ரான்சம்வேர் பாதிப்பைத் தடுத்து நிறுத்திய இளைஞர்கள் !

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன் படுத்திய கணினிகள் மூலமாகப் பரவிய ரான்சம்வேர், சுமார் 150 நாடுகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கணினிகளைப் பாதித்தது. 
ரான்சம்வேர் பாதிப்பைத் தடுத்து நிறுத்திய இளைஞர்கள் !
முதல் மூன்று நாள்களுக்குள் 300 டாலர் மதிப்புள்ள பிட்காயின் செலுத்தினால், ஃபைல்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 

இந்த கால அவகாசம் முடிந்து விட்டால், அதன் பின் 600 டாலர் மதிப்புள்ள பிட் காயின் செலுத்த வேண்டும். 

ஒரு வாரத்துக்குள் பணத்தை செலுத்தா விட்டால், அனைத்துத் தகவல் களையும் இந்த ரான்சம்வேர் டெலீட் செய்து விடும். 

பாதிக்கப்பட்ட கணினியின் உரிமை யாளர்கள் பிட்காயின் மூலமாகப் பணம் செலுத்தியதும், 'வான்னாக்ரை' (Wanna Cry or Wanna Crypt) என்ற டூல் 

மூலம் ஃபைல் களை மீண்டும் டிக்ரிப்ட் செய்யும் படி ஹேக்கர்கள் அதை உருவாக்கி யுள்ளனர்.

கணினி யில் உள்ள ஃபைல் களைத் திறக்க இது வரை 296 பேமன்ட்கள் பிட்காயின் மூலமாக செலுத்தப் பட்டுள்ளன. இந்திய மதிப்பில் இந்தத் தொகை சுமார் 64 லட்சம் ரூபாய் ஆகும். 
இது வெறும் தொடக்கம் மட்டுமே! இரண்டு லட்சத்து க்கும் அதிகமான கணினி கள் பாதிப் படைந்து ள்ளதால், இந்தத் தொகை யானது பல நூறு கோடிகளை கூட தொடலாம். 

மேலும், வான்னாக்ரை போன்ற பாதிப்பு ஏற்படு த்தும் பல ரேன் சம்வேர்கள் விரை வில் இணைய த்தில் பரவலாம் என்பதும் வல்லு நர்களின் கணிப்பு.

வான்னாக்ரை ரான்சம்வேர் இணைய த்தில் பரவத் தொடங்கி யதுமே, அதைத் தடுக்க பல தொழில் நுட்ப வல்லுநர்கள் மூளையைக் கசக்க ஆரம்பித்தனர். 

'மால்வேர்டெக்' என்ற நிறுவன த்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் எதேச்சை யாக செய்த காரியத் தினால், வான்னாக்ரை மேலும் பரவுவது தடுக்கப் பட்டது. 

ரான் சம்வேரைப் பரப்பிய ஹேக்கர்கள், கடிவாளம் தங்கள் கைகளில் இருக்க வேண்டு மென்பதற் காக 23 கேரக்டர்கள் கொண்ட ஓர் இணைய தள முகவ ரியைத் தங்கள் கோடிங்கில் சேர்த்து ள்ளனர். 
இந்த இணைய தளம் ஆக்டிவேட் செய்யப் பட்டால், ரான்சம்வேர் மேலும் பரவக் கூடாது என்பது தான் அந்த கோடிங். 

இதைக் கண்டறிந்த அந்த இளைஞர் உடனடி யாக அந்த இணைய தளத்தைத் தனது பெயரில் பதிவு செய்து, ஆக்டிவேட் செய்து விட்டார். 

இதை 'கில் ஸ்விட்ச்' என்பார்கள். இதன் மூலம், வான்னாக்ரை ரான்சம்வேர் இணையம் மூலமாக மேலும் பரவுவது கட்டுப் படுத்தப் பட்டது.

இந்நிலை யில் பாதிக்கப் பட்ட கணினி களில் உள்ள ஃபைல் களை டிக்ரிப்ட் செய்யக் கூடிய டூல் ஒன்றை பிரான்ஸ் ஆய்வாளர் பெஞ்சமின் டெல்பி கண்டு பிடித்து ள்ளார்.

வான்னாவிக்கி (WanaWiki) எனப் பெயரிடப் பட்டுள்ள இந்த டூல், வான்னாக்ரை ரான்சம்வேர் பாதித்த கணினி களில் உள்ள தகவல் களை டிக்ரிப்ட் செய்ய உதவுகிறது. 

மேலும், ஒரு கணினி யிலிருந்து மற்றொரு கணினிக்கு ரான்சம்வேர் பரவு வதைத் தடுத்து அதை அழிக்கிறது. ரான்சம்வேர் பாதித்த கணினி களில் உள்ள ஃபைல் களை ஆராய்ந்து, 

அது பயன் படுத்தும் 'ப்ரைம் கீ' முறையைக் கண்டறிந்து அதற்கேற்ப டூல் உருவாக்கி யுள்ளார் பெஞ்சமின். 
ரான்சம்வேர் பாதிப்பைத் தடுத்து நிறுத்திய இளைஞர்கள் !
ஹேக்கர்கள் மீண்டும் இந்த ப்ரைம் கீயை மாற்று வதற்குள், வான்னா விக்கி டூலைப் பயன் படுத்தி தகவல் களைப் பெற்றுக் கொள்ளுமாறு பெஞ்சமின் தனது ப்ளாக்கில் தெரிவித் திருக்கிறார்.

வான்னாக்ரை ரான்சம்வேர் இணையம் மூலம் பரவுவது 'கில் ஸ்விட்ச்' மூலம் தற்காலி கமாகத் தடுக்கப் பட்டுள்ளது. பாதிக்கப் பட்ட கணினி களில் உள்ள தகவல் களைப் பெறவும் டூல் ஒன்று உருவாக் கப்பட் டுள்ளது. 

எனவே, 'வான்னாக்ரை' ரான் சம்வேரினால் ஏற்பட்ட பாதிப்பு முடிவுக்கு வந்து ள்ளதாக நம்பப் படுகிறது. ஆனால் விரைவில் இது போன்ற சைபர் தாக்குத ல்கள் இன்னும் வீரிய மாக இணைய த்தில் பரவலாம். 
எனவே, கணினி பாதுகாப்பு முறைகள் மூலம், இது போன்ற சைபர் தாக்குதல் களிலிருந்து தற்காத்துக் கொள்வது நல்லது.
Tags:
Privacy and cookie settings