கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக், ட்விட்டர் என பரபரத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் நடிகை சரண்யா மோகனின் புகைப்படம். அவரின் திருமண த்துக்கு முந்தைய புகைப்படமும்,
குழந்தைப் பெற்றப் பிறகான அவருடைய தற்போதைய படத்தையும் இணைத்து ட்ரோல் ஆகும் விஷயம் தான்.
ஒரு நடிகையை பற்றி ட்ரோல் ஆகும் விஷய த்தில் சக நடிகைகள் மெளனம் காக்க, 'யாரடி நீ மோகினி' படப் புகழ் சரண்யா மோகன் சிம்பாளிக் காக தன் ஃபேஸ்புக் பக்கத்தில்,
Happiness is mother hood .Happiness is feeding my son .Happiness is taking care of my family .and I am proud of it :)“Birth is the epicenter of women’s power.” –Ani DiFranco
என்று ஒரு பதிவை போட்டு ட்ரோலர் களை வாயடைத்துப் போக வைத்திரு க்கிறார். பல பெண்களை மன உளைச் சலுக்கு ஆளாக்கும் உடல் பருமன் குறித்த டிவி பிரபலங் களிடம் கேட்டோம்.
''பெண்க ளுக்கு அழகே தாய்மை தான். கொஞ்சம் பூசனாப்ல இருந்தா தான் அழகு. அம்மாக்கள், கொடி இடையோடு இருப்பது கூடாது ங்கிறது என் கருத்து. தாய்க்கென ஒரு தோற்றம் இருக்கு.
என்னைப் பொறுத்த வரை, நான் இப்படி இருக்கிறதைத் தான் சந்தோஷ மாக நினைக் கிறேன். அப்போது தான் ஒரு மரியாதை யான தோற்றம் கிடைக்கும்.
உடல் பருமனோடு இருப்பது அசிங்கம் கிடையாது. அந்தந்த வயசுக்குத் தகுந்த மாதிரி இருக்கிறது தான் அழகு. பிரசவத்து க்குப் பிறகு உடம்பு பூசினாப்ல இருக்கும்.
அது தனியழகு. இது பல ஆண்க ளுக்குப் புரியறது தில்ல. எங்க வீட்ல என்னை யாரும் உடல் மெலியச் சொன்ன தில்ல.
இன்னும் சொல்ல போனா அப்படி ஒரு பேச்சை எடுத்ததே இல்லை. ஒவ்வொ ருத்தர் வீட்ல இருக்க வங்களுடைய எண்ணம் வேறு பட்டிருக்கும்.
அதை நான் குறைகூற விரும்பல. பல பெண்கள், தன்னை யாரும் குறை சொல்லிடக் கூடாது ங்கறதுக் காகவே ஜிம்க்குப் போறதை வழக்க மாக வச்சிருக் காங்க. அப்படி ஒல்லி யாகணும்ங் கிறது என்ன அவசியம்...
அதில் என்ன பெருமைனு தெரியல. குழந்தை பேறு என்பது பெருமை, பிரசவத்தின் போது புனர்ஜென்மம் எடுக்கிறோம். ஆக மொத்த த்துல ஒவ்வொரு பெண்ணும்,
தான் எப்படி இருக்க ணும்னு நினைக்கி றார்களோ அப்படி இருப்பது தான் நல்லது. மத்தவங் களுக்காக நாம ஏன் வாழணும். மத்தவங்க நம்மை ஏத்துகிறதும் ஏத்துகாததும் அவங்க அவங்க தனிப்பட்ட விருப்பம்'
'ஆண்கள் வெயிட் போட்டா கம்முனு வாயை மூடிட்டு இருக்கோமே... பெண்கள் வெயிட் போட்டா மட்டும் ஏன் விவாதிக்கிற அளவு க்குப் போகுதுனு தெரியல.
நான்கு, ஐந்து நாள்களாக சரண்யா விஷயத்தை இப்படியாப் பேசுவீங்கனு எனக்கு வெறுப் பாகிடுச்சு.
ஒல்லியா இருக்கிற ஒரு தொகுப்பாளர், நான் ஒன்றரைக் கிலோ எடைக் குறைச் சுட்டேனு சொல்லி பெருமைப் பட்டுக்கி றாங்க. அதுல என்ன பெருமைனு தெரியல. இதுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுனு தெரியல.
நானும் 18 வயசுல இருந்து 24 வயசு வரைக்கும் ஒல்லியாகத் தான் இருந்தேன். 21 வயசுல திருமணம் ஆச்சு. 24 வயசுல குழந்தை பிறந்தது. அதற்குப் பிறகு வெயிட் போடத் தான் செய்தது.
என் குழந்தை இந்த உலகத்தைப் பார்க்க நான் பல தையல் களைப் போட்டுக்க வேண்டி யிருந்தது. என்னைக் குண்டா இருக் காங்கனு சொல்ற எல்லாத் துக்கும் என் தையல் களை காட்டினா ஒத்துப் பாங்களா...
என் வயித்தைக் கிழிச்சு என் குழந்தையை வெளியில கொண்டு வந்த பிறகு போட்ட தையல், எனக்கு வலியா தெரிஞ்ச தில்ல. சந்தோஷம் தான் இருந்துச்சு.
ஆனா, இப்பவும் என்னை பார்க்கிற வங்க வெயிட் போட்டு ட்டனு சொல்லும் போது ஏற்படுற வலிதான் அதிகம். என்னை மாதிரி வெயிட் போட்டிரு க்கிற ஒவ்வொரு பெண்ணு க்கும் சொல்றேன்,
'நீங்க நீங்களாக இருங்க'. அதே மாதிரி இனி தாய்மையை அனுபவிக்க விருக்கும் பெண்களு க்கும் என்னுடைய வாழ்த்து களை சொல்லிக் கிறேன்.
இதுல இன்னொரு வருத்தம் என்னனா.. ஆண்களை விடப் பெண்கள் தான் வெயிட் போட்டிரு ப்பதாகச் சொல்லி பெண்களை புண்படுத் துறாங்க.
என் ஃபேஸ்புக்ல ஃப்ரெண்டா இருக்கிற ஆண்கள் கூட பெண்களின் வெயிட் பத்திதான் பேசுறாங்க.
பெரும் பாலான பெண்கள் திருமண த்துக்குப் பிறகு உடலில் வர்ற மாற்றத்துக் காகவே குழந்தை பேறை தள்ளிப் போடுறது லாம் நடக்குது.
இதை யெல்லாம் பார்க்கும் போது அவ்வளவு வேதனையா இருக்கும். ஏங்க குழந்தை காத்துல இருந்தா வரும். அல்லது சூரியனைப் பார்த்ததும் கையில வந்து குழந்தை விழுந்திடுமா.
ஒரு பெண்ணுடைய வயிற்றில் இருந்து தான் குழந்தையை பிரசவிக்க முடியும். அப்ப அவபடுற வேதனையை எவ்வளவு தூரம் புரிஞ்சுக்கி றீங்கனு தெரியல.
ஆம்பிள் ளைங்க முடியில் லாமலும், சொட்டை யாகவும், தொப்பை யோடும் இருந் தாலும் நாங்க கல்யாணம் பண்ணிக்கி றோம்ல.
பெண்களை மட்டும் ஏன் அழகு, கலர், பருமன்னு வேறு படுத்தி நோகடிக் கிறீர்கள்... இந்த எண்ணத்தை முதலில் தூக்கிப் போடுங்க''.
பெண்கள் அதிக உடல் பருமனுடன் இருக்கிறது எப்பவுமே ஆபத்து தான். கடந்த சில வருடங் களாக நான் டயட்ல இருந்து இப்போ எட்டுக் கிலோ குறைச்சி ருக்கேன்.
பெண்களைப் பொறுத்த வரை, வெயிட் அதிகரி க்கும் போது முதுகு வலி, கால் முட்டி வலி, இடுப்பு வலி எனப் பல பிரச்னைகள் பாடாய்ப் படுத்தும். எனக்கு தைராய்டு இருக்கு.
அதனால தான் இவ்வளவு வெயிட் போட் டுட்டேன். அதிக அளவு வெயிட் போடும் போது சர்க்கரை, ரத்தக் கொதிப்பு எனப் பல பிரச்னைகள் வரிசை கட்டும்.
அதனால நம்ம ஆரோக்கி யத்தை பாதுகாக் கணும்னா உடலைச் சரியா வச்சுக் கணும்.
அம்மாவுக் கான தோற்ற த்தில் இருப்பதை விட, இளமை யாக இருக்கும் போது நம்மளால பாசிட்டிவ் எனர்ஜியை உணர முடியும்.
எனக்கு இப்போ நாற்பத்தி யேழு வயசாகுது. என் பையனு க்கு பத்து வயசு தான் ஆகுது. இப்பவே எனக்கு இவ்ளோ பிரச்னை இருக்குனு நினைக்கும் போது கவலை யாயிருக்கு.
என் பையனை எப்படி பார்த்து ப்பேன் என நினைக்கும் போது மனசுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கும். அதனால தான மூன்று மாசத்துக்கு ஒரு முறை யாவது ரத்தப் பரிசோதனை பண்ணி ப்பேன்.
எனக்காக இல்லை னாலும் என்னை சுத்தியிருக்க வங்களுக் காகவா வது என்னை ஆரோக்கி யமாக வச்சிரு க்கேன். பிரசவத்து க்குப் பிறகு வெயிட் போடுவது சாதாரண மான விஷயம் தான்.
இதை நினைச்சு மன தளவுல வருத்தப் படக் கூடாது. எப்போது நம்மை கன்ட்ரோலா வச்சுக்க முடியுமோ அப்போ நம் உடல் பருமனை கட்டுக்குள் கொண்டு வரலாம்.'' என்கிறார்.