ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பல்வேறு அணி களாகச் சிதறிக் கிடக்கின்றன. குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி எழுப்பியப் பிறகு
நடந்த அரசியல் திருப் பங்கள் அனை வரும் பார்த்தது தான். எம்.எல்.ஏ-க்கள் அணி மாறியது,
கூவத்தூர் ரிசார்ட், நம்பிக்கை வாக்கெடுப்பு, எடப்பாடி ஆட்சி என்று கடந்த சில மாதங் களில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட் டுள்ளன.
இந்நிலை யில், எம்.எல்.ஏ -க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்த போது, அவர்க ளுக்குப் பன்னீர் செல்வம் அணி மற்றும்
சசிகலா அணி கோடி களில் பேரம் பேசிய தாக, 'டைம்ஸ் நவ்' ஆங்கில தொலைக் காட்சி ஆதாரங் களை வெளி யிட்டுள்ளது.
அதில், சசிகலா அணியி லிருந்து தப்பித்து வந்து பன்னீர் செல்வம் அணியில் இணைந்த மதுரையைச் சேர்ந்த எம்.எல்.ஏ சரவணன் பேசும் வீடியோ வெளியிடப் பட்டுள்ளது.
அதில் பேசும் சரவணன், 'சசிகலா அணியில் இணைவ தற்காக 6 கோடி ரூபாய் வரை தருவ தாகக் கூறினர். குறிப்பாக, தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்ற
கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ- க்களுக்கு தான் அதிகளவு பணம் கொடுக்கப் பட்டுள்ளது. அவர்களு க்குத் தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப் பட்டுள்ளது" என்று கூறி யுள்ளார்.
மேலும், எம்.எல்.ஏ-க்கள் இணைவ தற்காக ஓ.பி.எஸ் அணி சார்பில் ஒரு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்ட தாகவும், சசிகலா அணி தரப்பில் ரூ. 2 கோடி
மற்றும் தங்கம் ஆகியவை வழங்கு வதாக பேரம் பேசப்பட்ட தாகவும் டைம்ஸ் நவ் தொலைக் காட்சி செய்தி வெளியிட் டுள்ளது.