கடந்த 1969 முதல் 2011 வரை லிபியா வின் சர்வாதி காரியாக முகமது கடாபி செயல் பட்டார். கடந்த 2011-ல் அவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து ஆட்சி கவிழ்க்கப் பட்டது.
சொந்த ஊரான சிர்டேவில் பதுங்கி யிருந்த கடாபியை புரட்சி படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
கடாபி யின் வாரிசாக கருதப் பட்ட அவரது இரண்டாவது மகன் சயீப் அல் இஸ்லாம் புரட்சி படை யினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு திரிபோலி நகர நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. லிபியா வில் தற்போது ஏராள மான கிளர்ச்சிக் குழுக்கள் செயல்படுகின்றன.
தலை நகர் திரி போலி 3 முக்கிய கிளர்ச்சிக் குழுக் களின் கட்டுப் பாட்டில் உள்ளது. இதில் அபு பக்கர் அல் சித்திக் கிளர்ச்சிப் படையின் கட்டுப் பாட்டில் உள்ள சிறையில் சயீப் அல் இஸ்லாம் இருந்தார்.
6 ஆண்டுகள் சிறையில் இருந்த அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப் பட்டு அண்மை யில் அவர் விடுதலை செய்யப் பட்டார்.
பாதுகாப்பு காரணங் களுக்காக அவர் எங்கிரு க்கிறார் என்ற விவரம் அறிவிக் கப்பட வில்லை.