66 வயதான சந்திரசாமி, முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுடன் நெருக்க மாக இருந்தவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்திர சாமியிடம்
விசாரணை மேற் கொள்ளலாம் என வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன் பரிந்துரைத் திருந்தது.
ஆயுத பேரம், அந்நிய செலாவணி மோசடி, போபர்ஸ் பீரங்கி ஊழல் என பல சர்ச்சை களில் சந்திர சுவாமி சிக்கியி ருந்தார்.
சக்தி மிக்க நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், உயர் அதிகாரிகள், அரசர்கள் பிரபலங்கள், மற்றும் வியாபாரி களிடம் நெருக்க மாக இருந்தவர் இவர்.
தொண்ணூ றுகளில், வர்த்தகம், உளவு, அரசியல், சர்வதேச உறவுகள், ஆயுத கொள்முதல் விற்பனை போன்ற பல்வேறு நடவடிக் கைகளில் இவர் பெயர் அடிபடாமல் இருந்தது இல்லை.
அந்தக் காலக் கட்டத்தில், நேபாள த்தில் இருந்து பப்லு ஸ்ரீவாத்சவ் என்ற நிழலுலக தாதாவை சிபிஐ தில்லிக்கு அழைத்து வந்தது.
தாவூத் இப்ராஹிம் கும்பலுடன் தொடர் புடையவ ராக்க கருதப் பட்ட பப்லு ஸ்ரீவாத்ச விடம் விசாரணை நடத்தப் பட்டதில் சந்திர சுவாமி யுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.
அதன் பிறகு தொடர்ந்து எடுக்கப் பட்ட நடவடிக்கை களில் சந்திர சுவாமி கைது செய்யப் பட்டு, திஹார் சிறையில் அடைக்கப் பட்டார்.
பல ஆண்டு களாக ஊடகங் களின் பார்வைக்கு சிக்காமல் வாழ்ந்துவந்த சந்திரசாமி இன்று காலமானார்.