தீ சென்னை சில்க்ஸ்... ஒரு திடுக் உண்மை !

தி. நகர் தீ நகரானது..! நெருக்கடி அங்காடி தெரு, நெருப்பு அங்காடித் தெரு ஆனது..! ட்ராபிக் ராமசாமி போன்றோரும்..சமூக ஆர்வலர்களும் பயந்தது நடந்தே விட்டது.
தீ சென்னை சில்க்ஸ்... ஒரு திடுக் உண்மை !
கடந்த சில வருடங் களுக்கு முன்பு சரவணா ஸ்டோரில் இதே போல ஒரு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு வேலை பார்த்த அப்பாவி ஊழியர்கள் இறந் தார்கள்.

சின்னஞ்சிறு கிராம த்துப் பெண்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அலறி ஓடி னார்கள். கடை சீல் வைக்கப் பட்டு இழுத்து மூடப் பட்டது.

ஆனால் எப்படியோ மீண்டு சில மாதங்க ளுக்குப் பிறகு கடையைத் திறந் தார்கள். இப்போது தி சென்னை சில்க்ஸ் தீ பற்றி யுள்ளது. மாடியில் உள்ள கேண்டீ னில் சிலிண் டர்கள் வெடித் துள்ளது.

இங்கு ஒரு கேள்வி. பொசுக் கென்று பற்றிக் கொள்ளும் துணிக் கடை களில் எதற்கு கேண்டீன் என்கிறார் பிரபா என்கிற மூத்த மனித ஆர்வலர்.
ஐந்து ஆறு ப்ளோர்கள் முழுக்க துணிகளும், பொம்மை களும், செருப்பு களும் நிறைந்தி ருக்கும் ஒரு ஜவுளி நிறுவ னத்தில் கேண்டீன் வைக்கவே கூடாது.

காரணம் தீப் பற்றும் பொரு ட்கள் நிறைந்த இடம் அது. அங்கு வாடிக்கை யாளர்களை சாப்பிட வைத்து அதிலும் காசு பார்க்கும் வியாபார நோக்கம் அது.

கல்யாணம் போன்ற விஷேசங் களுக்கு குடும்பம் சகிதமாக ஜவுளி எடுத்து விட்டு.. அங்கேயே ஆறஅமர அமர்ந்து ஜாலி யாகப் பேசிய படி காசைப் பார்க்காமல் 

ஆயிரக் கணக்கில் சாப்பிட்டு விட்டு போகட்டும் என்கிற லாப நோக்கில் தான் ஒவ்வொரு ஜவுளி கடைகளும் தங்களின் அடுக்கு மாடிக் கடைகளில் கேண்டீன் வைத்து காசு பார்க்கிறது.

ஒரு வேளை அப்படி கேண்டீன் வைத்தால் முறை யான பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்துள் ளார்களா என்பதை அதிகாரிகள் பார்வை இட வேண்டும்.

இங்கு பார்வை இட்டார்களா..பார்வை இட்டு காசு பார்த்தார் களா என்பது தெரிய வில்லை என்கிறார். நல்ல வேலை தீபாவளி போன்ற கூட்டம் குவிந்து கிடக்கும் நேரத்தில் இந்த விபத்து நடக்க வில்லை.
ஒரு வேளை நடந்தி ருந்தால் பதட்ட த்தில் மக்கள் ஓடுவதில் கூட நிறைய மரண அசம்பா விதங்கள் நடந் திருக்கும் என்கி றார்கள் சம்பவத்தை நேரில் பார்த்த சென்னை மக்கள்..!

காசு பாருங்க சாமிகளா.. கூடவே மக்களின் பாது காப்பையும் கொஞ்சம் பாருங்கள்…!
Tags:
Privacy and cookie settings