கத்தார் மீது சக அரபு நாடுகள் விதித்துள்ள தடையால் அந்த நாடு பெரும் சிக்கலைச் சந்தித்துள்ளது. உணவுப் பொருட்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் உணவு விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
தீவிரவாதத்திற்கு கத்தார் உடந்தையாக இருப்பதாகவும், ஆதரவு தருவதாகவும் கூறி அந்த நாடு மீது சக அரபு நாடுகளான
சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை திடீரென தூதரக ரீதியிலான உறவுகளை துண்டித்து விட்டன. இந்த நாடுகளின் விமான சேவையும் கத்தாருக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் வளைகுடா பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. ஆனால் கத்தார் நாடு இந்த தடைக்கு அசைந்து கொடுப்ப தாக இல்லை. சமாளித்து வருகிறது.
கத்தாரில் பதட்டம்
அதே சமயம், கத்தாரில் வசிக்கும் வெளி நாட்ட வர்கள் மத்தியில் ஒரு விதமான பதட்டநிலை நீடிக்கிறது.
வழக்கமாக அசாதாரண சூழல் ஏற்பட்டால் நிலவும் பதட்டம் தான் இது. எனவே நிலைமை கட்டுக் குள்ளேயே இருக்கிறது.
உணவுப் பொருட்கள் பற்றாக் குறை
அதே சமயம், கத்தாரில் உணவுப் பொருட்கள் பற்றாக் குறை நிலவு கிறது. சவூதி உள்ளிடட் நாடுகளி லிருந்து வரும் உணவுகள் நின்று விட்டன.
விலை 3 மடங்கு உயர்வு
இதன் காரண மாக கத்தாரில் பால், காய்கறி உள்ளிட்ட பொருட் களின் விலை பல மடங்கு அதிகரித் துள்ளது. பலர் மொத்த மாக வாங்கி ஸ்டாக் வாங்கி வைத்த தால் தான் இந்த விலை உயர்வு என்கி றார்கள்.
ஆட்டுப் பால்
பசும்பால் பற்றாக் குறை இருப்ப தால் ஆட்டுப் பாலையும் அதிக அளவில் பயன் படுத்த ஆரம்பித் துள்ளனர். உள்ளூரில் ஆட்டுப் பால் உற்பத்தி இதனால் அதிகரித் துள்ளதாம்.
இந்தியா கை கொடுக்கிறது
தற்போதைய நிலை யில் இந்தியா, ஓமன், ஜோர்டான், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளி லிருந்து பால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள்
போதிய அளவில் வந்து கொண்டு ள்ளதாம். இதனால் கத்தார் அரசால் நிலையை சமாளிக்க முடிகிற தாம்.
இப்படியே நீடித்தால் சிரமம் தான்
தற்போது நிலைமை பதட்ட மாகத் தான் உள்ளது. சமாளிக்க கூடிய வகையி லும் உள்ளது. ஆனால் இது இப்படியே நீடித்தால் நிலைமை சிரமம் என்கி றார்கள்.
கட்டுமானத் தொழில்
தற்போது கட்டு மானத் தொழில் சற்று பாதிக்கப் பட்டுள்ளது. காரணம் பல்வேறு பொருட்கள் வராமல் முடங்கிக் கிடப்பதால். இதே போல மற்ற தொழில் களும் கூட பாதிப்பை சந்தித்து வருகின் றனவாம்.
Tags: