இன்ஜினீயரிங் மாணவிக்கு நேர்ந்த கொடுமை?

சென்னை ஐ.ஐ.டி-யில் இன்ஜினீயரிங் படிக்கும் மாணவிக்கு கல்வி வளாகத் திலேயே நிகழ்ந்த பாலியல் கொடுமை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

இன்ஜினீயரிங் மாணவிக்கு நேர்ந்த கொடுமை?
இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னை (ஐ.ஐ.டி.) என்ற கல்வி வளாகம் அடை யாறில் உள்ளது. இங்கு, வட மாநில த்தைச் சேர்ந்த மாணவி, விடுதி யில் தங்கி இன்ஜினீ யரிங் படித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, இரவு 9 மணியளவில் மாணவி, கல்வி வளாகத்தில் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, அவரை சில இளைஞர்கள் பின் தொடர்ந் துள்ளனர்.

இருட்டான பகுதியில் மாணவி சென்ற போது, அந்த இளைஞர்கள் அவரை வழி மறித்துள்ளனர். அப்போது ஓர் இளைஞர், மாணவியிடம் அத்து மீறியுள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத மாணவி, 'ஹெல்ப்.. ஹெல்ப்' என்று சத்தம் போட்டுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந் தவர்கள் ஓடி வந்துள்ளனர். அதைப் பார்த்த இளைஞர்கள், அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

அதையடுத்து நடந்த சம்பவத்தை மாணவி, அங்கிருந்த வர்களிடம் சொல்லிக் கதறி அழுதுள்ளார். அதன் பிறகு, தகவல் ஐ.ஐ.டி உயரதிகாரி களுக்குத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தொடர்ந்து, சென்னை கோட்டூர்புரம் போலீஸில் நடந்த சம்பவம் குறித்துத் தகவல் கொடுக்கப் பட்டது. உடனே போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.

அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சி களையும் ஆய்வு செய்தனர். அப்போது, மாணவி யிடம் ஒரு இளைஞர் அத்துமீறும் சம்பவம் அதில் பதிவாகி யிருந்தது.

அந்தப் பதிவில் உள்ள இளைஞரை போலீஸார் தேடினர். அவர், சென்னை யைச் சேர்ந்த இன்ஜினீயர் அந்தோணி என்பது தெரிய வந்தது. பாதிக்கப் பட்ட மாணவி, போலீஸில் புகார் கொடுக்க மறுத்து விட்டார். 

மேலும், இந்தச் சம்பவம் வெளியில் தெரிந்தால், சென்னை ஐ.ஐ.டி-க்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று கருதி, யாரும் போலீஸில் புகார் கொடுக்க வில்லை. 

இதை யடுத்து போலீஸார், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி யதாகச் சொல்லி, சம்பந்தப் பட்ட இன்ஜினீயர் அந்தோணி யைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். 
இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், "சென்னை ஐ.ஐ.டி-யில் நடந்த சம்பவம் உண்மை தான். பாதிக்கப் பட்ட மாணவி, எங்களிடம் புகார் கொடுக்க வில்லை. 

இருப்பினும், வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அந்தோணியைக் கைது செய்துள்ளோம். மாணவி புகார் கொடுக்காததால், அந்தோணி மீது வேறு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. 

ஐ.ஐ.டி வளாகத்தில் அந்நியர்கள் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு உள்ளது. அதையும் மீறி அந்தோணி எப்படி ஐ.ஐ.டி வளாகத்து க்குள் சென்றார் என்று விசாரித்த போது, அவர், புராஜெக்ட்டுக் காக அங்கு செல்வது வழக்க மாம். 
புராஜெக்ட் தொடர்பாகச் சென்ற இடத்தில் தான் தனியாகச் சென்ற மாணவியிடம் தவறாக நடக்க முயன்று ள்ளார் என்பது தெரிய வந்தது"என்றார்.

இது குறித்து சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகத்தில் கேட்ட போது, 'அப்படி யொரு சம்பவமே நடக்க வில்லை' என்று தெரிவித்தனர். ஆனால், நடந்த சம்பவ த்தை போலீஸார் உறுதிப் படுத்தினர்.
Tags:
Privacy and cookie settings