனுப்பி வைத்தது.

திருமண த்தை நிறுத்த கதா நாயகர்கள் மணப் பெண்ணை கடத்திய காலம் மலை யேறி, கதா நாயகிகள் மண மகனை கடத்தும் காலம் வந்து விட்டது!
ராஜஸ்தான் மாநிலம், அல்வர் மாவட்ட த்தில் ஜியா ஷர்மா என்னும் 25 வயது மணப்பெண், குதிரை யில் அமர்ந்து திருமண மண்ட பத்திற்கு ஊர்வல மாக செல்ல முடி வெடுத்தார்.

மணமேடையில் துணிச்சலாக நின்ற பெண்கள் !
ராஜஸ்தான் மாநில த்தில், பாலின விகிதத்தில் பெண்களின் எண்ணி க்கை குறை வாக இருப்பது குறிப்பிடத் தக்கது. ஜியாவும், 

அவரது கணவர் லோகேஷ் ஷர்மாவும், வழக்க மான திருமண நடை முறைகளில் இருந்து மாறுபட்டு திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்தி ருந்தனர்.

பேஹ்ரோரில் பள்ளிக் கூடம் ஒன்றை நடத்தி வரும் ஜியாவின் அத்தையே ‘மணமகள் ஊர்வலத் திற்கான’ யோசனையைச் சொன்னார். 

இவர் தொடர்ந்து பல ஆண்டு களாக பெண்கள் முன்னேற்ற த்திற்காக பணி யாற்றி வருபவர் என்பது கூடுதல் தகவல்.

மாப்பிள்ளைத் தோழர்கள் மீது புகார் செய்தால்?
பிஹாரின் ரோஹ்தாஸ் மாவட்டம் மஞ்ஜி யாவோ கிராம த்தில் மாலை மாற்றிய பிறகு, மணப்பெண் திருமண மண்டப த்தில் இருந்து வெளி யேறும் முடிவை எடுத்தார்.
மாப்பிள்ளைத் தோழர்கள், திருமண த்தில் மோசமாக நடந்துக் கொண்டதை பார்த்த மணப்பெண் இந்த முடிவை எடுத்தார்.

மாப்பிள்ளைத் தோழர்கள், ஒருவர் மீது ஒருவர் உணவை வீசிக் கொண்டி ருந்தனர். அதோடு, விருந்தினர் களிடம் மோசமாக நடந்து கொண்ட தில், திருமண த்திற்கு வந்தவ ர்களுக்கு காயமும் ஏற்பட்டது.

இது குறித்து மணப்பெண், மாப்பிள் ளையிடம் குறை கூறி யதற்கு மாப்பிள்ளை என்ன சொன்னார் தெரியுமா? ‘உன்னை வேண்டு மானாலும் விட்டு விடுவேன், 

மாப்பிள்ளைத் தோழர்கள் மீது புகார் செய்தால்?
ஆனால் நண்பர் களை விட்டுக் கொடுக்க மாட்டேன்’. தன்னை விட்டுக் கொடுக்கத் தயாரான மணப்பெண், மேடையை விட்டு வெளியேறினார்.

ஹரியானா வில் பல்வல் மாவட்டம், ஹதீன் கிராம த்தில் திருமண தினத் தன்று வரதட்சணை கேட்ட மண மகனையும், அவரது சகோத ரரையும் ஒரு அறையில் அடைத்து வைத்தார் மணப்பெண்.
கடைசி நிமிட த்தில் வரதட்சணைக் கோரி யதற்கு எதிர்ப்புக் காட்டும் விதமாக மணப்பெண் இப்படிச் செய்தார். வரதட் சணை கோரிய தோடு விட்டதா மண மகனின் குடும்பம்? பெண் வீட்டாரை அவமானமும் செய்தார்கள்.

பஞ்சாயத்தும், காவல் துறையும் தலை யிட்டு விவகார த்தை சுமுகமா க்கினார்கள்.

ஆனாலும் பஞ்சாயத்து அளித்த தீர்ப்போ வினோதமாய் இருந்தது. மண மகளின் குடும்பத்தினர் சுமார் ஒரு ஏக்கர் நிலம் (நான்கு பிஹா நிலம்) அல்லது 
பத்து லட்சம் ரூபாயை மண மகனின் குடும்பத் தினருக்கு கொடுக்க வேண்டும், இல்லை யென்றால் மணமகள், கணவன் வீட்டிற்கு செல்ல முடியாது!

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புரில் 22 வயது சுனிதா சிங், திருமண த்திற்காக குருத்வாரா வுக்குள் நுழைந்த மணமகன் ஜெய்ப்ரீத் சிங் தள்ளாடிய நிலையில் இருந்ததை பார்த்ததும், 

காவல் நிலை யத்திற்கு சென்று விட்டார், திருமணம் செய்துக் கொள்ள முடியாது என்று நிராகரித்து விட்டார்.

மணமேடையில் துணிச்சலாக நின்ற பெண்கள் !
மணமகன் போதைப் பழக்க த்திற்கு ஆட் பட்டவர் என்பதை நிரூபிக்க உள்ளூர் சுகாதார மையத்தில் பரிசோதனை நடத்த முயன்ற போது, அங்கு அதற்கு தேவை யான கருவிகள் எதுவும் இல்லை.
ஆனால் மனம் தளராத மணப்பெண் சுனிதா, தனியார் பரிசோதனை ஆய்வ கத்தில் பரிசோதனை செய்த போது, சந்தேகம் உறுதி யானது. 

மணமகன் ஜெய்ப்ரீத் சிங் ‘ஓபியாய்ட் வலி நிவாரணி’க்கு அடிமையா யிருந்தார் என்பது நிரூபண மானது.

அதனைத் தொடர்ந்து, சுனிதாவின் துணிச்சலை பாராட்டி, வீரப் பெண்மணி என்ற பட்டத்தை, உள்ளூர் செஞ்சிலுவை சங்கத்தின், போதை மருந்து பயன் படுத்துபவர் களை குணப் படுத்தும் மையம் அறிவித்தது.

திருமண நிகழ்ச்சி யில் அசைவ உணவு இல்லா ததால் கோபம் கொண்ட மணமகனும், அவரது குடும்ப த்தினரும் திருமண த்தை நிறுத்தி விட்டார்கள்.

தங்களிடம் மன்னிப்புக் கேட்டு திருமண த்தை நடத்த கெஞ்சு வார்கள் என்று எதிர் பார்த்த பிள்ளை வீட்டாரின் எதிர் பார்ப்பு பொய்த்துப் போனது.
திருமண த்தில் கலந்து கொள்ள வந்திருந்த ஒருவர், மணப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள தயார் என்று சொன்னார். மணப் பெண்ணின் மனப்பூர்வ சம்மத த்துடன் திருமணம் இனிதே நடந்தேறியது.

மணமேடையில் துணிச்சலாக நின்ற பெண்கள் !
அசைவ உணவு இல்லாத தால் முறுக்கிக் கொண்ட மாப்பிள்ளை க்கு பதிலாக விருந்தி னராய் வந்து மாப்பிள்ளை யானவருக்கு சைவ உணவின் மீது எந்த கோபமும் இல்லை.

பிஹாரை சேர்ந்த சஹர்சா என்ற மணப்பெண், திருமணம் முடிந்த கையோடு, மணமகன் மொஹம்மத் இக்பாலிடம் மூன்று முறை தலாக் சொல்லி திருமண த்தை முறித்து விட்டார்.
மண மகனின் கல்வி குறித்து மணமகளின் குடும்ப த்தினருக்கு சந்தேகம் ஏற்பட்ட தால், மணப் பெண் இந்த முடிவை எடுத்தார்.

பி.எட் படித்து விட்டு, சுயதொழில் செய்து வருவதாக மணமகன் மொஹம்மத் இக்பால் பெண் வீட்டாரிடம் சொல்லி யிருந்தார்.

ஆனால், மணமகன் பத்தாவது வரை தான் படித்தி ருக்கிறார் என்பதும், தொழில் எதுவும் செய்ய வில்லை என்பதும் அப்போது தான் தெரிய வந்தது.

மணமகன் என்ன தவறு செய்தாலும் அதை மண மேடையி லேயே தட்டிக் கேட்கும் மணப் பெண்கள், 

திருமண நடைமுறைகளை மாற்ற விரும்பும் இளைஞர் சமுதாயம் என திருமண த்தின் கோண ங்களும், பரிணா மங்களும் மாறி வரும் காலம் இது.

இது எப்படி யிருக்கிறது..

மணமேடையில் துணிச்சலாக நின்ற பெண்கள் !
பாபாநியு கென்னியா நாட்டி பிரதமர் அன் நாட்டின் பண்பாட்டு கலாச்சாரம் உடையில் ஐநா வில் உரையாற் போன போது “”மன்னின் மைந்தன்?!
Tags:
Privacy and cookie settings