தலைப்பை பார்த்த வுடன் கொஞ்சம் பகீர் என்று தான் இருக்கும். ஆனால் இந்த கணிப்பு நிஜமாவ தற்கான சாத்திய ங்களும் இருக்கத் தான் செய்கின்றன.
கச்சா எண் ணெய் விலை குறையும், ஆட்டோ மொபைல் துறையில் மாற்ற ங்கள் நிகழும் என கடந்த வாரம் அமெ ரிக்காவை சேர்ந்த டோனி செபா கூறினார்.
தொழில் முனைவோர், எழுத்தாளர் என பல முகங்கள் இவருக் குண்டு. சர்வதேச அளவில் பலரும் பல கணிப்பு களை
அறிவித்து வரும் நிலையில் இவரது கணிப்புக்கு முக்கியத் துவம் கொடுப்ப தற்கும் காரணங்கள் இருக்கிறது.
சூரிய மின்சக்தி மிகப்பெரிய சந்தையாக உருவாகும் என்பதை சில ஆண்டு களுக்கு முன்பே கணித்தவர் இவர். தற்போதைய விலையை விட 10 மடங்கு கூடுதல் விலை இருக்கும்
சமயத்தில் இவரது கணிப்பு வெளி யானது. இதன் காரண மாகவே இவரின் தற்போதைய கூற்று அதிக முக்கியத் துவம் பெறுகிறது.
கணிப்புகள் என்ன?
வரும் 2030-ம் ஆண்டில் தற் போதைய முறை யில் செயல்பட்டு வரும் ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சி அடையும். 95 சதவீதத் தினர் சொந்த மாக கார் வைத்தி ருக்க மாட்டார்கள்.
உற்பத்தி நிறுவ னங்கள், டீலர்கள், சேவை நிறுவ னங்கள், காப்பீட்டு நிறுவ னங்கள் ஆகியவை அதிகமாக பாதிக்கப் படும்.
இந்த இடத்தை எலெக்ட்ரிக் வாக னங்கள் பிடிக்கும். வருங் காலத்தில் எலெக்ட் ரிக் வாகனங் களின் விலையும் கணிச மாக குறையும்.
அதனால் தற்போதைய ஆட்டோ மொபைல் நிறுவ னங்கள் டிரைவர் தேவைப் படாத எலெக்ட்ரிக் வாகனங் களை அசெம்பிள் செய்யும் நிறுவனங் களாக மாறக்கூடும் என கணித்தி ருக்கிறார்.
கார்கள் உள்ளி ட்டவை இல்லை என்றால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் துறையில் பேரழிவு உருவாகும். பேரழிவு என்னும் வார்த்தை யையே அவர் பயன் படுத்தியி ருக்கிறார்.
கச்சா எண்ணெய் தேவை 2021-ம் ஆண்டில் அதிகபட்சம் 10 கோடி டாலர் வரையில் செல்லும். அடுத்த 10 ஆண்டுகளில் கச்சா எண்ணெ யின் தேவை 7 கோடி டாலராக குறையும்.
தேவை குறையும் போது உற்பத்தி யாகும் கச்சா எண்ணெய்யை குறைந்த விலைக்கு தான் விற்க வேண்டும் என தெரிவித்தி ருக்கிறார்.
உலகின் முக்கிய மான பொருளா தாரமான இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்து கின்றன.
2025-ம் ஆண்டுக்குள் 20% எலெக்ட்ரிக் கார்களாக இருக்க வேண்டும் என சீனா திட்டமிட்டிருக் கிறது.
அதே போல 2032-ம் ஆண்டுக்குள் அனைத்து கார்களும் எலெட்ரிக் கார்களாக மாற்ற இந்தியாவும் திட்டமிட் டிருப்பது கவனிக்க வேண்டும்.
எந்த ஒரு கருத்து க்கும் எதிர்க் கருத்து இருக்கும். அது போல எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயராது என்னும் கணிப் பும் இருக்கிறது. எக்ஸான் மொபில் மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் ஆகிய நிறுவ னங்கள்,
வரும் 2035-ம் ஆண்டில் மொத்த கார்களின் எண்ணி க்கையில் 10 சதவீதம் மட்டுமே எலெக்ட்ரிக் கார்கள் இருக்கும் என கணித்திருக் கின்றன. இது இந்த துறையை சார்ந்தவர் களுக்கு நம்பிக்கை கொடுக் கலாம்.
இன்னும் சில ஆண்டு களுக்கு பிறகு பெட்ரோல் விலை குறையும் என்று நிச்சயமாக சொல்ல முடியாது. ஆனால் ஆட்டோ மொபைல் துறையில் பெரிய மாற்றம் இருக்கும் என்பதை உறுதி யாகக் கூறலாம்.