'தீ' தோண்ட தோண்ட அதிர்ச்சி - தி சென்னை சில்க்ஸ் | The 'fire' excavator dug - The Chennai Silks !

தீ விபத்திற் குள்ளான துணிக் கடை பகுதி அபாயகர மானதாக அறிவிப்பு, 100 க்கும் மேற்பட்ட கடைகள் மூடப் பட்டது. அலறி ஓடும் மக்கள்..!


சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்ட தீயை தொடர்ந்து 12 மணி நேரமாக போராடி யும் தீயை அணைக்க முடிய வில்லை.

புகையும் தொடர்ந்து வெளியேறி வருகிறது. தீயின் வெப்பம் காரண மாக கடையின் கண்ணா டிகளும் உடைந்து நொருங்கி வருகின்றன.

அடித் தளத்தில் தீ எரிந்து வருவதால் கட்டிட த்தின் ஸ்திரத் தன்மைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எந்த நேரமும் அந்த பிரமாண்ட கட்டிடம் அமெரிக்க இரட்டை கோபுரம் போல சரிந்து விழ வாய்ப்பி ருக்கிறது என்கி றார்கள் அச்சத்துடன் அதிகாரிகள்..!

தீயணைப்பு வீரர்களாலும் கடைக்குள் செல்ல முடிய வில்லை. கடையில் இருந்து ஊழிய ர்கள் அனை வரும் பத்திரமாக வெளியேற் றப்பட்டு ள்ளனர்.

இந்நிலை யில் தொடர்ந்து தீ எரிந்து வருவதால், அப்பகுதி அபாய கரமான பகுதியா கவும், இதனால் அப்பகுதி க்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறு த்தப்பட் டுள்ளது.

புகையால் 7 மாடி கட்டிடத்தின் உறுதி தன்மை பாதிக்கப் படலாம் என கூறப் படுகிறது. 5வது மாடி யின் முன் பகுதி வெப்பம் தாங்காமல் இடிந்து விழுந்தது. 

பாதுகாப்பு கருதி தீவிபத்து ஏற்பட்ட கடையை சுற்றி உள்ள 100 க்கும் மேற்பட்ட கடைகள் மூடப் பட்டு, அங்கு தங்கி இருக்கும் ஊழி யர்கள் வெளியேற் றப்பட்டு ள்ளனர்.

வாகனங் களும் மாற்று பாதை வழியாக திருப்பி விடப்பட் டுள்ளன. சென்னை ரங்க நாதன் தெரு மூடப் படுகிறது..! அப்பகுதி மக்கள் உயிரை கையில் பிடித்தபடி இருக்கி றார்கள்.

கட்டிடம் பல வழி களில் வரம்பு மீறி கட்டப் பட்டுள்ளது என்கி றார்கள். லஞ்சம் புகுந்து விளையாடி இருப்ப தால் துளியும் பயப் படாமல் இந்த கட்டிடம் விதிமீறல் களில் விளையாடி இருக்கிறது.

இன்னும் கட்டிட த்தில் தீ அணைக் கப்பட வில்லை. கட்டிடம் வெப்ப மிகுதி யால் எந்நேரமும் இடிந்து விழுந்து விடலாம் என்ற அச்சமும் எழுந்து ள்ளதாக அதி காரிகள் தெரிவிக் கின்றனர்.
Tags:
Privacy and cookie settings