தலித் மக்கள் படித்து வேலைக்குப் போய், வாழ்வாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு உதவி செய்து வருகிறது.
ஆனால் கல்லூரி நிறுவனங்கள், படித்து முடித்த பிறகு பணத்துக்காக சான்றி தழ்களைத் தர மறுக்கின்றன. அனைத்து அதிகாரிகளிடமும் புகார் கொடுத்து விட்டோம். பலன் இல்லை.
அதனால் தான், கல்லூரிக்கு பணம் கட்ட பிச்சை எடுத்து வருகிறோம்' என்கி றார்கள் மாணவர்கள். அரியலூர் மாவட்டத்தை அதிர வைத்துள்ளது, இந்தச் சம்பவம்.
போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் திட்டக் குடியைச் சேர்ந்த மோகன் ராஜ் என்பவரிடம் பேசினோம். நான் சிறு வயதாக இருக்கும் போதே எங்க அப்பா இறந்து விட்டார்.
எங்க அம்மா மட்டும் தான். அவங்களும் கல்வெட்டுற வேலை க்குப் போய் தான் எங்களைப் படிக்க வச்சாங்க.
பன்னி ரண்டாம் வகுப்பு முடிச்சப்போ, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் இலவச மாக படித்துப் பட்டம் பெறலாம் என்று விநாயகா கல்லூரி நிர்வாகம் விளம்பரம் கொடுத்தார்கள்.
அதை பார்த்த பிறகு, திட்டக் குடியில் 20-க்கும் மேற்பட்ட எனது நண்பர்களோடு அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் அருகில் உள்ள விநாயகா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குச் சென்று விசாரி த்தோம்.
அங்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் ஒரு பைசா கூட கொடுக்க வேண்டிய தேவை யில்லை என்றனர்..
அரசே எல்லா பணத்தையும் கட்டிவிடும். அது மட்டுமில்லாம, உங்க ளுக்கு ஊக்கத் தொகையாக அரசு பணம் கொடுக்கும் என்றார்கள். அதனா நாங்க, செலவே இல்லாம டீச்சராகப் போகிறோம் என்ற சந்தோஷத்தில் திழைத்தோம்.
2014-16 ஆம் ஆண்டில், எஸ்சி, எஸ்டி மாணவ- மாணவிகள் இலவச கல்வித் திட்டத்தில் இந்தக் கல்லூரியில் சேர்ந்தோம். மொத்தம் 40 மாணவ, மாணவிகள் படிச்சோம்.
கல்லூரி நிர்வாகத்தினர் எங்களிடம் நீங்கள் ரெகுலரா காலேஜிக்கு வர வேண்டிய தேவையில்லை. காலேஜ் ஃபீஸ் 23,000 எங்களுக்கு வந்து விடும், ஊக்கத் தொகை பணம் 3,000 உங்க அக்கவு ண்டுக்கு வந்து விடும்.
எக்ஸா முக்கு வந்தால் மட்டும் போதும். தேவை யில்லாமல் கல்லூரிக்கு வர வேண்டிய தில்லை என்றார்கள். இதனால் பலர் காலேஜிக்கே வராமல் இருந்தார்கள்.
பிறகு, கொஞ்சம் கொஞ்ச மாக அவர்கள் வேலையைக் காட்டத் தொடங்கி விட்டனர். எக்ஸாம் நேரத்தில் மாண வர்கள் பணம் கட்டினால் தான் பரீட்சை எழுத முடியும் என்று வீட்டுக்கு லெட்டர் அனுப்பி னார்கள்.
நாங்க எதுக்கு பணம் கட்ட ணும்னு கேட்டது க்கு, 'இதெல்லா மாப்பா உங்ககிட்ட சொல்ல முடியும். பணம் கட்டினா பரீட்சை எழுத முடியும். இல்லனா முடியாது' என்று கறாராக சொன்னார்கள்.
பிறகு, நான் ரெண்டு வருஷமும் 6,000 பணம் கட்டி பரீட்சை எழுதி கல்லூரிப் படிப்பை முடிச்சோம். கோர்ஸ் கம்ப்லீட்டட் 'சர்டிஃபிக்கேட், டிசி, மார்க் ஷீட் வேணும்னு கேட்டதுக்கு, 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பணத்தை கட்டுங்க' ன்னு சொன்னாங்க.
'எதுக்கு சார்னு கேட்டதுக்கு, காலேஜ் மெயின்ட னன்ஸ் சார்ஜுனு சொல் றாங்க. அதுக்கு நான், ''நாங்க தினக்கூலி, இவ்வளவு பணம் இருந்தா வேற காலேஜ்ல படிச்சிரு ச்சிருக்க மாட்டோமா.
இங்கு வந்து ஏன் சார் படிக்கி றோம்னு கேட்ட துக்கு, பணம் கட்டுனா கட்டு, இல்லனா இடத்தைக் காலி பண்ணுனு சொன் னாங்க.
எங்களைப் போல எத்தனை மாணவர் களிடம் பணம் பறித்தார் களோ தெரிய வில்லை. கல்லூரி தரப்பினர் செய்யும் தவறுகளை முழுமை யாக விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும்" என்றார்.
அவரைத் தொடர்ந்து பூமிநாதன் கூறுகை யில், "எஸ்பி, கலெக்ட ரிடம் புகார் கொடுக்கப் போறோம் என்றோம். அதற்கு அவர்கள், எல்லா அதிகாரி களுக்கும் நாங்க படியளக் கிறோம். எங்களை ஒண்ணும் பண்ண முடியாது என்றார்கள்.
பிறகு, 2016 டிசம்பரில் கலெக்டர் சரவண வேலிடம் புகார் கொடுத்தோம். அவர் உடனே எஸ்சி, எஸ்டி துறைக்கு பரிந்துரை செய்தார். அவர்களும் கல்லூரி தரப்பிடம் பேசினார்கள்.
அவர்க ளிடம் டிசி, மார்க் ஷீட் கொடுப்பதாக ஒத்து கொண் டார்கள். ஆனால், நாங்கள் போனால் கொடுக்க மாட்டோம் என்றார்கள். வெளி நாட்டிலி ருந்து வேலைக்கு விசா வந்துள்ளது.
பாஸ்போர்ட் எடுக்க மார்க் ஷீட், டிசி வேணும். ஆனா, இவங்க கொடுக்க மறுக்கி றாங்க. அதிகாரிகளும் பணத்தை வாங்கிக் கிட்டு நடுத் தெருவுல விட்டுடு றாங்க. இவககிட்ட போராட முடியலை.
அதனால, கலெக்டர் ஆபீஸ்ல உள்ள அதிகாரிகள் கிட்ட 'பிச்சை எடுத்து அதில் வரும் பணத்தை வைத்து' டிசி, மார்க் ஷீட் வாங்க லாம்னு தான் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத் தினோம்.
இப்போ கூட, அதிகாரிகள் எங்களைத் தான் பேச்சு வார்த்தைக்கு கூப்பிடு றாங்களே தவிர, கல்லூரி தரப்பை அழைச்சுப் பேச மறுக்கிறாங்க.
இந்த முறையும் எங்களுக்கு கிடைக் கலைனா, சாகவும் துணிஞ் சிட்டோம் என்றார் வேதனையுடன். அடுத்ததாக, கல்லூரி முதல்வரிடம் பலமுறை பேச முயற்சித்தோம்.
அவர், பதிலளிக்க மறுத்து விட்டார். கலெக்டர் (இல்லை) பொறுப்பு டி.ஆர்.ஒ தனசேகரனிடம் பேசினோம். ஆர்.டி.ஒ விசாரணைக்கு அனுப்பியுள்ளோம்.
இரு தரப்பினரையும் விசாரித்து ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தர விட்டுள்ளேன். யார் மீது தவறு இருந்தாலும் அவர் மீது நிச்சயமாக நடவடி க்கை எடுப்போம் என்றார் உறுதியாக.