தந்தையின் ஈமச்சடங்கு நிதியை கொடுக்க அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால் மாவட்ட கலெக்டருக்கு ரூ.2000 லஞ்ச பணத்தை மணி யார்டர் மூலம்
அனுப்பி யுள்ள பெண்ணின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. தமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திரு நாவலூரை சேர்ந்தவர் தொப்பையன் (55),
இவர் மனைவி குப்பம்மாள், இவர்களின் மகள் சுதா. இந்நிலை யில் கடந்த 30.8.2016 ஆன்று தொப்பையன் இறந்து விட்டார்.
இதை யடுத்து அவர் இறந்ததற் கான இறப்பு சான்றிதழ் மற்றும் ஈமச் சடங்குக் கான நிதி உதவி கேட்டு குப்பம் மாள் கிராம நிர்வாக அலுவல கத்தில் விண்ணப் பித்தார்.
ஆனால் அவருக்கு இறப்பு சான்றிதழ் மற்றும் ஈமச் சடங்கு நிதி வழங்க வில்லை. அதை கொடுப்ப தற்காக அரசு அதிகாரிகள் குப்பம் மாளிடம் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.
பின்னர் நடந்த வற்றை பற்றி குப்பம்மாள் மகள் சுதா கூறுகை யில், எங்களிடம் லஞ்சம் வாங் கினால் அதற்கு ரசீது தருவீர்களா என கேட்டோம்.
ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.பின்னர் தகவல் அறியும் சட்டம் மூலம் இறப்பு சான்றிதழ் மட்டும் கிடைத்தது.
அதன் பின்னர் விழுப்புரம் தாலுகா அலுவலகம் போய் ஈமச் சடங்கு நிதியை கேட்டதற்கு அவர் களும் தராமல் இழுத்த டித்தனர்.
மேலும் லஞ்சமும் கேட்டனர். பின்னர், லஞ்சத்தை எப்படி தருவது என யோசித்து ரூ.2 ஆயிரத்தை மணியார்டர் மூலம் விழுப்புரம் கலெக்டரு க்கு அனுப்பி வைத்தேன்.
அதனுடன் 2 பக்க மனுவையும் எழுதி அனுப்பி உள்ளேன் என சுதா கூறி யுள்ளார்.