ரொம்ப காலமாவே குண்டா இருக்குற வங்களாம் அன் ஃபிட்டு, ஒல்லியா இருக்குற வங்க தான் ஃபிட் அப்படின்னு ஒரு விஷயம் பேசப்படுது.
நீங்கள் ஃபிட்டா, அன்ஃபிட்டா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
குண்டா இருந்தாலும் சரி, ஒல்லியா இருந்தாலும் சரி உங்களால ஒரு பத்து மாடிப்படி ஏற முடியாம மூச்சு வாங்கினீ ங்கன்னா நீங்க அன்ஃபிட்டுன்னு நினைச்கோங்க.
உங்களோட பி.எம்.ஐ கரக்டா இருக்கு; நீங்க குண்டா இல்ல; ஆனாலும் உங்களுக்கு மூச்சு வாங்குதுன்னா உங்களுக்கு சுத்தமா ஸ்டேமினா இல்லன்னு அர்த்தம்.
நீங்க அனிமிக்கா இருக்கீங்க; உங்க ளுக்கு அதிக எனர்ஜி தேவைப் படுத்துன்னு சுதாரிச்சுக் கோங்க. ஒருவர் ஃபிட்டா, அன்ஃபிட்டா என்பதை எப்படி தெரிந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
குண்டா இருக்கோம் ன்றதுக்காக எக்காரணத்தைக் கொண்டும் சாப்பாட்டை குறைச்சு சாப் பிடவே கூடாது.
அதனால் நம்ம உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு இன்னும் தான் குண்டா வீங்க. குண்டாக இருப்ப வர்கள் போது மான அளவு, தகுந்த இடை வெளியில சாப்பாடு சாப்பிடுவது முக்கியம்.
ஃபிட்டாக இருப்ப தற்கு முதல் விஷயம் தண்ணீர். வைட்ட மின்களும், மினரல் களும் தண் ணீரில் இருந்து தான் நமக்கு கிடைக்கிறது. ஆனால் எல்லாரும் தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவது தவறு.
ஒவ்வொரு வருக்கும் இந்த அளவு மாறுபடும். உங்களோட சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்திலோ, கலர் லெஸ்ஸா கவோ இருந்தால் நீங்கள் போது மான அளவு தண்ணீர் குடிக்கி றீர்கள் என்று அர்த்தம்.
இல்லை மஞ்சள், அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் தண்ணீர் போத வில்லை என அர்த்தம். அதனால் உங்கள் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்.
எப்போது உடல் உழைக்கத் தொடங்கு கிறதோ அப்போது தான் நீங்கள் ஆரோக்கி யமாக, ஃபிட்டாக இருப்பீர்கள்.
தினமும் கண்டிப்பாக அரைமணி நேரம் நடப்பதை யாவது வாடிக்கை யாக்குங்கள். அதுவும் அதிகாலை வெயிலில் நடந்தால் வைட்டமின் – டி யும் உங்க ளுக்கு கிடைக்கும்.
நமது உடலில் கால்சியம் சேர்வதற்கு இந்த வைட்டமின் டி மிகவும் தேவை. வெயிலில் அதிக நேரம் இல்லாமல் இருப்பதால் தான் பலருக்கு இன்று வைட்டமின் – டி பிரச்னை வருகிறது.
அதனால் மூட்டு வலி, முதுகு வலி ஏற்படு கிறது. பத்து நாள் தொடர்ந்து நடை பயிற்சி செய்யுங்கள்; அப்புறம் பாருங்கள் படிக்கட்டு ஏறும் போது மூச்சு வாங்குதா என்று!
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கி றீர்கள் என்றால் இன்னும் பிரச்சனை தான். என்ன தான் ஒல்லியாக நீங்கள் இருந்தாலும் உட்கார்ந்த இடத்தி லேயே
வேலை பார்ப்ப தால் தொப்பை போடுவது சகஜ மான ஒன்றாகி விட்டது. இதனை அப்டாமினல் ஒபிசிட்டி என்று கூறுவார்கள்.
இ.எம்.ஐ கேல்குலேட்டர் போல, இடுப்புக்கும் வயிறுக்குமான அளவு சராசரியாக இவ்வளவு இருக்க வேண்டும் என்று உண்டு.
உங்களது வயிற் றின் சுற்ற ளவுடன், இடுப்பின் சுற்றளவை வகுத் தால் பெண்க ளுக்கு .85 க்குள் இருக்க வேண்டும். ஆண் களுக்கு .95 இருக்க வேண்டும்.
அதற்கு மேல் இருந்தால் நீங்கள் மிகவும் அன் ஃபிட்டாக இருக்கி றீர்கள் பாஸ். தயவு செய்து கொஞ்சம் அதிக கவனம் எடுத்துக் கோங்க.
இரண்டு மணி நேர இடை வெளியி லாவது எழுந்து மாடிப்படி ஏறி இறங் குவது, ஐந்து நிமிடம் நடப்பது என கொஞ் சமாவது உடலுக்கு வேலை கொடுங்கள்.
இல்லை யென்றால் தசைகள் வேலை செய்யாமல் அடிக்கடி மரத்துப் போவது, எலும்பு களில் வலி போன்றவை வரத் தொடங்கும்.
என்ன தான் நீங்கள் வெட்டி முறிக்கும் வேலை செய் யாமல், உட்கார்ந்த இடத்தி லேயே வேலை செய் தாலும் உடல் வலிப் பதற்கு நீங்கள் உடலுக்கு வேலை கொடுக் காதது தான் காரணம்.
மாலை நேரம் ஆனதும் உடல் மிகவும் சோர் வடைகிறது என்றால் பெண்க ளுக்கு ரத்த சோகை பிரச்சனை இருக்க கூடும். உங்களது ரத்ததில் ஹீமோ குளோபினை செக் செய் யுங்கள். ஆண்கள் சுகர் செக் செய்வது நல்லது.
ஃபிட்டாக இருப்ப தற்கு கார்போ ஹைட்ரேட்டை குறைக்க வேண்டும்; கொழுப்பு சேர்க்கக் கூடாது என எதையும் ஒதுக்கக் கூடாது.
ஃபைபர், புரோட்டீன், வைட்டமின், மினரல்ஸ், கார்போ ஹைட்ரேட், ஃபேட் என அனைத்தும் சேர்ந்த சமச்சீர் உணவை உண்பது,
சீரான உடல் உழைப்பு, மூச்சுப் பயிற்சி, தேவை யான தூக்கம் இருந்தால் நீங்க குண்டா இருந் தாலும் சரி, ஒல்லியா இருந் தாலும் சரி.. நீங்கதான் பாஸ் ஃபிட்டு!