உத்தரப் பிரதேசத்தில் கார் ஆற்றில் மூழ்கி 9 பேர் பலி !

0 minute read
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கார் ஒன்று விபத்தில் சிக்கி ஆற்றில் மூழ்கி யதில் 9 பேர் பலியாகி யுள்ளனர். உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுரா பகுதியில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
உத்தரப் பிரதேசத்தில் கார் ஆற்றில் மூழ்கி 9 பேர் பலி !
அப்பகுதியில் இன்று அதிகாலை வேகமாக வந்த கார் ஒன்று நிலை தடுமாறி ஆற்றினுள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆற்று நீரில் மூழ்கி அக்காரில் பயணம் செய்த ஒன்பது பேர் பரிதாபமாக உயிரி ழந்தனர். 

ஆற்றுக்குள் மூழ்கிய கார் மற்றும் ஒன்பது பேரின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. சம்பவ இடத்திற்கு உடனடியாக ஆம்புலன்ஸ்கள் வர வழைக்கப் பட்டன. 

மதுரா போலீஸாரும் அப்பகுதிக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்த காரணங்கள் இன்னும் வெளியாக வில்லை. உயிரிழந்த ஒன்பது பேரின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
Tags:
Today | 13, March 2025
Privacy and cookie settings