உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் சில்வாபூர் என்னும் கிராமம் உள்ளது. அங்கு சர்வேஷ் என்னும் விவசாயி செல்லமாக ஓர் ஆட்டை வளர்த்து வந்துள்ளார்.
வறுமையின் காரணமாக அந்த ஆட்டுக்குப் போதுமான உணவை அவரால் கொடுக்க முடியவில்லை. பசியால் வாடிய ஆடு ஒரு கட்டத்தில் செய்வதறியாமல்
தன் எஜமானர் குளிக்கச் சென்ற சமயத்தில் அவரின் பேன்ட் பாக்கெட்டி லிருந்த பணத்தை மென்று தின்று விட்டது.
குளித்து முடித்து விட்டு தன் அறைக்கு வந்து இந்தக் காட்சியைப் பார்த்த சர்வேஷ் அதிர்ச்சி யில் உறைந்து விட்டார்.
ஆடு மென்று தின்றது பத்து இருபது ரூபாய் நோட்டு களை அல்ல.. 66,000 ரூபாயை மொத்த மாக மென்று விழுங்கி விட்டது.
வீடு கட்டுமான பணிகளு க்காகத் தன் சகோதரரிடம் 66,000 ரூபாய் கடன் வாங்கி வந்துள்ளார் சர்வேஷ். அந்தப் பணத்தைப் பசிக்கு சூறையாடி விட்டது
அவர் வளர்த்தச் செல்ல ஆடு. சர்வெஷ் கோவத் தில் அடிக்க சென்ற போது அவரைப் பாவமாக பார்த்து ள்ளது. மன முடைந்த சர்வேஷ் ஆட்டை சந்தையில் விற்று விட்டார்.
இந்தச் சம்பவ த்தைக் கண்ட கிராம மக்கள் சிரிப்பதா வருத்தப் படுவதா என்று செய்வத றியாமல் முழித்து ள்ளனர்!