பாகிஸ்தானில் முதன் முறையாக மதத்தை பழிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி சிறு பான்மை (ஷியா) பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு தீவிர வாத தடுப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தா னின் பஞ்சாப் மாகாண காவல் துறையின் தீவிர வாத தடுப்புத் துறையினர் கூறும் போது, “லாகூரி லிருந்து சுமார் 200 கி.மீ. தொலை வில் உள்ள ஒகாரா நகரைச் சேர்ந்தவர் தைமூர் ரசா (30).
ஷியா பிரிவைச் சேர்ந்த இவர் இஸ்லாம் மதத்தை பழிக்கும் வகையில் முகநூலில் கருத்து தெரிவித் ததாக
இவருடன் பணி புரிந்த வர்கள் கடந்த ஆண்டு புகார் செய்தனர். இதன் அடிப்படை யில், இவர் கைது செய்யப் பட்டார்” என்றனர்.
இதை யடுத்து, தைமூர் ரசா மீது பஹவல்பூர் மாவட்ட தீவிரவாத தடுப்பு நீதி மன்றத் தில் வழக்கு தொடுக்கப் பட்டு விசாரணை நடை பெற்றது.
விசாரணை நடந்து முடிந்த நிலையில் தைமூருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி ஷபிர் அகமது கடந்த சனிக் கிழமை தீர்ப்பு வழங் கினார். இதற்கு வலதுசாரி அமைப் புகள் கடும் கண்டனம் தெரிவித் துள்ளன.
பாகிஸ்தானில் இணையதள- குற்றம் தொடர் பான வழக்கு களில் இது வரை வழங்கப் பட்ட தண்டனைக ளில் இது மிகவும் கடுமை யானது ஆகும்.
மேலும் மத நம்பிக் கையை பழித்த குற்றத்துக் காக ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப் படுவது இதுவே முதல் முறை ஆகும்.