122 மில்லியன் யூரோ அபராதம் செலுத்திய பேஸ்புக் !

பேஸ்புக் நிறுவனத்துக்கு 122 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியை கைப்பற்றியது தொடர்பான 
122 மில்லியன் யூரோ அபராதம் செலுத்திய பேஸ்புக் !
விவகார த்தில் பேஸ்புக் நிறுவனத்திற்கு 122 மில்லியன் அபராதம் விதித்தது ஐரோப்பிய யூனியன். இது, இந்திய மதிப்பில் ரூ.773 கோடி ஆகும். பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியை பேஸ்புக் நிறுவனம் கைப்பற்றும் போது தவறான தகவல் களை தனது வாடிக்கை யாளர்களுக்கு வழங்கிய தாக பேஸ்புக் மீது கடந்த 2014 ஆம் ஆண்டு புகார் எழுந்தது.

இது தொடர்பான புகாரை விசாரித்து வந்த ஐரோப்பிய யூனியன், பேஸ்புக் நிறுவனத் திற்கு அபராதம் விதித் துள்ளது. 

நிறுவனங்கள் கைப்பற்றப் படும் போது ஏற்படும் போட்டிகள் குறித்து விரிவான தகவல்களை சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் முறையே வழங்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தெரிவித் துள்ளது.
ஐரோப்பிய யூனியன் குற்றச் சாட்டு குறித்து பதிலளித் துள்ள பேஸ்புக் நிறுவனம், கடந்த 2014 ஆம் ஆண்டு நாங்கள் பதிவு செய்த தகவல் களில் சில தவறுகள் தெரியாமல் நடந்து விட்டன எனக் கூறி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings